என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயன்"
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி:
புதுமைப்பெண் திட்டம் குறித்து, கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் புதுமைப் பெண் திட்டத்தினை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட் டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 1981 மாணவியருக்கு முதற்கட்டமாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரு கிறது. தற்போது, முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த 2-ம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் 1187 மாணவி யர்கள் என மொத்தம் 3168 கல்லூரி மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஏழை, எளிய வர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில போதிய வசதி இல்லாத காரணத்தினாலும், சில பெற்றோர்கள் பணியின் காரணமாக வெளியூரில் வேலைபார்ப்பதினால் தங்களது குழந்தைகளை உறவினர்கள் வளர்ப் பதினாலும், பள்ளி பரு வத்திலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பதினாலும் பெண் குழந்தைகளால் உயர்கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை உணர்ந்த முதல்-அமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தினால் பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தை களின் இடை கல்விநிற்றல் விகிதத்தைக் குறைப்பது மட்டுமல்லாது பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கவும், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்ப டுத்தி அனைத்துத் துறை களிலும் மகளிரை முன் உதாரணமாக பங்கேற்கச் செய்யவும், உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண் களுக்கான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்திடவும் இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் வழிவகை செய்கிறது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிக ரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவி களுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற் கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.
மேலும், மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
இத்திட்டத்தில் பயன் பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப் பேசி எண்.14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.
இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வியில் 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப் பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப் பங்களை ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 6-ம் வகுப்பு முதல்
12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற ஆவண நகல்களைக் கொண்டு மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும் இணையதளம் முகவரியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப் பட்டு சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டத்தி னால் அனைத்து மாணவி யர்களும் உயர்கல்வி பயின்று, வேலைவாய்ப்பு பெற்று, பொருளாதாரத்தில் சுதந்திரமாக, சொந்தகாலில் நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணி
- வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குழித்துறை பகுதியில் சட்டவிரோதமாக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பெரிய பெரிய பாறாங் கற்களை உடைத்து கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குழித்துறை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் ஜாக்கிஅமர் வாகனம் ஒன்று அனுமதி இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளரும் நிலத்தின் உரிமையாளரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதைத்தொடர்து பறிமுதல் செய்த வாகனத்தை போலீசார் காவல்நிலையம் கொண்டு சென்று வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளர் யார்? நிலத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழித்துறை பகுதியில் சமூக விரோதிகள் அதிகாரிகள் உதவியுடன் பெரிய பெரிய பாறைகளை உடைத்து கடத்துவது தொடர்கதையாக நடந்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- கன்னியாகுமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் தகவல்
- நெல்-98, வெண்டை - 99, எள்-97, கேழ்வரகு-97, நிலக்கடலை, பீட்ரூட், முருங்கை-96,காரட், பீன்ஸ், கீரை, மல்லி-95 மற்றும் இதர பயிர்களுக்கு-98 என்ற சதவீதங்கள் அளவில் புறத்தூய்மை இருத்தல் வேண்டும்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் விதைகள் அதிக அளவு சுத்தத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பயிர் அறுவடை முடிந்து பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் விதை குவியல்களிலிருந்து கிடைக்கும் விதைகளை உடனடியாக விற்பனைக்கோ, நடவு செய்வதற்கோ தகுதியானதாக இருக்காது.
அந்த விதைகளுடன் மண், சிறுகற்கள், இலைகளின் துகள்கள், குச்சி, சாவி விதைகள் கலந்து இருக்கும். எனவே இந்த விதைகளை சுத்தமாகவும், பிற பொருட்கள் கலப்பு இன்றியும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். சுத்தமான விதைகள் விதைப்பின் போது சீராக விதைப்பதற்கும் வேண்டிய அளவு பயிர் எண்ணிக்கை பராமரிப்பதற்கும் எளிதாக அமையும். நாகர்கோவில் விதை பரிசோதனை நிலையத்தில் விதைகளுக்கு புறத்தூய்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புறத்தூய்மை சோதனையின் போது தூய விதைகள், களை விதைகள், பிறரக விதைகள் மற்றும் உயிர்ப்பற்ற பொருட்கள் கலந்து உள்ளனவா என கண்டறியப்படுகிறது. ஒவ்வொரு பயிருக்கும் குறைந்த பட்ச தரங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நெல்-98, வெண்டை - 99, எள்-97, கேழ்வரகு-97, நிலக்கடலை, பீட்ரூட், முருங்கை-96,காரட், பீன்ஸ், கீரை, மல்லி-95 மற்றும் இதர பயிர்களுக்கு-98 என்ற சதவீதங்கள் அளவில் புறத்தூய்மை இருத்தல் வேண்டும்.
எனவே விதை மாதிரிகளில் புறத்தூய்மை பரிசோதனை செய்து நல்விதையாக விவசாயிகளுக்கு வழங்கி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2½ வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம்.
- குமரி மாவட்ட கலெக்டர் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 300 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு 70 சதவீத மானியமும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ்2½ வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். அதிகப்பட்சமாக ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
ஓராண்டு காப்பீடு கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 1.45 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரத்துக்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான காப்பீடு கட்டணம் கால்நடை உரிமையாளர்களால் செலுத்தப்பட வேண்டும்.
ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விருப்பம் உள்ள கால்நடை வளர்ப்போர் அருகே உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குமரி விதை பரிசோதனை நிலைய அலுவலர் தகவல்
- நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
நாகர்கோவில்:
குமரி விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
நாட்டின் வேளாண்மை உற்பத்திக்கு நெல் விதை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல விதை சில தரங்களை கொண்டது ஆகும். இனத்தூய்மை, புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வையே தரமான விதை யாகும். இந்த விதை தரங்கள் அனைத்தும் உடைய விதையே அதிக மகசூலுக்கு காரணி யாக அமையும். விதை யின் தரத்தினை அறியவே விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது.
அதிக அளவு முளைப்புத் திறனும் சரியான அளவு ஈரப்பதத்துடனும் காணப்படுவதே தரமான விதையாகும். இவ்வாறு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் விற்பனைக்கு வழங்கப்படுவதே சான்று செய்யப்பட்ட விதைகளாகும். எனவே சான்று செய்யப்பட்ட விதைகளை வாங்குவதன் மூலம் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் தங்களிடமுள்ள விதைகளை விதை பரிசோ தனை நிலையத்திற்கு அனுப்பி, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகிய வற்றை உறுதி செய்வதன் மூலமும் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு தரம் உறுதி செய்யப்பட்ட விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலெக்டர் அரவிந்த் பேச்சு
- மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது
நாகர்கோவில்:
குழித்துறை நகராட்சிக்கு ட்பட்ட பம்மம் பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று நடைபெற்றது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-
தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனம ழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க ப்பட்டதை நேரில் பார்வையிட்டது.
இன்னுயிர் காப்போம்,– நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம்,
காணி பழங்குடியினர்க ளுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது,
முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உணவுத்திட்டம்,
புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்க ப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்