என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய தேர்தல் ஆணையம்"

    • கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது.
    • லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ். தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.

    தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களை தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.

    கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது. முன்னதாக, 2019 லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ். தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை அன்று டெண்டுல்கருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே கையெழுத்தாகிறது. மூன்று வருட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டெண்டுல்கர் வாக்காளர் விழிப்புணர்வை பரப்புவார் என்று கூறப்படுகிறது.

    • தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏ.க்களுடன் அஜித் பவார் தனியாக செயல்பட்டு வருகிறார்
    • அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற நிலையில், சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர்

    இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவார். அரசியல் களத்தில் முக்கியமான நேரத்தில் அதிரடி முடிவு எடுக்கக் கூடியவர். எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்.

    அப்படி இருந்தபோதிலும், மகாராஷ்டிராவில் அவரது அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் மேலும் சில எம்.எல்.ஏ.-க்கள் மந்திரியாக பதவி ஏற்றனர்.

    நாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று சரத் பவார் தெரிவித்து வருகிறார். அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் என்று அஜித் பவார் தெரிவித்து வருகிறார்.

    இதற்கிடையே இருதரப்பிலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றிற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வருகிற 6-ந்தேதி (அக்டோபர்) இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அன்றைய தினம் இருதரப்பிலும் இருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் சரத் பவார் பிரிவுக்கும், அஜித் பவார் பிரிவுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இரு தரப்பிலும் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

    இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில் "எல்லோருக்கும் அவர்களுடைய தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைக்க உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் எங்களுடைய தரப்பு வாதத்தை இந்திய தேர்தல் ஆணையம் முன் எடுத்து வைப்போம்'' என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    • ஐந்து மாநில தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது
    • ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற பதவிக் காலங்கள் வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடைய இருக்கின்றன.

    இதனால் டிசம்பர் மாதத்திற்குள் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை நடத்த மத்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியது. ஐந்து மாநிலங்களுக்கும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து, தேர்தல் நடத்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், இன்று மதியம் ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி டெல்லியில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தேர்தல் தேதியை வெளியிடுவார்.

    ராஜஸ்தானில் காங்கிரசும், மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சியும் நடைபெற்று வருகிறது.

    • யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபாட் எந்திரம் மூலம் வாக்காளர்களுக்கு காட்டப்படும்.
    • இந்த ரசீது மக்களிடம் காண்பிக்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும்.

    இந்திய கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தின் பல்வேறு விசயங்களை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது. இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    வாக்கு எந்திரம் அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்தே அதன் செயல்பாட்டில் சந்தேகம் இருந்து வருகிறது. வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு விரிவாக குறிப்புகளை கொடுத்துள்ளோம். ஆனால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. பல கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளோம். ஆனால் இந்தியா கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது.

    எங்களுடைய பரிந்துரை எளிதானது. வாக்காளர்கள் வாக்கு அளிக்கும்போது விவிபாட் எந்திரத்தில் ஒரு ஸ்லிப் தோன்றி யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது காட்டுகிறது. ஆனால் அந்த ஸ்லிப் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும். 100 சதவீதம் இந்த ஸ்லிப்களை எண்ண வேண்டும். இது வாக்காளர்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை கொடுக்கும் இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஒரு தொகுதியின் முடிவு வெளியிடுவதற்கு முன்பாக, ஐந்து வாக்கு மையத்தில் உள்ள விவிபாட் எந்திரத்தில் உள்ள ரசீதுகள் எடுத்து எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விவி பேட் ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும்.
    • சேமிக்கப்பட்ட ரசீதுகள் 100 சதவீதம் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.

    இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது. இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வாக்கு எந்திரம் அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்தே அதன் செயல்பாட்டில் சந்தேகம் இருந்து வருகிறது. வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு விரிவாக குறிப்புகளை கொடுத்துள்ளோம்.

    எங்களுடைய பரிந்துரை எளிதானது. வாக்காளர்கள் வாக்கு அளிக்கும்போது விவிபாட் எந்திரத்தில் ஒரு ஸ்லிப் தோன்றி யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது காட்டுகிறது. ஆனால் அந்த ஸ்லிப் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும். 100 சதவீதம் இந்த ஸ்லிப்களை எண்ண வேண்டும். இது வாக்காளர்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை கொடுக்கும் இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. பல கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளோம். ஆனால் இந்தியா கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது எனவும் இந்தியா கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் விவிபேட் தொடர்பாக தங்களை சந்திக்க இந்தியா கூட்டணி குழுவுக்கு நேரம் ஒதுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இந்தியா கூட்டணியில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை தேர்தல் ஆணையத்தின் தலைவரை சந்தித்து வழங்கி, ஆலோசனை நடத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால், அவ்வாறு செய்வதில் எங்களுக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

    "இந்தியா கூடடணியின் 3 அல்லது 4 பேர் உங்களை சந்தித்து விவிபேட் குறித்து சில நிமிடங்கள் தகவல்களை பரிமாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கும்படி மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன்" என ஜெய்ராம் ரமேஷ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    30-ந்தேதியிடப்பட்டு இந்த கடினம் எழுதப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி இது தொட்ரபானை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசிக்கிறார்.
    • தேர்தல் நடத்தும் மாதம் மற்றும் தேதிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட உள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தொடர்பாக வரும் 8-ந்தேதி சென்னையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசிக்கிறார். ஆலோசனையில் தேர்தல் ஆணையர்கள் அனுப்சந்திர பாண்டே, அருண் கோயல் பங்கேற்க உள்ளனர்.

    தேர்தல் நடத்தும் மாதம் மற்றும் தேதிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட உள்ளன.

    இந்த ஆலோசனையில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். தேர்தல் பணிகள், பாதுகாப்பு தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற உள்ளது.

    • வாக்கு செலுத்தியதற்கான ரசீது வாக்காளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சேகரிக்க வேண்டும்.
    • அந்த ரசீதுகள் 100 சதவீதம் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.

    வாக்கு எந்திரம் (EVM), வாக்கு செலுத்தியதற்கான ரசீது வழங்கும் இயந்திரம் (VVPAT) ஆகியவை மீது சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக கூறிவருகின்றன.

    இதுகுறித்து தங்களிடம் விரிவான வகையில் விவரிக்க நேரம் ஒதுக்கி தருமாறு தேர்தல் ஆணையத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், தேர்தல் ஆணையர் எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதினார். அதில் "இந்தியா கூட்டணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து குறிப்பிட்டு, கூட்டணியின் மூன்று பிரதிநிதிகளை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு" குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரம் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது என பதில் அளித்துள்ளது.

    தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் கேள்வி பதில்கள் பக்கத்தில் வாக்கு இயந்திரம் தொடர்பான பதில்கள் போதுமான மற்றும் விரிவான அளவிற்கு உள்ளது. 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விவிபாட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், ஏற்கனவே எழுதப்பட்ட கடிதத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதில் கடிதத்தில் வாக்கு எந்திரம், விவிபாட் ஆகியவை குறித்த பல்வேறு சந்தேகங்களை கருத்தில் எடுத்துக் கொண்டு வரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் வரும்போது, சரிபார்க்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    30-12-2023-ந்தேதி குறிப்பிட்டு எழுதப்பட்ட கடிதத்தில் பதில் அளிக்காத எந்த பிரச்சனை குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    • இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் 8 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.
    • இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை சென்னை வருவதாக இருந்தது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் 8 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் இதற்காக இன்று மாலை சென்னை வருவதாக இருந்தது.

    மாவட்ட கலெக்டர்கள் காவல் துறை அதிகாரிகளுடன் இறுதி வாக்காளர் பட்டியல் குறித்தும் தேர்தல் பாதுகாப்பு உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்க இருந்தனர்.

    ஆனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் கூட்டத்தை வேறொரு நாளில் நடத்துமாறு மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

    • ம.தி.மு.க. அவைத்தலைவர்-ஆடிட்டர் அர்ஜூனராஜ்.
    • ம.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ம.தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-

    1. ம.தி.மு.க. அவைத்தலைவர்-ஆடிட்டர் அர்ஜூனராஜ்.

    2. பொருளாளர்-மு.செந்திலதிபன்.

    3. அரசியல் ஆய்வு மைய செயலாளர்-ஆவடி இரா.அந்திரிதாஸ்.

    4. தேர்தல் பணிச் செயலாளர்-வி.சேஷன்.

    இதே போல ம.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-

    1. ம.தி.முக. துணைப் பொதுச்செயலாளர்-தி.மு.இராசேந்திரன்.

    2. கொள்கை விளக்க அணி செயலாளர்-ஆ.வந்தியத்தேவன்.

    3. தணிக்கைக் குழு உறுப்பினர்-வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன்.

    4. இளைஞரணி செயலாளர்-ப.த.ஆசைத்தம்பி.

    இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.

