search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாய்தகராறு"

    • பண்ருட்டி அருகே தொழிலாளி கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சக்திவேல் உடனே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிட முற்பட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பம் அய்யனார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சக்திவேல்  (வயது 42)கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில் கொத்தனார் வேலை பார்க்கும் 4 பேர் அங்கு வந்து அவர்களும் ஏரியில் குளித்தனர். இந்நிலையில் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஞானகுரு, ராஜசேகர் ஆகியோருக்கும் கொத்தனார் 4 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்த சக்திவேல் உடனே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிட முற்பட்டார். அப்போது சக்திவேலுக்கும் ஞானகுரு, ராஜசேகருகும் இடைேய தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர கீழே கிடந்த கட்டையை எடுத்து சக்திவேலை பலமாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சக்திவேல் மயங்கி கீழே விழுந்தார்.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் முத்தாண்டி குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து சக்திவேலை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த ஞானகுரு ,ராஜசேகரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் அய்யனார் கோவில் காப்பு காட்டில் தலைமறைவாக பதுங்கி இருந்த ஞானகுரு, ராஜசேகரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவரையும் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    • ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
    • இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம்  பண்ருட்டி அடுத்த மணம் தவழ்ந்தபுத்தூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் என்பவர் ஏன் வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ராமதாசுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் மோதலில் ஈடுபட்டு பகத்சிங்கை தாக்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமான நிலை அங்கு உருவானது. இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    • கைது செய்யப்பட்ட சுமனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.முதல் கட்ட விசாரணையில் சுமன் குடிபோதையில் கண்டக்டரிடம் ஏற்பட்ட தகராறில் பஸ்சை கல்வீசி உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
    • தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    நாகர்கோவில், அக்.27-

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து வடசேரி புத்தேரி இறச்ச குளம் வழியாக காட்டுப்புதூ ருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு அண்ணா பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ் ஒன்று காட்டுப்பு தூருக்கு சென்றது. பஸ்ஸில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுமன் (வயது 23) என்பவர் பயணம் செய்தார். அவர் பஸ் கண்டக்டரிடம் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் கண்டக்டருக்கும் சுமனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சுமன் காட்டுப்புதூர் பகுதியில் பஸ்சை விட்டு இறங்கி அவரது சகோதரி வீட்டிற்கு சென்றார். வழக்கமாக பஸ் காட்டுப்புதூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது வழக்கம்.அதேபோல் டிரைவர் கண்டக்டர்கள் இரவு பஸ்ஸை காட்டுப்புதூர் பகுதியில் நிறுத்தி வைத்தி ருந்தனர்.

    இதேபோல் காட்டுப்புதூ ருக்கு இயக்கப்படும் மற்றொரு அரசு பஸ்சும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பஸ்ஸில் 2 டிரைவர்களும் கண்டக்டர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது.

    இதையடுத்து டிரைவர் கண்டக்டர்கள் கண்விழித்து பார்த்த போது பஸ்ஸின் கண்ணாடியை சுமன் கல்வீசி உடைத்து கொண்டு இருந்தார். இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் உடைந்தன. உடனே டிரைவர், கண்டக் டர்கள் அவரை பிடிக்க முயன்றனர்.அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பஸ் கல்வீசி உடைக்கப் பட்டது குறித்து பூதப் பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். உடைக்கப்பட்ட இரண்டு பஸ்களையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் சுமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஊருக்குள் பதுங்கி இருந்த சுமனை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சுமனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.முதல் கட்ட விசாரணையில் சுமன் குடிபோதையில் கண்டக்டரிடம் ஏற்பட்ட தகராறில் பஸ்சை கல்வீசி உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    ×