என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குரூப் 2"
- குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு.
- இதன் மூலம் கூடுதலாக 213 பேர் குரூப்-2, 2 ஏ பணியிடங்களில் சேருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெற்றது. இதில் நேர்முக தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முக தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் அடங்கும்.
இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதில் தேர்ச்சி பெறுப வர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்பட்டு அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவை எதிர்பார்த்து லட்சக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், முழு நேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலை கண்காணிப்பாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், நேர்முக எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப்-2 தேர்வுகள் மூலமாகவே நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
- துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார்.
- கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார்.
என் தாத்தாவும், அப்பாவும் தூய்மைப்பணியாளர்கள், அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன்,இன்றிலிருந்து எங்க வாழ்க்கை மாறியுள்ளது என்று துர்கா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், "நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு. நான் மீண்டும் சொல்கிறேன்…கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து" என்று தெரிவித்துள்ளார்.
- போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது.
- தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.
அந்த வகையில், 2024ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது. குரூப்- 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் காரணங்களால் இணையவழியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியாததால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
- தேர்வாளர்கள் இன்று முதல் தொடங்கி வரும் ஜுலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- செப்டம்பர் 14ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ் அறிவிப்பு.
TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2 தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாளர்கள் இன்று முதல் தொடங்கி வரும் ஜுலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்துவதற்கும் ஜுலை 19ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, செப்டம்பர் 14ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சியின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று தெரிந்துக் கொள்ளலாம்.
- யோசித்து எழுதும் வகையில்தான் வினாக்களை டி.என்.பி.எஸ்.சி. கேட்டு இருக்கிறது.
- வினாக்களை பொறுத்தவரையில், பாடத்தை அடிப்படையாக கொண்டதாகவே இருந்தது.
சென்னை:
குரூப்-2, 2ஏ வினாத்தாள் பதிவெண்களில் ஏற்பட்ட குளறுபடியால், நேற்று காலை மற்றும் பிற்பகலில் நடந்த தேர்வுகள் தாமதமானது. இது தேர்வர்களுக்கு எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது? என்பது பற்றி தேர்வர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
சென்னையில் தங்கி தேர்வை எழுதிய சேலத்தை சேர்ந்த கோபி:-
வினாத்தாள் குளறுபடியால் 45 நிமிடம் தாமதமாக தேர்வு தொடங்கியது. இருந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. அதற்கேற்றாற்போல், நேரத்தை ஒதுக்கி தேர்வு எழுத அனுமதித்தார்கள். இது ஒவ்வொரு அறையிலும், ஒவ்வொரு மாதிரி நேரம் ஒதுக்கப்பட்டது. தேர்வு தாமதமான நேரத்தில் லேசான பதற்றம் இருந்தது. மற்றபடி தேர்வு தொடங்கியதும் எதுவும் தெரியவில்லை. வினாக்களை பொறுத்தவரை சற்று எளிமையாக கேட்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு பற்றிய வினாக்கள் பெருமளவில் கேட்கப்பட்டு இருந்தன.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த தனபிரியா:-
காலையில் தேர்வு தாமதமானதால் கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது. மேலும், காலை தேர்வுக்கும், பிற்பகலில் நடக்கும் தேர்வுக்குமான இடைவெளி இந்த தாமதத்தால் குறைந்து போய்விட்டது. இதனால் வேகமாக வெளியில் போய் சாப்பிட்டுவிட்டு தேர்வுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதுமட்டுமல்லாமல், பிற்பகல் தேர்வுக்கு தயாராகுவது என்பதும் இல்லாமல் போய்விட்டது. இந்த தேர்வு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்று. இந்த ஒரு நாளுக்காக பல மாதங்களை செலவழிக்கிறோம். அப்படி இருக்கும்போது, இதில் குளறுபடி ஏற்பட்டால் மனதளவில் பெரிய பாதிப்பை தரும். அதை இன்று பலர் உணர்ந்தார்கள். எனவே இதுபோன்ற பிரச்சினை வராமல் டி.என்.பி.எஸ்.சி. பார்த்துக்கொள்ள வேண்டும். வினாக்களை பொறுத்தவரையில், பொதுவாக கேட்டு இருந்தார்கள். பத்திரிகை செய்தியை படித்திருந்தால் பெரும்பாலான வினாக்களுக்கு பதில் அளித்து இருக்கலாம். அதற்கேற்றாற்போல் தான் வினாக்கள் இடம்பெற்று இருந்தன. யோசித்து எழுதும் வகையில்தான் வினாக்களை டி.என்.பி.எஸ்.சி. கேட்டு இருக்கிறது.
