search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சசிகலா புஷ்பா"

    • மனுவை பெற்று கொண்ட சசிகலா புஷ்பா, கடம்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார்.
    • அனைத்து ரெயில்களும் கடம்பூரில் நின்று செல்ல வழி செய்வேன் என்று சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

    கயத்தாறு:

    அகில இந்திய நாடார் சக்தியின் மகளிர் அணி தலைவி விஜயாசந்திரன், சென்னை வாழ் நாடார் உறவின் முறையின் தலைவர் சவுந்திர பாண்டியன், பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி, செயலாளர் சேகர் ஆகியோர் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி பாரதீய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி சசிகலா புஷ்பாவிடம் மனு கொடுத்தனர்.

    சசிகலா புஷ்பா

    அதனை பெற்று கொண்ட சசிகலா புஷ்பா, கடம்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ. க. தமிழக தலைவர் அண்ணாமலையின் உதவியோடு, ரெயில்வே துறை அமைச்சர், மதுரை மண்டல மேலாளர் ஆகியோரை சந்தித்து மார்ச் 30-ந்தேதிக்குள் கடம்பூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வழி செய்வேன்.

    கடம்பூரில் இருவழி பாதை அமைக்கப்பட்டு அங்கு பயணிகள் நடந்து செல்ல வழி அமைக்காததால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதனை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வியாபாரிகள் சங்ககூட்டம்

    அப்போது கடம்பூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் தனசேகரன், பொதுச் செயலாளர் சந்திரசேகரன், வியாபாரி சங்கத் துணைத் தலைவர்கள் புஷ்ப கணேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் சித்ராதேவி, கலாராணி, செல்வ காயத்ரி, கடம்பூர் பா.ஜ.க. நகரச் செயலாளர் ராஜகோபால், துணைச் செயலாளர் கருப்பசாமி ஆகியோர் உடனிருநதனர்.

    இதனைத் தொடர்ந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சசிகலா புஷ்பாவிடம், வியாபாரிகள் மனுக்கள் கொடுத்தனர்.

    அதனை பெற்றுக் கொண்டு அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பாவின் வீடு தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ளது.
    • தாக்குதலின்போது சசிகலா புஷ்பா வீட்டில் இல்லை.

    தூத்துக்குடி:

    பா.ஜனதா மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பாவின் வீடு தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ளது.

    நேற்று மதியம் இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 ஆட்டோக்களில் 15 பேர் கொண்ட கும்பல் வந்தது.

    திடீரென அந்த கும்பல் வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

    மேலும் ஜன்னல், பூந்தொட்டி, பிளாஸ்டிக் நாற்காலிகளையும் அந்த கும்பல் சூறையாடியது.

    தாக்குதலின்போது சசிகலா புஷ்பா வீட்டில் இல்லை. நேற்று முன்தினம் தூத்துக்குடியில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் நாகர்கோவிலுக்கு சென்று விட்டார்.

    தாக்குதல் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா பேச்சாளர் பிரிவு தலைவர் ரத்தினராஜ் என்பவர் சிப்காட் போலீசில் புகார் செய்துள்ளார்.

    அதன்பேரில், சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக தி.மு.க. கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், இசக்கிராஜா, பெண கவுன்சிலர் அதிர்ஷ்டமணி மற்றும் அவரது கணவர் பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 427, 506/2 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன் போலீசில் புகார் செய்தார்.
    • தூத்துக்குடி வடபாகம் போலீசார் முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா மீது கொலை மிரட்டல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பா.ஜனதா சார்பில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

    இதில் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    விழாவில் பேசிய முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை குறித்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் பேசினார்.

    அப்போது அமைச்சர் கீதாஜீவனுக்கு மிரட்டும் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா மீது கொலை மிரட்டல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார்.
    • முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா கண்டன உரையாற்றினார்

    தென்காசி:

    தி.மு.க. அரசை கண்டித்து தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே நடை பெற்றது. மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார்.

    பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா கண்டன உரையாற்றினார். மாநில வர்த்தக அணி தலைவரும் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் பார்வையாளருமான ராஜா கண்ணன்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன்,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், தொழில் பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அன்புராஜ்,சாரதா பாலகிருஷ்ணன், ராம ராஜா, பாண்டித்துரை, மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துக்குமார் பால்ராஜ், பாலமுருகன், முத்துலட்சுமி பால ஸ்ரீனிவாசன்,மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ராஜலட்சுமி ஜானகி, புலிக்குட்டி,அர்ஜுனன், தென்காசி நகரத் தலைவர் மந்திரமூர்த்தி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் மாரியப்பன், மாநில மாவட்ட அணி பிரிவு மண்டல் கிளை கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க. வினர் கலந்து கொண்டனர்.

    ×