search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேவன் கான்வே"

    • டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காக இந்த முடிவு எடுத்துள்ளார்.
    • நியூசிலாந்து டெஸ்ட் அணிக்காக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்து அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேன் டேவன் கான்வே. இவர் நியூசிலாந்து அணியுடன் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட மறுத்துள்ளார். உலகளவில் நடக்கும் பெரும்பாலான டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த முடிவை எடுத்து உள்ளார்.

    ஆனால் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டி மற்றும் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகியது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் இந்த நேரத்தில் சிறந்தது என நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே கேன் வில்லியம்சன், பெர்குசன் போன்ற முன்னணி வீரர்கள் இதே முடியை எடுத்துள்ளனர். இந்த பட்டியலில் தற்போது கான்வே இணைந்துள்ளார்.

    மற்றொரு பேட்ஸ்மேனான பின் ஆலன் இதே முடிவை எடுத்து உள்ளார். ஆனால் நியூசிலாந்து இது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை.

    நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை என்றால் நியூசிலாந்து அணிக்காக ஒரு வீரர் விளையாட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வெளிநாட்டில் எந்த ஒரு லீக் போட்டிகளிலும் விளையாடலாம். லீக் போட்டியில் அதிக வருமானம் கிடைப்பதாலும், குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வெண்டியதில்லை என்பதாலும் பெரும்பாலான வீரர்கள் தற்போது இந்த முடிவை எடுத்து வருகிறார்கள்.

    டேவன் கான்வே ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    • கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக டேவன் கான்வே 672 ரன்கள் குவித்தார்.
    • சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், டேவான் கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக டேவன் கான்வே தனது, கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால், வரும் மார்ச் 22-ம் தேதி ஆரம்பமாகும் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில், நியூசிலாந்து அணியின் இடதுகை தொடக்க ஆட்டக்காரரான கான்வேவின் கட்டைவிரலின் காயம் ஏற்பட்டது. இதற்காக வரும் வாரம் அவர் அறுவை சிகிக்சை மேற்கொள்ள இருப்பதாகவும், 8 வாரங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக நியூசிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மே மாதம் வரை அவர் கிரிக்கெட் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    ஐ.பி.எல் 2024 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    ஐ.பி.எல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.

    கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக டேவன் கான்வே 672 ரன்கள் குவித்தார். இந்நிலையில் சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், டேவன் கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் கான்வே அதிரடியாக ஆடி 92 ரன்கள் குவித்தார்.

    சிட்னி:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. கான்வே 92 ரன்களுடனும், நீஷம் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.1 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார்.

    இதன்மூலம் நியூசிலாந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, சான்ட்னர் தலா 3 விக்கெட்டும், டிட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×