என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரிகள்"
- கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினம் குறித்து விதிகளை மீறி தெரிவித்து வருவதாக புகார்கள் வந்தது.
- 2 ஆஸ்பத்திரிகளையும் இன்று மூடாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சேலம்:
சேலம் வீராணம் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே பசுபதி ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த ஸ்கேன் சென்டரில் கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினம் குறித்து விதிகளை மீறி தெரிவித்து வருவதாக புகார்கள் வந்தது.
கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 26-ந் தேதி அந்த ஸ்கேன் சென்டரில் ஆய்வு செய்தனர். அப்போது ஆச்சங்குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய நர்சு கலைமணி ஆகிய 2 பேரும் இந்த கிளினிக்கை நடத்தி வந்ததை உறுதி செய்தனர்.
மேலும் பல ஆண்டுகளாக ரகசியமாக பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என்று கண்டறிந்து ஸ்கேன் செய்ததும் அதற்கு கட்டணமாக ரூ. 15 ஆயிரம் வரை இடைத்தரர்கள் மூலம் பெற்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த ஸ்கேன் பரிசோதனை மையத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் ஸ்கேன் பரிசோதனை கருவிகளை பறிமுதல் செய்த மருத்துவ குழுவினர் அந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக பெண் டாக்டர் முத்தமிழ், தெடாவூரை சேர்ந்த நர்சு கலைமணி, சேலத்தை சேர்ந்த நர்சு அம்பிகா, ஆத்தூர் பகுதியை சேர்ந்த நர்சுகள் வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலை செல்வி, மகேஸ்வரி ஆகிய 9 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மேலும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பசுபதி ஸ்கேன் சென்டரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதனை கலைக்க சேலத்தில் உள்ள 3 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பியதும் சுகாதாரத்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட இணை இயக்குனர் நந்தினி தலைமையில் விதிமுறையை மீறி செயல்பட்ட சேலம் டவுன் மேட்டுத்தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பொன்னம்மா ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, பெரிய புதூரில் உள்ள ஒரு கிளினிக் ஆகிய 3 இடங்களிலும் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அந்த மருத்துவமனைகளில் விதிமுறையை மீறி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. அந்த மருத்துவமனைகளில் கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்களை எடுத்து சென்று அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்தனர். அதில் இதுவரை எத்தனை பெண்களுக்கு விதிமுறைகளை மீறி கருக்கலைப்பு செய்தனர் என்பது தொடர்பாக ஆய்வு செய்தபோது 3 ஆஸ்பத்திரிகளிலும் 100-க்கும் மேற்பட்டோருக்கு விதிமுறைகளை மீறி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து சேலம் டவுன் மேட்டுத்தெரு மற்றும் பொன்னம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளை மூடவும், பெரிய புதூரில் உள்ள கிளினிக் அனுமதியில்லாமல் செயல்பட்டதால் அது குறித்து விளக்கம் அளிக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து 2 ஆஸ்பத்திரிகளையும் இன்று மூடாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை கண்டு கொள்ளாத ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தொடர்ந்து ஆஸ்பத்திரியை திறந்து வைத்து சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- விசாரணையில் இவர் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
- இவர்களிடமிருந்து 10 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சித்திரவேல்,பார்வதி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
குழித்துறை, அக்.20-
குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையங்களில் பெண்களை குறி வைத்து நூதன முறையில் ஒரு கும்பல் நகை, பணத்தை பறித்து சென்றது.
இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த கொள்ளையர்களைப் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரராஜ், மகேஷ் தலைமை காவலர் ரெஜிகுமார்,சேம்,பிஜு ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நடத்திய விசாரணையில் குமரி மாவட்டத்தில் கைவரிசை காட்டியது மதுரை எலைட் நகர் போடிலைன் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் (வயது40) அவரது மனைவி பார்வதி (38) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் குழித்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர் குமரி மாவட்டம் மட்டுமின்றி சென்னை, அறந்தாங்கி, பாண்டிச்சேரி, கூடலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அரசு ஓய்வூதியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பெண்களிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
இவர்களிடமிருந்து 10 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சித்திரவேல்,பார்வதி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்த
னர்.