search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்"

    • ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளது.
    • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    இந்நிலையில் இந்திய அணி ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் பாகிஸ்தானும் டி20 உலகக் கோப்பைக்கான தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது.
    • இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது.

    இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஜெர்சி ஹெலிகாப்டரில் தொங்க விட்டு தரம்சாலாவில் உள்ள மைதானத்தில் வருவது போல வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை ரோகித் சர்மா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

    இதனை பார்த்த ரசிகர்கள் இந்திய ஜெர்சியிலேயும் காவியை கொண்டு வந்து விட்டீர்களா என ஆதங்கத்துடன் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதலில் இந்திய அணியின் பயிற்சி ஜெர்சியை காவி நிறமாக மாற்றினர். பின்னர் இந்திய ஜெர்சியை மாற்றி விட்டார்கள் எனவும் எதற்கு கொஞ்சம் கொஞ்சமாக காவியாக மாற்ற வேண்டும் முழுவதுமாக மாற்ற வேண்டியது தானே எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபேவை நான் பார்க்க விரும்புகிறேன்.
    • அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்றால், அவரை தாராளமாக பிளேயிங் லெவனில் எடுக்கலாம்.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இன்னும் சில தினங்களில் தங்கள் அணி வீரர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தூதுவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக யுவராஜ் சிங் இருந்தார்.

    இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது கிரிக்கெட் எதிர்காலங்கள் குறித்து யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டரான சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இருப்பார். ஏனெனில் அவரால் எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும்.

    அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். அதேபோல அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்றால், அவரை தாராளமாக பிளேயிங் லெவனில் எடுக்கலாம்.

    ஒருவேளை அவர் அணியில் இல்லாத பட்சத்தில் இளம் வீரர்களுக்கு அந்த வாய்ப்பினை வழங்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தற்சமயம் சிறப்பான ஃபார்மில் உள்ளதாக நினைக்கிறேன்.

    இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபேவை நான் பார்க்க விரும்புகிறேன். இந்த சீசனில் நிறைய இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், உலகக்கோப்பை அணியில் நான் ஷிவம் தூபேவை பார்க்க விரும்புகிறேன்.

    மேலும் அணியின் மூத்த வீரர்கள் என்னதான் தரமான ஃபார்மில் இருந்தாலும் அதை மறந்து, வயதின் அடிப்படையில் மூத்த வீரர்கள் மீது விமர்சனங்கள் எழும். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணியின் சிறந்த வீரர்கள். அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு குறித்த முடிவை அறிவிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    மேலும் மூத்த வீரர்கள் தொடர்ச்சியாக 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால், டி20 கிரிக்கெட்டில் அதிக இளம் வீரர்களை பார்க்க விரும்புகிறேன். அது அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை கட்டமைக்க உதவும். இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு, நிறைய இளைஞர்கள் அணிக்குள் வருவதையும், அடுத்த உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறுவதையும் பார்க்க விரும்புகிறேன்.

    என்று யுவராஜ் தெரிவித்துள்ளார்.

    • உலக டி20 கிரிக்கெட் போட்டி வருகிற ஜுன் 1-ந் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
    • இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

    உலக டி20 கிரிக்கெட் போட்டி வருகிற ஜுன் 1-ந் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஐசிசி 2024-ம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தூதராக ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் பல்வேறு சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் விளம்பரங்களில் இடம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து உசைன் போல்ட் கூறியதாவது:-

    கிரிக்கெட் எனது வாழ்வின் ஒரு அங்கமாகும். விளையாட்டு போட்டிகள் எப்போதும் எனது மனதில் சிறப்பு இடத்தை கொண்டுள்ளன.

    தற்போது எனக்கு ஒரு சிறந்த பதவி கிடைக்கப் பெற்றுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். பெருமை கொள்கிறேன். இந்த டி20 உலக கோப்பை போட்டிகளை உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடைய செய்ய என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன்.

    என அவர் தெரிவித்துள்ளார்.

    • சேவாக், ராயுடு தேர்வு செய்த அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை.
    • கீப்பராக ரிஷப் பண்டை சேவாக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை ராயுடுவும் தேர்வு செய்துள்ளனர்,

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், அம்பதி ராயுடு ஆகியோர் அறிவித்துள்ளனர். சேவாக் தேர்வு செய்த அணியில் சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. கீப்பராக ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.

    இதே போல ராயுடு தேர்வு செய்த அணியிலும் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவில்லை. கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார்.

    மேலும் சிவம் துபேவை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டும் என அஜித் அகர்கரிடம் சிஎஸ்கே அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேவாக் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-

    ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், சிவம் துபே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சந்தீப் சர்மா, முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா.

