search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாளம் தெரியாத"

    • காவிரி ஆற்றில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வேலூர் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இறந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்து கிடந்த நபர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட், மஞ்சள் நிறத்திலான சட்டை அணிந்திருந்தார். அவரது கையில் மஞ்சள் நிற கயிறும், வலது கையில் பச்சை, வெள்ளை கலந்த நிறத்திலான மோதிரம் அணிந்திருந்தார்.

    • அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நடந்து வந்துள்ளார்.
    • மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடியை அடுத்த காரணாம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இந்த நிழற்குடையை நோக்கி சம்பத்தன்று காலை 10 மணிக்கு அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து வந்துள்ளார்.

    பின்னர் நிழற்குடையின் பின்புறம் உள்ள திட்டில் அவர் படுத்திருந்துள்ளார். பின்னர் அவர் இறந்து கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மலையம் பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்தவர் 50 வயது மதிக்கத்தக்க நிலையிலும், வலது கை மணிக்கட்டில் சிவப்பு கயிறு அணிந்தும், கருப்பு கலர் சட்டையும், பச்சை கலரில் வேட்டியும் அணிந்திருந்தார். யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கந்தசாமி மொபட்டில் ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
    • அப்போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார்

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுக்கரை புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (50). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மகனை அழைத்து வருவதற்காக மொபட்டில் புதுக்கரை புதூரில் இருந்து பொலவக்காளி பாளையம் பகுதியில் சென்றார்.

    அப்போது ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கந்தசாமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அப்போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடையாளம் தெரியாத வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து நால்ரோடு டானா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (42). இவர் பால் சொசைட்டி நடத்தி வருகிறார்.

    இவர் பால் எடுத்து வருவதற்காக நால் ரோட்டில் இருந்து செல்லப்பம்பாளையத்திற்கு கோவை ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது அந்த வழியாக அடையாளம் தெரியாத வந்த வாகனம் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு சுகுணா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இருக்கூர், வலசுப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கிணற்றில் சடலமாக மிதந்தவர் சுமார் 26 வயது நிரம்பிய வட மாநில வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் அடிப்படை யில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர்.

    பின்னர் ஆம்பு லன்ஸ் மூலம் பிரேதத்தை பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர். இதில், கிணற்றில் சடலமாக மிதந்த வர் சுமார் 26 வயது நிரம்பிய வட மாநில வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.

    இவர் எங்கு வேலை பார்த்து வருகிறார்? எதற்காக இப்பகுதிக்கு வந்தார்? எப்படி கிணற்றில் விழுந்தார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? என்பது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று விட்டு ஈரோடு நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.
    • வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    மொடக்குறிச்சி, 

    ஈரோடு பெரிய வலசு அடுத்த திலகர் வீதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் சக்திவேல் (21). மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள காலனி தெரு பகுதியைச் சேர்ந்த காட்டு ராஜா மகன் ராமன் (25). இருவரும் ஈரோட்டில் மெடிக்கல் துறையில் மார்க்கெட்டிங் பணியாளராக பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் மொடக்குறிச்சியில் தனது சொந்தப் பணிகள் காரண மாக இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று விட்டு ஈரோடு நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.

    இருசக்கர வாகனத்தை ராமன் ஓட்டி வந்தார். பின் பகுதியில் சக்திவேல் அமர்ந்து வந்தார்.அப்போது சின்னியம்பாளையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சக்திவேலும், ராமனும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் இருவரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி பலியானார்.ராமன் லேசான காயத்தோடு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து உறவி னர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மொடக்கு றிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ராமாத்தாள் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை, ஈரோடு ரோடு வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ராமாத்தாள் (வயது 74). இவர் தனது பேத்தியின் வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ராமாத்தாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சம்பவத்தன்று மாலை ஜெயலட்சுமி சோலார் புதூர் புது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே சோலார் புதூர் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கண்ணன், காளிதாஸ் என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஜெயலட்சுமி சோலார் புதூர் புது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஜெயலட்சுமியின் உறவினர்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    மேலும் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சிக்குட்பட்ட காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    நள்ளிரவில் நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் பண்ணை அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×