சென்னையை சேர்ந்த பிரியதர்ஷினி:-
காலையில் நடைபெறும் தேர்வு தகுதிக்கான தேர்வுதான். ஆனால் மதியம் நடக்கும் தேர்வு மதிப்பெண்தான் டி.என்.பி.எஸ்.சி. கணக்கில் எடுத்துக்கொள்ளும். அந்த வகையில் தேர்வு தாமதம் ஆனதால், முக்கியமான மதியத்தேர்வுக்கு கடைசி நேரத்தில் தயார் ஆகுவதற்கு முடியாமல் போனது. மேலும் தேர்வு தாமதமான நேரத்தில் தேர்வு நடக்குமோ? நடக்காதோ? என்ற பதற்றம் இருந்தது. காலை தேர்வுக்கும், பிற்பகல் தேர்வுக்கும் 30 நிமிடம் மட்டுமே இடைவெளி கிடைத்தது. இதில் சாப்பிட மட்டுமே முடிந்தது.
வினாக்களை பொறுத்தவரையில், பாடத்தை அடிப்படையாக கொண்டதாகவே இருந்தது. நேர மேலாண்மைதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நடப்பு நிகழ்வுகள் குறித்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. அரசு திட்டங்கள் குறித்த கேள்விகளும் அதில் இடம்பெற்றிருந்தன.
- போட்டித்தேர்வுகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
- சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும்.
பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகி விட்டது. டி.என்.பி.எஸ்.சி.யின் அலட்சியமே இதற்குக் காரணம்.
போட்டித்தேர்வுகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை.
சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்து செய்து விட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு, வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இத்தேர்வை டி.என்.பி.எஸ்.சி மீண்டும் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வானது தொடங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டது.
- தமிழ்நாட்டில் பல்வேறு தேர்வு மையங்களிலும் வினாத்தாளில் சீரியல் நம்பர் மாறி இருந்ததால் தாமதமாக தேர்வு தொடங்கியது.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டில் இன்று குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. காலையில் தமிழ் மொழி தகுதி தாள் தேர்வும், மதியம் பொதுத்தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 186 மையங்களில் தேர்வு நடந்தது. முதலில் தமிழ் மொழி தகுதி தாள் தேர்வு நடந்தது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பாரத் அறிவியல் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்திரா பல்கலைக்கழகம், கலைமகள் மேல்நிலைப்பள்ளி, அடைக்கல மாதா கல்லூரி ஆகிய 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 2025 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வானது தொடங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டது. அதாவது தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் புக்லெட் சீரியல் நம்பர் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இதன் காரணமாக தேர்வு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உடனடியாக பாரத் கல்லூரிக்கு விரைந்து வந்தார். நிலைமையை கவனித்து சரியான வினாத்தாள் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தார். தேர்வர்களிடம் நிலைமையை எடுத்து கூறி தற்போது வினாத்தாள் சரியான முறையில் கொடுக்கப்பட்டு விட்டது.
இதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும். இதில் அரைமணி நேரம் ஏற்பட்ட காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில் தேர்வு முடியும் நேரம் ஆன 12.30 மணிக்கு பதிலாக 1 மணிக்கு தேர்வு முடியும் என்று கூறினார்.
மேலும் தேர்வு மையத்திற்கு வெளியே கூடியிருந்த தேர்வர்களின் பெற்றோர்களிடமும் நிலைமையை எடுத்துக் கூறினார். இதேபோல் கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவும் தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மதியம் 1 மணி வரை தமிழ் மொழி தகுதி தேர்வு நடைபெற்றது.
இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு தேர்வு மையங்களிலும் வினாத்தாளில் சீரியல் நம்பர் மாறி இருந்ததால் தாமதமாக தேர்வு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
- குரூப் 2 தேர்வு முடிந்து 5 மாதங்கள் இருந்த நிலையில், முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.
- குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21ம் தேதி நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத் தேர்வு கொண்ட காலி பணியிடங்களுக்கும், நகராட்சி கமிஷனர், தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் உள்பட 5,413 நேர்முகத் தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கும் தேர்வு நடந்தது.
குரூப்-2 தேர்வை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேர் ஆண்கள், 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 பேர் பெண்கள். 48 பேர் மூன்றாம் பாலினத்தவர் தேர்வு எழுதினார்கள்.
இவர்களில் 14 ஆயிரத்து 531 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினார்கள். இந்நிலையில், தமிழகத்தில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் 15% தேர்வர்கள் ஆப்சென்ட் என தெரியவந்துள்ளது. அதாவது, 9.94 லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவித்தனர்.
குரூப் 2 தேர்வு முடிந்து 5 மாதங்கள் இருந்த நிலையில், முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் கூறுகையில், " குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்கான பணிகள் முடிவடைந்ததும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்