என் மலர்
நீங்கள் தேடியது "பணம்-பொருட்கள்"
- சட்டரை உடைத்து மர்ம மனிதர்கள் துணிகரம்
- பணம் மட்டுமின்றி, சி.சி.டி.வி. கேமரா, ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனர்.
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு கூட்டமாவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 54). இவர் புத்தன் சந்தை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல் ஓட்டலை அடைத்துச்சென்றார். மறுநாள் காலை ஸ்ரீகுமார் ஓட்டலை திறந்து உள்ளே வந்தார். அப்போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. இதனால் கடைக்குள் யாரோ வந்து சென்றிருப்பது தெரியவர, மேஜை டிராயரை பார்த்துள்ளார். அதில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகுமார் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டலின் பின்பக்க சட்டரை உடைத்து மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் பணம் மட்டுமின்றி, சி.சி.டி.வி. கேமரா, ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றையும் திருடி சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் குக்கி வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து மோப்பம் பிடித்து ஓடிய நாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை அருகே கடையின் ஓட்டை பிரித்து பணம்-பொருட்கள் திருடு போயின.
- டூப்ளிகேட் சாவி வைத்திருந்த கடை ஊழியர்கள் உள்பட பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
திருப்பரங்குன்றம், பாலாஜி நகரை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் ஜெய்ஹிந்த்புரம் நல்லமுத்து காலனியில் சாணை கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மர்ம நபர்கள் கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி, 10 பிளேட்டுகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஐசக் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி கொள்ளை அடித்தது எந்த கும்பல்? என்று தெரியவில்லை.
சாணை கடைக்கு டூப்ளிகேட் சாவி வைத்திருந்த கடை ஊழியர்கள் மாரியப்பன், சர்வீஸ் மைதீன் உள்பட பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.