search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "12 பேர் கைது"

    • போலீசார் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தவர்களை கைது செய்தனர்.
    • அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆசாரி மேடு பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கோபி பச்சைமலை ரோடு பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் கார்த்திகேயன் (வயது 29), காசிபாளையம் சந்தை கடை புதூரை சேர்ந்த வெங்கடசாமி மகன் செல்வன் (51), கோபி புதுப்பாளையம் லோகு நாதன் மகன் சபாபதி (57), சத்தியமங்கலம் ரெங்க சமுத்திரம் மணி மகன் குப்புசாமி (40), கோபியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தம்பி யாணன் (50), கதிர்வேல் மகன் கோபால் (47), கோபி வண்டிப்பேட்டை ராஜூ மகன் பிரகாஷ் (50), அதே பகுதியை சேர்ந்த பொன்னு ச்சாமி கவுண்டர் மகன் சக்தி என்ற சுரேஷ்குமார் (49), கோபி அங்குவிலாஸ் தெரு ராமசாமி மகன் குமார் (48), செல்லப்பா நகர் சுப்பிரமணி மகன் கணேஷ் குமார் (46), புது ஹாஸ்பிடல் ரோடு சையது முஸ்தபா மகன் ஜெபர் (59), பாரதி தெரு இப்ராஹிம் மகன் ஜெபர் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் வைத்திருந்த 5 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 100 போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் சோதனையிலும் ஈடுபட்டனர். இதில் ஈரோடு பஸ் நிலையம் அருகில் மது விற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் (34) என்பவரை கைது செய்தனர்.

    கருங்கல்பாளையம் போலீசார் நடத்திய சோதனையில் சுண்ணாம்பு ஓடை பகுதியை சேர்ந்த மல்லிகா (42) என்பவரை கைது செய்தனர்.

    பவானி போலீசார் நடத்திய சோதனையில் சீனிவாசபுரத்தை சேர்ந்த சின்னமணி (34) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல ஆப்பக்கூடல், அம்மாபேட்டை, கோபி, மலையம்பாளையம், கவுந்தப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சீட்டு கட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, புதுச்சேரியி்ல் இருந்து கடத்தி வரும் மது விற்பனை, கஞ்சா விற்பனை, சூதாட்டம் போன்றவைகளில் ஈடுபடும் நபர்களால் பண்ருட்டி பகுதியின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறது.

    இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா ஆகியோர் பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி பண்ருட்டி பகுதிகளில் மேற்கண்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பண்ருட்டி நகரில் தங்கும் விடுதிகளில் சூதாட்டம் நடப்பதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், புஷ்பராஜ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் பண்ருட்டி நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் ஆய்வு செய்தனர். இதில் அங்கு ரூம்களை வாடகைக்கு எடுத்து பணத்தை வைத்து சீட்டு கட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணம், சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கொடுமுடி ஆற்றங்கரையோரம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றங்கரையோரம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக கொடுமுடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள முள் புதர் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கொடுமுடி, சாலைப்புதூரை சேர்ந்த மகேஷ்வரன் (33), பெரியசாமி (37), நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (49), தளுவம்பாளையம் பகுதியை சேர்ந்த நவமணி (53), இலுப்பைதோப்பு பகுதியை சேர்ந்த சிவகுமார் (44) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.1,200 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல பர்கூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பர்கூர் அருகே உள்ள துருசனம் பாளையத்தில் கெஞ்சேகவுடர் என்பவரது வீட்டின் முன் தெருவிளக்கின் கீழ் அமர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முருகன் (27), மாதேவன் (37), சிவலிங்கம் (28), தேவராஜ் (30), பரமேஸ் (30), நாகராஜ் (35), தேவராஜ் (28) ஆகிய 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூ.4,900 ஆகியவற்றையும் பர்கூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • காட்டுப்பகுதியில் ஆட்டோ டிரைவர் ரவிக்குமார், மகாலிங்கம், விஸ்வநாதன், முருகன், ராஜேந்திரன், சக்திவேல், ஆறுமுகம் ஆகிய 7 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • கரூர், குளித்தலை பகுதிகளில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.11 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

    கரூர்:

    கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட அமராவதி ஆற்று பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் அமராவதி ஆற்றங்கரை ஒட்டிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அப்பகுதியில் பெண்கள் பள்ளி பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் ஆட்டோ டிரைவர் ரவிக்குமார், மகாலிங்கம், விஸ்வநாதன், முருகன், ராஜேந்திரன், சக்திவேல், ஆறுமுகம் ஆகிய 7 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து 7 பேரையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

    குளித்தலை அருகே உள்ள கண்டியூர் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்றபோது அந்தப் பகுதியில் பணம் வைத்து சீட்டு கட்டு விளையாடிக்கொண்டிருந்தகண்டியூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல், திருப்பதி, சந்துரு, லோகநாதன் (40) மற்றும் பூபதி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    கரூர், குளித்தலை பகுதிகளில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.11 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×