search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடம் புரண்டு விபத்து"

    • மதுராவில் சரக்கு ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின.
    • இதனால் டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் ரோடு என்ற இடத்தில் சரக்கு ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் அப்பகுதி வழியாக செல்லும் 15 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், நேற்று மாலை பீகாரின் நாராயண்பூரில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


    • ஒடிசாவில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
    • அங்கு விரைந்த அதிகாரிகள் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 2-ம் தேதி பஹானாகா பஜார் நிலையத்தில் அடுத்தடுத்து 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 291 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்படோலாவில் இருந்து லஞ்சிகரில் உள்ள வேதாந்தா லிமிடெட் ஆலைக்கு சரக்கு ரெயில் சிறப்பு வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது.

    இந்த விபத்தில் உயிர் சேதம் அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்றும், சிறப்பு வழித்தடத்தில் தடம் புரண்டதால் ரெயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று ரெயில்வே அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

    தகவலறிந்து அங்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

    • போகோ நகர் அருகே சிங்ரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.
    • இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் பகுதியில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று அசாமின் காம்ரூப் பெருநகர மாவட்டத்தில் உள்ள திதெலியா நகருக்கு நிலக்கரி ஏற்றி சென்றுக் கொண்டிருந்தது.

    இந்நிலையில், இந்த ரெயில், போகோ நகர் அருகே சிங்ரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.

    இதில், 20 பெட்டிகள் தடம் புரண்டன. மொத்தம் 60 பெட்டிகள் கொண்ட அந்த சரக்கு ரெயிலின் மத்திய பகுதியில் இருந்த பெட்டிகளே தடம் புரண்டு உள்ளன.

    இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும்  சீரமைப்பு பணிகள் நடைபெற்று ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் சோடர்மா மற்றும் மன்பூர் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே இன்று காலை 6.45 மணிக்கு அந்த வழியாக நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டது.

    அந்த ரெயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. இதனால் ரெயில் பெட்டிகளில் இருந்த நிலக்கரிகள் தண்டவாளத்தில் சிதறி கிடக்கிறது.

    இதுபற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டது. பல ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×