search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ஒய்.சந்திரசூட்"

    • தலைமை நீதிபதி மோடியை அவரது இல்லத்தில் தனிப்பட்ட சந்திப்பிற்காகச் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது.
    • மதம் சார்ந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக சந்தித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய். சந்திரசூட். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று கணபதி பூஜை நடைபெற்றது. இந்த கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார்.

    பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி மகாராஷ்டிராவினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார். அத்துடன் பூஜை செய்து வழிபட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

    இந்தநிலையில் சமூக ஆர்வலரான பிரசாந்த் பூஷன், பிரதமர் மோடி, உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டிற்குச் சென்றது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக பிரசாந்த் பூஷன் கூறியதாவது:-

    தலைமை நீதிபதி சந்திரசூட் மோடியை அவரது இல்லத்தில் தனிப்பட்ட சந்திப்பிற்காகச் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. தலைமை நீதிபதி பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதுவும் மதம் சார்ந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக சந்தித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இந்த சந்திப்பு குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்குள் அரசு செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள நீதித்துறைக்கு மிக மோசமான சமிக்ஞையை அனுப்புகிறது. அதனால்தான் நிர்வாகத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும். எனது பார்வையில் இந்த சந்திப்பு நீதிபதிகளுக்கான விதிமுறையை மீறியதாகவும்.

    இவ்வாறு பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

    • பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை
    • பிரியங்கா, மாஹி ஆகியோரை அவர்கள் மகள்களாக தத்தெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தான் சமீபத்தில் சைவமாக மாறியுள்ளதகவும் மாறியதற்கான அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த வளாகத்தில் நரம்பியல் பிரச்சனை கொண்டவர்கள் தொடங்கிய கேன்டீனை திறந்து வைத்து சந்திரசூட் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், எனக்குப் பிரியங்கா, மாஹி என்ற இரண்டு மாற்றுத்திறனுடைய குழந்தைகள் இருக்கின்றனர். நான் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் அவர்கள் எனக்கு இனஷ்பிரேஷனாக உள்ளனர்.

     

    சமீபத்தில் நான் சைவமாக மாறினேன். எனது மகள் என்னிடம் வந்து, நாம் எதற்கும் கொடுமை செய்யாத வாழ்க்கையை வாழவேண்டும் என்று கூறியதே அதற்குக் காரணமாகும் என்று தெரிவித்தார், மேலும், தானும் தனது மனைவியும் பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை என்றும் சந்திரசூட் தெரிவித்தார்.

    சந்திரசூட் - ராஷ்மி தம்பதிக்கு அபினவ், சிந்தன் என்ற மகன்கள் உள்ள நிலையில் பிரியங்கா, மாஹி ஆகியோரை அவர்கள் மகள்களாக தத்தெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    • பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும்.
    • வழக்கறிஞர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

    நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் "அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு" மேலாக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து அண்மை காலங்களில் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கும் போக்கு கண்டு நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன்.

    நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது வழக்கறிஞர்கள் பொதுமக்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

    பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும். ஆனால், அவர்கள் அதற்கு மேல் சிந்திக்க வேண்டும். அவர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும்.

    செய்தித்தாள்கள், ஊடகங்கள் வழியாக நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது .

    இந்த வகையில், நீதிமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் ஆற்றல் வழக்கறிஞர்களுக்கு உள்ளது. சிக்கலான சட்ட கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளை பொதுமக்களுக்கு புரியும் படி எடுத்து சொல்வதன் மூலம் தான் நமது புரிதலை நாம் மேம்படுத்த முடியும்.

    எவ்வாறாயினும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.

    • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது.
    • சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்கிறார்.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகளும் முடித்து வைக்கப்பட்டன.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்க உள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதன்மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பார்.

    கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10 வரை தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

    • தற்போதைய தலைமை நீதிபதி நவம்பர் 8ந் தேதி ஓய்வு பெறுகிறார்.
    • புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் அடுத்த மாதம் பொறுப்பேற்கிறார்.

    உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8ந் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கான ஒப்புதலை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். நவம்பர் 9ந் தேதி முதல் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி ஒய் சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10ந் தேதி வரை தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

    ×