search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மீது தாக்குதல்"

    • சம்பவத்தன்று பாண்டியை 3 பேரும் சேர்ந்து கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. (வயது 39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன், முத்தையா, காட்டுராஜா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாண்டியை 3 பேரும் சேர்ந்து கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். காயமடைந்த பாண்டி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    உத்தமபாளையத்தை சேர்ந்தவர் உதயராணி (50). இவருக்கும் கொடுவிலார் பட்டியை சேர்ந்த தனலெட்சுமி, கலைச்செல்வி ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் முன் விரோதம் இருந்துள்ளது. அவர் வீரபாண்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது தனலெட்சுமி, கலைச்செல்வி ஆகியோர் அவரை தகாத வார்த்தை களால் திட்டி தாக்கியுள்ள னர். காயமடைந்த உதய ராணி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வீரபாண்டி போலீ சில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எலக்ட்ரிசீயன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    • சக்திவேல் சுண்டக்காமுத்தூரை சேர்ந்த நண்பரான அஜய்குமார் என்பவரது சகோதரியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றார்

    கோவை,

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கங்கா நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21) . தனியார் நிறுவன ஊழியர்.

    சம்பவத்தன்று இவர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்த தனது நண்பரான அஜய்குமார் என்பவரது சகோதரியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.

    பின்னர் வீட்டிற்கு நடநது சென்றார். அப்போது அங்கு வந்த திருமூர்த்தி நகரை சேர்ந்த எலக்ட்ரிசீயன் இளவரசன் (20), விஷ்ணு (20) ஆகியோர் சக்திவேலிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி சக்தி வேலை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை தாக்கிய இளவரசன், விஷ்ணு ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.                                                                                                       

    • அருண் சரவணம்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கிய 2 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள பி.என்.டி. காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் அருண் (வயது 22). இவர் சரவணம்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கோவைப்புதூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல் கடைக்கு புரோட்டா வாங்குவதற்காக சென்றார். ஓட்டல் உரிமையாளரிடம் 8 புரோட்டா கேட்டார். பின்னர் வீட்டிக்கு சென்று திறந்து பார்த்த போது புரோட்டா குறைவாக இருந்தது. இதனையடுத்து அருண் ஓட்டலுக்கு சென்று உரிமையாளரிடம் இது குறித்து கேட்டார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஓட்டல் உரிமையாளார் சத்திரக் (22) மற்றும் அவரது நண்பர் ராஜா சந்திரன் (32) ஆகியோர் சேர்ந்து இரும்பு நாற்காலியால் அருணை தாக்கினர். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

    • தாத்தாவை பார்க்க சென்ற வாலிபரை உறவினர் தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தாக்கினார்.
    • வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே காணப்பாடி புதுபாளையத்தை சேர்ந்தவர் நவீன்(25). இவருக்கும் இவரது உறவினர் வாசுதேவன்(43) என்பவருக்கும் பூர்வீக ெசாத்து சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தனது தாத்தாவை பார்க்க சென்ற நவீனை வாசுதேவன் தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டு கட்டையால் தாக்கினார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அய்யலூர் தங்கம்மாபட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(33). சம்பவத்தன்று தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதேபகுதியை சேர்ந்த ஹரிகரன்,அருண்குமார் ஆகியோர் சுரேசை உருட்டுகட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் அவரது பற்கள் உடைந்தது. படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அய்யலூர் அருகே மணியகாரன்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து(32). இவர் பொதுக்கழிப்பிடம் அருகே நின்றிருந்தபோது சிவக்கண்ணன், ரமேஷ், காளி, பரமன் ஆகியோர் மதுகுடித்து பாட்டிலை ரோட்டில் உடைத்தனர். இதை தட்டிகேட்ட மாரிமுத்துவை தாக்கி காயம் ஏற்படுத்தினர். இந்த 3 சம்பவங்கள் குறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×