    அம்பதி ராயுடு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி:-

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரியான் பராக், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக், சிவம் துபே, மயங்க் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, சாஹல், ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ். 

    • கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது.
    • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் சேர்க்கபட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

     இது குறித்து அவர் கூறியதாவது:-

    யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் நிரந்தரமானது என்பதற்கு சான்றாகும். ஃபார்ம் தற்காலிகமானது. மேலும் கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி எந்த விவாதமும் இருக்கக்கூடாது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் இடம் பெற வேண்டும். ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக அவரை வளர்த்தெடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார். 

    • குட்டி ரசிகர் ஒருவர் கையில் பாதகையை ஏந்தியபடி ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
    • இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முல்லாப்பூர்:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி முதலில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை போராடியது.

    இறுதியில் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 183 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை சுவைத்தது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியில் குட்டி ரசிகர் ஒருவர் கையில் பாதகையை ஏந்தியபடி ரோகித் சர்மாவுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த பாதகையில் ரோகித் ஓவியம் வரையப்பட்டு இருந்தது. மேலும் அதில் எங்களுக்கு ஐபிஎல் கோப்பை வேண்டாம் டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்தால் போதும் என கூறப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • குரூப் 12 சுற்றில் வாழ்வா? சாவா? போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.
    • அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது.

    டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்றது. கத்துக்குட்டி அணிகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை? என்பது கடைசி லீக் ஆட்டம் வரை பரபரப்பாகவே சென்றது.

    ஒன்றிரண்டு ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் சில அணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. குறிப்பாக குரூப் 1-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இடம் பிடித்திருந்தால் அரையிறுதி போட்டிக்கு முன்னேற கடும் போட்டி நிலவியது.

    முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து வீழ்த்தியது, ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ஆகியவற்றின் மூலம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்குள் போட்டி நிலவியது.

    மேலும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழையால் இங்கிலாந்து வெற்றி பறிக்கப்பட்டது. இது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆனால், ஆஸ்திரேலியா போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஒரு புள்ளி கிடைத்ததால் சற்று மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    குரூப் 1-ன் கடைசி லீக்கில் இங்கிலாந்து இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் தேர்வு செய்தார்.

    முதலில் பேட்டிங் செய்த இலங்கை 141 ரன்கள் சேர்த்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அலேக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ரன்களும் அடிக்க 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பட்லர் மீண்டும் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்தது, பட்லர் 49 பந்தில் 80 ரன்களும், ஹேல்ஸ 47 பந்தில் 86 ரன்களும் சேர்த்தனர்.

    நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் பட்லர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானால் 137 ரன்களே அடித்தது. பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடிக்க இங்கிலாந்து 19 ஓவரில் இலக்கை எட்டி 2-வது முறையாக கோப்பையை வென்றது.

    கடைசி மூன்று வாழ்வா? சாவா? ஆட்டங்களில் ஆசிய அணிகள் துவம்சம் செய்து இங்கிலாந்து கம்பீரமாக கோப்பையை வென்று சொந்த நாடு திரும்பியுள்ளது.

    • கடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி இந்தியாவை வீழ்த்தியது
    • உண்மையிலேயே, 1992 உலகக் கோப்பை சூழ்நிலையுடன் தற்போதைய நிலை ஒத்துப்போகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இங்கிலாந்து வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ''இந்த ஞாயிறு 152/0 vs 170/0'' என ட்டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் தொடக்க சுற்றில் பாகிஸ்தானை இந்தியா விக்கெட் இழப்பின்று 152 ரன்கள் எடுத்து வீழ்த்தியது. தற்போது நடைபெற்று வரும் தொடரில் இங்கிலாந்து இந்தியாவை விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வீழ்த்தியது.

    இதை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ட்வீட் செய்திருந்தார். நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டி குறித்து இன்று பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பேட்டியளித்தார்.

    அப்போது, பாகிஸ்தான் பிரதமர் ட்வீட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பாபர் ஆசம் அளித்த பதில் பின்வறுமாறு:-

    அவரது டுவிட்டால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால் சொல்வதற்கு மன்னிக்கவும், நான் அவரது டுவிட்டை பார்க்கவில்லை. ஆகவே, அது குறித்த அறிவு இல்லை. ஆனால், நாங்கள் எதிரணிக்கு எதிராக எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்.

