என் மலர்
நீங்கள் தேடியது "அசோகா அல்வா"
- நன்கு குழையும் வண்ணம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:
பயற்றம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 3 கப்
கோதுமைமாவு - 1/4 கப்
நெய் - 2 கப்
முந்திரி கொஞ்சம்
கேசரி பவுடர் கொஞ்சம்
செய்முறை:
• பயற்றம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, குக்கரில் நன்கு குழையும் வண்ணம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
• பிறகு சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுக்கவும். சிறிது எண்ணெய்யில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்.
• கோதுமையுடன் வேக வைத்த பருப்பு, சக்கரை, கேசரி பவுடர் சிறிதளவு, சேர்த்து கிளரவும்.
• நன்கு சுருண்டு வந்தவுடன் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம்.
- பண்டிகைக்கு பொருட்களான புத்தாடைகள், இனிப்புகள், வகைகளில் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
- தீபாவளிப் பண்டிகையை ஆண்டவர் கடை அசோகா, அல்வாவுடன் கொண்டாடுவதற்காக மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
திருவையாறு:
வருகிற 24ந்தேதி தீபாவளிப் பண்டிகை பொதுமக்களால் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு திருவையாறு வணிக நிறுவனங்களில் இப்பண்டிகையில் படைக்கும் பொருட்களான புத்தாடைகள், இனிப்புகள், கண்ணைக் கவரும் பல்வேறு வகைகளில் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
திருவையாறில் பாரம்பரியமாக உள்ள ஆண்டவர் அல்வாக் கடையியில். உலக நாடுகள் வியந்து போற்றப்டும் பாசிப்பருப்பு அசோகாவும், கோதுமை அல்வாவும் தயாரிக்கப்பட்டு ஏழை மக்களும் வாங்கிப் பயனடையக் கூடிய குறைந்த விலை பாக்கெட்டுகளில் அடைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், தீபாவளிப் பண்டிகையை ஆண்டவர் கடை அசோகா, அல்வாவுடன் கொண்டாடுவதற்காக மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும், இதர இனிப்பு மற்றும் கார வகைப் பட்சணங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் இனிப்புக் கடைகளில் லட்டு, ஜாங்கிரி, மைசூர் பாகு, பால்கோவா முதலிய கண்கவரும் வண்ணங்களிலும் நாவூறும் சுவைகளிலும் தீபாவளியை முன்னிட்டு பிரத்யேகமாக தயாரித்து மிகக் குறைந்த விலையிலான அளவுகளில் அட்டைப்பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
திருவையாறில் பாரம்பரி யமாக நடக்கும் மகாத்மா காந்தியின் அறக்கட்டளை நிறுவன மான சர்வோதய சங்கம் மற்றும் தனியார் ஜவுளி நிறுவனங்களில் தீபாவாளிக்காக சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான புத்தாடைகள் தருவிக்க ப்பட்டு விற்கப்படுகிறது.
உள்ளூர் தயாரிப்பு பபட்டாசுளும் சிவகாசி முதலிய வெளியூர் தயாரிப்புப் பட்டாசுகளும் திருவையாறு கடைத்தெ ருவில் விற்பனை செய்ய ப்படுகிறது.