search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "200 கிலோ"

    • கோபிசெட்டிபாளையம் எருமைக்காரபாளையம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் எருமைக்காரபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புல னாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெ க்டர் பன்னீர் செல்வம் தலைமையில் அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அவ்வழி யாக சந்தேகப்படும்படியாக ஆம்னி கார் ஒன்று வந்தது.

    காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (35) என்பதும், ரேஷன் அரிசியை வடமாநிலத்த வர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியும், கடத்த லுக்கு பயன்படு த்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ரேசன் அரிசியை நாகர்கோவில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
    • குளச்சல் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஏட்டு வில்சன் ஆகியோர் குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனர். சைமன்காலனி பாலம் அருகில் செல்லும்போது அங்கு ஒரு மறைவான இடத்தில் சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 200 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    உடனே அவர்கள் அரிசி மூடைகளை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் ரேசன் அரிசியை நாகர்கோவில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ×