என் மலர்
நீங்கள் தேடியது "காற்றின் தரம்"
- டெல்லி துணை நிலை ஆளுனர் மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தினார்
- காற்று மாசு ஒரு தேசிய அவசர நிலை என்கிறார் டாக்டர். அர்விந்த் குமார்
புது டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகப்படியான மாசு ஏற்பட்டதன் விளைவாக காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளது.
காற்றின் தர குறியீடு 500 எனும் அளவை தாண்டியதால், இது அபாயகரமானதாக கருதப்படுகிறது.
இதனால் பல உடலாரோக்கிய சிக்கல்கள் ஏற்படும் என்பதால் டெல்லி துணை நிலை ஆளுனர் வி.கே. சக்சேனா, பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறித்தி உள்ளார்.
இந்நிலையில், அதிகரிக்கும் காற்று மாசு குறித்து டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள மெதாந்தா மருத்துவமனையின் நுரையீரல் துறை சிறப்பு மருத்துவர் டாக்டர். அர்விந்த் குமார் கருத்து தெரிவித்தார்.
அவர் இது குறித்து கூறியதாவது:
ஏர் ப்யூரிஃபையர் (air purifier) எனப்படும் காற்றை சுத்திகரிக்கும் சாதனங்கள் தற்போதைய சூழலுக்கு ஒரு தீர்வு அல்ல. காற்று மாசு ஒரு பொது சுகாதார பிரச்சனை. வீட்டிற்கு வெளியே உள்ள காற்றின் தரத்திற்கான குறியீடு 500 எனும் அளவில் இருந்தால், சுத்திகரிக்கும் சாதனங்கள் அதை 15 அல்லது 20க்கு கொண்டு வராது. காற்றின் தரம் குறைந்துள்ள நாடுகளில் பெண்களுக்கு மார்பக புற்று நோய் அதிகம் வருவதாக சில தினங்களுக்கு முன் ஐரோப்பாவிலிருந்து வந்த ஆய்வு தெரிவிக்கிறது. பல குழந்தைகள் அகாலமாக உயிரிழக்கவும் இது காரணமாகிறது. சிகாகோ பல்கலைக்கழக ஆய்வு வட இந்தியாவில் மக்கள் தங்கள் வாழ்நாளில் 10 வருடங்களை இழக்கிறார்கள் என தெரிவிக்கிறது. இது ஒரு தேசிய அவசர நிலை. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அனைத்து உடல் உறுப்புகளையும் தரங்குறைந்த காற்று பாதிக்கும். எளிதாக இது ஆஸ்துமா நோய் வர வழிவகுக்கும். டெல்லியில் 1100 குழந்தைகளை ஆய்வு செய்ததில் 3 பேரில் 1 குழந்தை எனும் விகிதத்தில் ஆஸ்துமா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அனைத்து வயதினரையும் இது பாதிக்கிறது. தாயின் வயிற்றில் உள்ள சிசுக்களையும் இது பாதிக்கிறது. சுமார் 25 சிகரெட் புகைத்தால் வரும் நுரையீரல் நோய்கள், காற்று மாசு காரணமாக புகை பிடிக்காதவர்களுக்கும் வர கூடும்.
இவ்வாறு டாக்டர். அர்விந்த் கூறினார்.
- அரசு அனுமதித்த நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர்.
- காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகள் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் காற்று மாசு அளவு வழக்கத்தைவிட மோசமாக உள்ளது. சென்னையில் நேற்று காற்று மாசு 170ஆக இருந்த நிலையில், விடிய வடிய வாணவேடிக்கை நடந்ததால் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து தரக்குறியீடு 200ஐ கடந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301ஆகவும், அரும்பாக்கத்தில் 260ஆகவும், ஆலந்தூரில் 256ஆகவும், ராயபுரத்தில் 227ஆகவும் பதிவாகியுள்ளது.
பட்டாசு வெடிக்க அரசு தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர்.
காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காற்று மாசு அதிகரிப்பு எதிரொலியால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காற்றின் தரக்குறியீடு 101-200 என்றால் நுரையீரல், ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.
- 401- 500 என்றால் ஆரோக்கியமான மக்களை பாதிக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாக பாதிக்கும்.
இந்திய நகரங்களில் பலவற்றில் காற்று மாசுபாடு அதிகரிப்பதையும், அதைத் தொடர்ந்து காற்றின் தரம் குறைவதையும் காண்கிறோம். இதுபோன்ற நேரங்களில் பலர் தாங்கள் இருக்கும் நகரத்தை விட்டு சிறந்த காற்றின் தரம் உள்ள இடங்களுக்கு பயணம் செய்ய விரும்புகிறர்கள்.
காற்றின் தரக் குறியீடு 0-50 இருந்தால் குறைந்தபட்ச தாக்கம், 51-100 என்றால் உணர்திறன் உள்ளவர்களுக்கு சிறிய சுவாசக் கோளாறு, 101-200 என்றால் நுரையீரல், ஆஸ்துமா மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.
201-300 என்றால் நீண்ட நேரம் வெளிப்படும்போது பெரும்பாலானவர்களுக்கு மூச்சுத்திணறல், 301-400 என்றால் சுவாச நோய் ஏற்படும், 401- 500 என்றால் ஆரோக்கியமான மக்களை பாதிக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாக பாதிக்கும்.
இந்த நிலையில், 241 இந்திய நகரங்களின் மாசு அளவு பட்டியலை நேற்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதில் சுத்தமான காற்று உள்ள 10 நகரங்களில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் பல்கலைபேரூர் 20 என்ற 'நல்ல' காற்றின் தரக் குறியீடுடன் முதல் இடத்திலும், ராமநாதபுரம் 25 என்ற குறியீடுடன் 4-ம் இடத்திலும், 29 என்ற குறியீடுடன் மதுரை 7-ம் இடத்திலும் உள்ளது.
சுத்தமான காற்று உள்ள முதல் 10 இந்திய நகரங்கள் இதோ:
பல்கலைபேரூர் (20)
பாலசோர் (23)
ஐஸ்வால் (25)
ராமநாதபுரம் (25)
சிக்கபல்லாபூர் (28)
மடிகேரி (29)
மதுரை (29)
சிக்கமகளூரு (30)
காங்டாக் (30)
நாகோன் (30)
மோசமான காற்றின் தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி 306 AQI உடன் முதலிடத்தில் உள்ளது. இந்தக் குறியீடு 'மிகவும் மோசமானது' என்ற வகையைச் சேர்ந்தது,
மோசமான காற்றின் தரம் கொண்ட முதல் 10 இந்திய நகரங்கள்:-
டெல்லி (306)
மீரட் (293)
காசியாபாத் (272)
பிவானி (266)
ஹாப்பூர் (261)
ஜிந்த் (261)
சர்க்கி தாத்ரி (260)
ஜுன்ஜுனு (260)
பாக்பத் (257)
அனுமான்காட் (255)
- சென்னையில் காலை, மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது.
- காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. இதனால், சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இருப்பினும், பெரும்பாலான இடங்களில் பனிக்காலம் தொடங்கிய நிலையில் வானிலை காணப்படுகிறது.
இதனால், காலை, மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்றைய காற்றின் தரம் மோசடைந்து இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது
அதாவது, சென்னையில் கடந்த 10 நாட்களில் காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் காற்றின் தரக்குறியீடு 39ல் இருந்து 142 ஆக மோசமடைந்து மிதமான பாதிப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மணலியில் காற்று தரக்குறியீடு 238 ஆக உயர்ந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அபிராமிபுரத்தில் 193 புள்ளிகள், அச்சுதன் நகரில் 151 புள்ளிகள், அந்தோணி பிள்ளை நகரில் 201 புள்ளிகள், அரும்பாக்கத்தில் 181 புள்ளிகள், காந்திநகர் எண்ணூரில் 116 புள்ளிகள், ஐஎன்டியுசி நகரில் 177 புள்ளிகள், கொடுங்கையூரில் 221 புள்ளிகள், கொரட்டூரில் 152 புள்ளிகள், குமாரசாமி நகரில் 187 புள்ளிகள், ராயபுரத்தில் 205 புள்ளிகள், பெருங்குடிகள் 187 புள்ளிகள், பொத்தேரியில் 167 புள்ளிகள், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 164 புள்ளிகள் என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்து இருக்கிறது.
- டெல்லியில் நேற்று காலை மிக அடர்த்தியான பனி மூட்டத்தை காண முடிந்தது.
- ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹைப்ரிட் முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
வடமாநிலங்களில் நிலவும் கடும் பனி மூட்டத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். டெல்லியில் நேற்று காலை மிக அடர்த்தியான பனி மூட்டத்தை காண முடிந்தது. காலை 11 மணி வரை இந்த நிலை நீடித்தது. அதன்பிறகும் முழுமையாக குறையவில்லை. இதனால் காற்றின் தரம் மோசமாக பதிவாகி இருந்தது.
பகல் 12 மணிக்கு பிறகே மெல்ல மெல்ல குறைந்தது. தெரிவுநிலை மிகக் குறைவாக இருந்ததால் நேற்று காலை டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய விமானங்களும், புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாகின. சுமார் 300 விமானங்கள் இத்தகைய கால தாமதத்தை சந்தித்தன. 6 விமானங்கள் தரையிறங்க வழியின்றி அருகில் உள்ள ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
இந்த நிலையில், டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையால் காற்றின் தரம் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி, இன்று காற்றின் தரம் AQI 356 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 14-ந்தேதி AQI 275 ஆக பதிவாகி இருந்தது.
இதனிடையே, டெல்லி அரசு கல்வி இயக்குநரகம், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹைப்ரிட் முறையில் (சில நாட்கள் ஆன்லைன் முறையிலும், சில நாட்கள் நேரடியாகவும்) வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழலை பாதுகாக்க டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும், பதுக்கி வைக்கவும் டெல்லி அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
- டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு மறுநாளான இன்று காலை நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் பதிவாகியுள்ளது.ஆனால், இது முந்தைய ஆண்டுகளைவிட குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை 7 மணியளவில் தலைநகரின் காற்றின் தரக் குறியீடு 326 ஆக இருந்தது. தொடர்ந்து, அண்டை நகரங்களான காசியாபாத் (285), நொய்டா (320), கிரேட்டர் நொய்டா (294), குருகிராம் (315) மற்றும் ஃபரிதாபாத் (310) ஆகியவை 'மோசமான' முதல் 'மிகவும் மோசமான' காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன.
பூஜ்ஜியத்தில் இருந்து -50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51லிருந்து-100 புள்ளிகள் வரை இருந்தால் மிதமானது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதேப்போல் 101லிருந்து - 150 புள்ளிகள் இருந்தால் உடல்நலத்துக்கு தீங்கானது என்றும் 300க்கு மேல் தாண்டினால் அது மிகவும் அபாயகரமானது எனக் கருதப்படுகிறது.
காற்று மாசு காரணமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும், பதுக்கி வைக்கவும் டெல்லி அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி தடையை மீறி பட்டாசு வெடிக்கபட்டதால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்பாக, டெல்லியில் கடந்த ஆண்டு தீபாவளியன்று 382 ஆகவும், 2020ல் 414 ஆகவும், 2019ல் 337 ஆகவும், 2017ல் 319 ஆகவும், 2016ல் 431 ஆகவும் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.