என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவேகானந்தா கல்லூரி"
- வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழா சிறப்புரையாற்றுகிறார்.
- தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்:
கற்பித்தலில் புதுமையை புகுத்தியும் மற்றும் தொழில் நுட்ப திறனை பயன்படுத்தி கற்பித்தலை செய்யும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருது வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவில் 380 பேருக்கும் விருதுகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி விழா பேருரையாற்றுகிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழா சிறப்புரையாற்றுகிறார்.
பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி வரவேற்று பேசுகிறார். பள்ளி கல்வி துறை அரசு செயலாளர் குமரகுருபரன் திட்ட விளக்க உரையாற்றுகிறார். மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமை உரையாற்றுகிறார். எம்.பி.க்கள் ராஜேஷ்குமார் சின்ராஜ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றுகிறார்கள். விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் நன்றி கூறுகிறார்.
இந்த விழாவில் விருது பெறுபவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் வகையில் தங்கும் இடம், உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் மணி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
- முடிவில் ஐந்தமிழ் ஆய்வுமன்ற செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
என்.ஜி.ஓ.காலனி :
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தின் 19-வது தேசிய கருத்தரங்கம் தமிழ்த்துறை சார்பில் கல்லூரி பொறுப்பு முதல்வர் டி.எஸ். ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த்துறை தலைவர் இளங்குமார் வரவேற்றார். கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் மணி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவர் கருணாகரன் தலைமையுரையாற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன் ஆய்வு சிந்தனைகள் என்னும் ஆய்விதழை வெளியிட பொருளாளர் சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
வழக்கறிஞர் ஞானசேகரன் மற்றும் கல்லூரி ஆட்சி மன்ற துணை தலைவர் சந்திரமோகன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஆனந்த், ஆதிமகாலிங்கம் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ஐந்தமிழ் ஆய்வுமன்ற செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
- தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்பட்டன
- விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
என்.ஜி.ஓ.காலனி :
அகஸ்தீஸ்வரம் மற்றும் தென்தாமரைகுளம் பேரூராட்சிகளுக்குட்பட்ட தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்பட்டன. இதனைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபுமாறச்சன் தலைமை தாங்கினார். பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் காமராஜ் மற்றும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவேகானந்தா கல்லூரியின் செயலாளர் ராஜன் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மணிக்கண்ணன், ராஜதுரை, அஜந்தன், தங்கசாமி, சந்திரன், மாலைசூடும் பெருமாள் உட்பட மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- சுவாமிதோப்பு குரு மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்
- விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
என்.ஜி.ஓ.காலனி :
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய மாணவர் படை கடற்படை பிரிவு தொடக்க விழா கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமையில் நடந்தது. கல்லூரி தலைவர் மணி குத்துவிளக்கு ஏற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன், பொருளாளர் சுப்பிரமணியம், துணை தலைவர் சந்திரமோகன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அதிமஹாலிங்கம், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுவாமிதோப்பு குரு மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரியில் தேசிய மாணவர் படை கடற்பிரிவை தொடங்கி வைத்தார். மேலும் கல்லூரியில் என்.சி.சி. அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஜான் ரஸ்கின், தமிழ்த்துறை தலைவர் இளங்குமார், வணிகவியல் துறை தலைவர் தர்ம ரஜினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பேராசிரியர் சுரேஷ் வரவேற்று பேசினார். முடிவில் என்.சி.சி. கடற்படை அதிகாரி பேராசிரியர் பிரபுமாறச்சன் நன்றி கூறினார்.
பேராசிரியர் கவியரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரி பொதுக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவ, மாணவிகள், என்.சி.சி. அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
- தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணைபேராசிரியர் ஆதித்தன் கையெழுத்து சுவடிகளும், வரலாற்று புனரமைப்பும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
- கத்தார் நாட்டின் பிர்லா பொதுப்பள்ளி ஆசிரியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நாட்டார் கலைகள் குறித்து உரையாற்றினார்.
கன்னியாகுமரி:
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் தமிழ் நாட்டார் கலைகளும், வரலாற்று புனரமைப்பும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் கே.எஸ். மணி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பொருளாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் இளம்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜசேகர் தலைமை உரை ஆற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன் மற்றும் கல்லூரி அகதர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.சி.மகேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணைபேராசிரியர் ஆதித்தன் கையெழுத்து சுவடிகளும், வரலாற்று புனரமைப்பும் என்னும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து கத்தார் நாட்டின் பிர்லா பொதுப்பள்ளி ஆசிரியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நாட்டார் கலைகள் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் லட்சுமணன் கலந்து கொண்டார். கருத்தரங்கத்தை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ் துறை பேராசிரியை டாக்டர் பொன்மலர் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் டாக்டர் கவியரசு, செந்தில்குமார், ராமகுமார், ரத்னாகரன், கார்மல் சர்மிளா, சாந்தினி, சிவபிரசாத், சைலா , ஷீலா பெனடிக், ஜெஸ்ஸி, சுதர்சன் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்