என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்விரோதம்"

    • முன் விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலை, ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை வந்தார். நேற்று காலை அவர் தனது குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பொன்விழா நகர், ஜூப்ளி டவுன் அருகே 2 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். அவர்கள் செந்தில்குமாரை கீழே தள்ளி, சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமாருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் உள்ளது தெரிய வந்தது. இது தவிர செந்தில்குமாருக்கு நண்பர்கள் சிலருடனும் முன்விரோதம் உள்ளது.

    எனவே அவரை முன்விரோதம் காரணமாக தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை யார் தாக்கினார்கள்? என்பது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக உதவி கமிஷனர் ஜெகநாதன் உத்தரவின் பேரில், திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

    • இதே பகுதியை சேர்ந்த சுப்பையனுக்கும் சின்னசாமிக்கும் இடையே மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • மற்ற 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக தந்தை- மகனை தாக்கிய3 பேர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சாரங்கபாணி(48). இதே பகுதியை சேர்ந்த சுப்பையனுக்கும் சின்னசாமிக்கும் இடையே மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3 -ந் தேதி சின்னசாமி தனக்கு சொந்தமான வீட்டுமனையில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டி பில்லர் போடுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த சுப்பையன் மகன் வல்லரசு(20), கிருஷ்ணமூர்த்தி மகன்கள் தரணிசெல்வன்(22)நிதிஷ்குமார்(19) ஆகியோர் சின்னசாமி, அவரது மகன் சாரங்கபாணி இருவரையும் அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சின்னசாமி, சாரங்கபாணி இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து சாரங்கபாணி,48; புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நிதிஷ்குமாரை கைது செய்தனர். மற்ற 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ×