என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வினாத்தாள் பதிவெண் குளறுபடியால் பாதிப்பு இருந்ததா?- தேர்வு எழுதியவர்கள் கருத்து
- யோசித்து எழுதும் வகையில்தான் வினாக்களை டி.என்.பி.எஸ்.சி. கேட்டு இருக்கிறது.
- வினாக்களை பொறுத்தவரையில், பாடத்தை அடிப்படையாக கொண்டதாகவே இருந்தது.
சென்னை:
குரூப்-2, 2ஏ வினாத்தாள் பதிவெண்களில் ஏற்பட்ட குளறுபடியால், நேற்று காலை மற்றும் பிற்பகலில் நடந்த தேர்வுகள் தாமதமானது. இது தேர்வர்களுக்கு எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது? என்பது பற்றி தேர்வர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
சென்னையில் தங்கி தேர்வை எழுதிய சேலத்தை சேர்ந்த கோபி:-
வினாத்தாள் குளறுபடியால் 45 நிமிடம் தாமதமாக தேர்வு தொடங்கியது. இருந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. அதற்கேற்றாற்போல், நேரத்தை ஒதுக்கி தேர்வு எழுத அனுமதித்தார்கள். இது ஒவ்வொரு அறையிலும், ஒவ்வொரு மாதிரி நேரம் ஒதுக்கப்பட்டது. தேர்வு தாமதமான நேரத்தில் லேசான பதற்றம் இருந்தது. மற்றபடி தேர்வு தொடங்கியதும் எதுவும் தெரியவில்லை. வினாக்களை பொறுத்தவரை சற்று எளிமையாக கேட்கப்பட்டு இருந்தது. தமிழ்நாடு பற்றிய வினாக்கள் பெருமளவில் கேட்கப்பட்டு இருந்தன.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த தனபிரியா:-
காலையில் தேர்வு தாமதமானதால் கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது. மேலும், காலை தேர்வுக்கும், பிற்பகலில் நடக்கும் தேர்வுக்குமான இடைவெளி இந்த தாமதத்தால் குறைந்து போய்விட்டது. இதனால் வேகமாக வெளியில் போய் சாப்பிட்டுவிட்டு தேர்வுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதுமட்டுமல்லாமல், பிற்பகல் தேர்வுக்கு தயாராகுவது என்பதும் இல்லாமல் போய்விட்டது. இந்த தேர்வு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்று. இந்த ஒரு நாளுக்காக பல மாதங்களை செலவழிக்கிறோம். அப்படி இருக்கும்போது, இதில் குளறுபடி ஏற்பட்டால் மனதளவில் பெரிய பாதிப்பை தரும். அதை இன்று பலர் உணர்ந்தார்கள். எனவே இதுபோன்ற பிரச்சினை வராமல் டி.என்.பி.எஸ்.சி. பார்த்துக்கொள்ள வேண்டும். வினாக்களை பொறுத்தவரையில், பொதுவாக கேட்டு இருந்தார்கள். பத்திரிகை செய்தியை படித்திருந்தால் பெரும்பாலான வினாக்களுக்கு பதில் அளித்து இருக்கலாம். அதற்கேற்றாற்போல் தான் வினாக்கள் இடம்பெற்று இருந்தன. யோசித்து எழுதும் வகையில்தான் வினாக்களை டி.என்.பி.எஸ்.சி. கேட்டு இருக்கிறது.
சென்னையை சேர்ந்த பிரியதர்ஷினி:-
காலையில் நடைபெறும் தேர்வு தகுதிக்கான தேர்வுதான். ஆனால் மதியம் நடக்கும் தேர்வு மதிப்பெண்தான் டி.என்.பி.எஸ்.சி. கணக்கில் எடுத்துக்கொள்ளும். அந்த வகையில் தேர்வு தாமதம் ஆனதால், முக்கியமான மதியத்தேர்வுக்கு கடைசி நேரத்தில் தயார் ஆகுவதற்கு முடியாமல் போனது. மேலும் தேர்வு தாமதமான நேரத்தில் தேர்வு நடக்குமோ? நடக்காதோ? என்ற பதற்றம் இருந்தது. காலை தேர்வுக்கும், பிற்பகல் தேர்வுக்கும் 30 நிமிடம் மட்டுமே இடைவெளி கிடைத்தது. இதில் சாப்பிட மட்டுமே முடிந்தது.
வினாக்களை பொறுத்தவரையில், பாடத்தை அடிப்படையாக கொண்டதாகவே இருந்தது. நேர மேலாண்மைதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நடப்பு நிகழ்வுகள் குறித்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. அரசு திட்டங்கள் குறித்த கேள்விகளும் அதில் இடம்பெற்றிருந்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்