    உண்மையிலேயே, 1992 உலகக் கோப்பை சூழ்நிலையுடன் தற்போதைய நிலை ஒத்துப்போகிறது. நாங்கள் கோப்பையை வெல்ல முயற்சி செய்வோம். இது எனக்கு மிகப்பெரிய கவுரவம். அணியை வழி நடத்தும் எனக்கு குறிப்பாக இந்த பெரிய மைதானத்தில் வெல்வது சிறந்த தருணம். எங்களுடைய 100 சதவீத முயற்சி வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம். நாங்கள் தொடக்கத்தில் சரியாக விளையாடவில்லை. அதன்பின் சிறந்த முறையில் கம்-பேக் ஆனோம். பாகிஸ்தான் வீரர்கள் புலி போன்று போரிட்டனர். அங்கேயிருந்து தொடர்ந்து எங்கயுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த பார்ப்போம்'' என்றார்.

    • ஆஸ்திரேலியாவில் டாஸ் வென்று அணிகளுக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் சாதகமாக அமைந்திருக்கலாம்.
    • நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து தோல்வியை தழுவியது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நேற்றுடன் குரூப் ஆட்டங்கள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    முதல் அரையிறுதியில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளும், 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டி20 போட்டியை பொறுத்த வரையில், டாஸ் முக்கியத்துவம் பெறும். போட்டி இரவில் நடப்பதால் பனித்துளி ஆதிக்கம் செலுத்தும். இதனால், 2-வது பந்து வீசும் அணிக்கு பாதகமாக இருக்கும். இதனால் டாஸ் வென்றாலே கண்ணை மூடிக்கொண்டு கேப்டன்கள் பந்து வீச்சைதான் தேர்வு செய்வார்கள்.

    இதற்கு உதாரணம் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த உலகக் கோப்பையை சொல்லலாம். டாஸ் வென்ற அணிகளே பெரும்பாலும் வெற்றி பெற்றன.

    இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டாஸ் தோற்றதுடன் போட்டியில் தோல்வியடைந்து தொடக்க சுற்றோடு வெளியேறியது.

    தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவில் டாஸ் வென்று அணிகளுக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் சாதகமாக அமைந்திருக்கலாம்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதும் அடிலெய்டு முற்றிலும் மாறுபட்ட முடிவுகளை கொடுத்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் ஆறு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதற்கு முன் ஐந்து போட்டிகளில் முடிந்துள்ளன. இந்த 11 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி தோல்வியை தழுவியுள்ளது.

    நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து தோல்வியை தழுவியது. பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து தோல்வியை தழுவியது.

    இதனால் 10-ந்தேதி (வியாழக்கிழமை) மோதும் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின்போது, அப்போதும் டாஸ் வென்றேயாக வேண்டும் என நினைக்கும் கேப்டன்கள், இந்த போட்டியில் டாஸ் வெல்லக் கூடாது என நினைக்கலாம்.

    என்ன இருந்தாலும், அன்றைய தினம் யாருக்கு சிறந்த நாளாக அமைகிறதோ, அவர்களே வெற்றி வாகை சூடுவார்கள்.

    • இலங்கை தரப்பில் துஷ்மந்த சமீரா, ஹசரங்கா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
    • ஐக்கிய அரபு அமீரக வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தொடக்க சுற்று போட்டி 2வது ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட் அணிகள் விளையாடின. மெல்போர்ன் நகரில் உள்ள கீலாங் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிசாங்க 60 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். தனஞ்செய டி செல்வா 33 ரன்னும், குசால் மெண்டிஸ் 18 ரன்னும் அடித்தனர். ஐக்கிய அரபு அமீரக அணி சார்பில் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

    பின்னர் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி வீரர்கள் இலங்கை பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்கள் சாய்ந்த நிலையில் 17.1 ஓவர் முடிவில் அந்த அணி 73 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் துஷ்மந்த சமீர, ஹசரங்க டி சில்வா தலா 3 விக்கெட்களையும், தீக்சனா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். லியனகமகே,தசுன் ஷனக தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    • இலங்கை வீரர் நிசாங்க 74 ரன்கள் குவித்தார்.
    • ஐக்கிய அரபு அமீரக வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

    கீலாங்:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தொடக்க சுற்று போட்டி 2வது ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட் அணிகள் விளையாடி வருகின்றன. மெல்போர்ன் நகரில் உள்ள கீலாங் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

    அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிசாங்க 60 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். தனஞ்செய டி செல்வா 33 ரன்னும், குசால் மெண்டிஸ் 18 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னும் வெளியேறினர். இதில் ஐக்கிய அரபு அமீரக அணி வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 15வது ஓவரை வீசிய அவர் அந்த ஓவரில் பனுகா ராஜபக்ச ,சரித் அசலங்கா ,தசுன் ஷானகா ஆகியோரின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஜாகூர்கான் 2 விக்கெட்களையும், அப்சல்கான், ஆர்யன் லக்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி விளையாடி வருகிறது.  

    ×