    • பாராளுமன்றத்துக்கு நடத்தப்படும் தேர்தல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி தொடங்கலாம் என்று இன்று மதியம் தகவல்கள் வெளியானது.
    • டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த தடவை போல 7 கட்டங்களாக தேர்தல் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அட்டவணை அடுத்த மாதம் இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்றத்துக்கு நடத்தப்படும் தேர்தல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி தொடங்கலாம் என்று இன்று மதியம் தகவல்கள் வெளியானது. டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.

    அதில், "ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் சார்ந்த பணிகளை வகுக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

    • இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமைச் செயலகம் வந்ததும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
    • இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் மற்ற துறை உயர் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் நிறைவு பெற உள்ளது.

    இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த ஆயத்தமாகி வருகிறது.

    இதற்காக பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரம் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

    அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல், வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை, சட்டம் ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தனர். அதுமட்டு மின்றி தலைமைத் தேர்தல் அதிகாரிகளை டெல்லிக்கு அழைத்தும் ஆலோசித்து வந்தனர்.

    கடந்த மாதம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் தமிழக நிலவரம் குறித்து எடுத்து கூறி இருந்தார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்யவும், தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்யவும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வந்தனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அயஜ் பாதூ, தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மல்லிக் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை தேர்தல் அதிகாரிகள் வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமைச் செயலகம் வந்ததும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    தமிழகத்தில் இதுவரை தேர்தலுக்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது? வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மேலும் புதிதாக விண்ணப்பங்கள் வந்துள்ளதா? எந்த அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் கேட்டறிந்தனர்.

    இதுவரை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவே பாராளுமன்றத் தேர்தல் நடந்திருப்பதால் இப்போது நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து விரைவில் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தவிர வாக்குப்பதிவு எந்திரங்கள் கையிருப்பு விவரம், எவ்வளவு மின் னணு எந்திரங்கள் இன்னும் தேவைப்படும் போன்ற விவரங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 1 மணிநேரம் தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் மற்ற துறை உயர் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    அப்போது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக என்னென்ன தேவைப்படும். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, வருமான வரித்துறையினர் எவ்வளவு பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

    கூட்டம் முடிந்ததும் சென்னையில் தங்கும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை காலை மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர்.

    இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் களுடன் காணொலி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். குறிப்பாக வாக்காளர் பட்டியல் முழுமையாக உள்ளதா?

    திருத்தங்கள், பெயர் சேர்த்தல் ஆகியவை சரிவர செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து கேட்டறிகிறார்கள். நாளை மாலை வரை இந்த ஆலோசனை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன் பிறகு நாளை இரவு 9 மணிக்கு டெல்லி புறப்படுகின்றனர். அதன் பிறகு தமிழக நிலவரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

    • ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
    • வாக்குப்பதிவு எந்திரங்களின் தயார் நிலை குறித்தும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி பற்றி அட்டவணையை இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரம் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

    அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

    இதையொட்டி ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல், வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை, சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து அந்த மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பதூ மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மைச் செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் நேற்று சென்னை வந்திருந்தனர்.

    தலைமைச் செயலகத்தில் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய இவர்கள் வாக்காளர் இறுதி பட்டியல் நிலை குறித்தும், வாக்குப்பதிவு எந்திரங்களின் தயார் நிலை குறித்தும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன்பிறகு வருமான வரித்துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை, சி.ஆர்.பி.எப். போலீஸ் அதிகாரிகள், தமிழக ஆயுதப்படை போலீசார், தேர்தல் பிரிவு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட கலெக்டர்கள் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்கள்.

    ஒவ்வொரு மாவட்ட கலெக்டரையும் தொடர்பு கொண்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியல் பற்றியும் திருத்தம் சம்பந்தமாகவும், எவ்வளவு வாக்குப்பதிவு எந்திரங்கள் கைவசம் உள்ளது என்பது பற்றியும், இன்னும் எவ்வளவு மின்னணு எந்திரங்கள் தேவைப்படும் என்பது பற்றியும் கேட்டறிந்தனர்.

    ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெளி மாநில போலீசார் எவ்வளவு தேவைப்படும், பதட்டமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காணொலி மூலம் விவாதித்தனர். இன்று மாலை வரை இந்த ஆய்வு நடைபெறும் என தெரிகிறது.

    அதன்பிறகு துணை தேர்தல் கமிஷனர் அஜய் பதூ மற்றும் தேர்தல் கமிஷன் முதன்மை செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

    ×