என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவி படுகாயம்"
- தற்போது மாநகர பகுதியில் மீண்டும் பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.
- ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் டவுன், தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் மொத்தம் 55 வார்டுகள் இருக்கின்றன.
இதில் பெரும்பாலான வார்டுகள் நகரின் மையப் பகுதியிலும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கூட்ட நெரிசலான இடங்களிலும் அமைந்துள்ளது.
இந்நிலையில் மாநகர பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சாலைகள் பரபரப்பாகவே இயங்கும்.
இந்த நிலையில் ஆங்காங்கே நாய்கள் மற்றும் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவை வாகனங்களில் மோதி விபத்துக்களை ஏற்படுத்தி வருவது தொடர் கதையாகி விட்டது.
சாலைகளில் திரியும் மாடுகளால் தொடர் விபத்துகளும், வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாநகராட்சி நிர்வாகித்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்ததன் பேரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அவ்வப்போது சிறை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது மாநகர பகுதியில் மீண்டும் பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு திருமால் நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த ஒரு மாடு அந்த வழியாக மொபட்டில் சென்ற கல்லூரி மாணவி ஸ்வதிகா மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி சாலையில் சில அடி தூரம் போய் விழுந்தார்.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து மாணவியை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகி இருந்தது. அவை தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாநகரில் கால்நடைகளால் விபத்து ஏற்படும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது தொடர்கதையாகி வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மாட்டின் உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
A college student riding a bike in Tirunelveli was injured after being unexpectedly hit by a cow standing on the road. pic.twitter.com/tVp78RV1bX
— Thinakaran Rajamani (@thinak_) October 23, 2024
- வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
- மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகள் ரித்திகா (வயது8) என்பவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி தனது வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த வகுப்பறையில் பழுதான மேற்கூரை கட்டிடம் இடிந்து மாணவியின் தலை மீது விழுந்தது. இதில் மாணவிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் அருகில் இருந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனே வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். பின்னர் நடந்த விபரத்தை கேட்டு அழுதபடியே மாணவியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பள்ளியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிகள் திறப்புக்கு முன்பு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிமாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயாராக செய்து கொடுக்க வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள், சுவர்கள் ஆகியவற்றை இடித்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டும் பெரும்பாலான பள்ளிகள் இதனை பின்பற்றுவதில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- அனிதா மீனா நேற்று இரவு வீட்டின் 2-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
- பலத்த காயம் அடைந்த அனிதாமீனாவுக்கு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். ரெயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் அனிதா மீனா (வயது8) தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அனிதா மீனா நேற்று இரவு வீட்டின் 2-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தாள். இதில் பலத்த காயம் அடைந்த அனிதாமீனாவுக்கு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.
- சிறுமி தொடர்ந்து வாந்தி எடுப்பதால் பெற்றோர் தரப்பில் விபத்து எப்படி நடந்தது என்று பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
சென்னை:
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகரில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மகள் சித்திமா (6). அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சிறுமி படிக்கட்டில் தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் தொடர்ந்து வாந்தி எடுப்பதால் பெற்றோர் தரப்பில் விபத்து எப்படி நடந்தது என்று பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமரா பதிவை தந்தால் மேல் சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
ஆனால் பள்ளி தரப்பில் சி.சி.டி.வி. கேமரா பதிவை தர விருப்பம் இல்லாமல் பல்வேறு காரணங்களை சொல்லி இழுத்தடிப்பதாக திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்