search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்கொரியா கூட்ட நெரிசல்"

    • ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி இரங்கல் தெரிவித்தார்.
    • ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரில் 19 வெளிநாட்டவர்கள் அடங்குவர்.

    சியோல்:

    தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் நடைபெறும்.

    இந்த ஆண்டு திருவிழா நடந்த நிலையில் பேய் வேடமணிந்த மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் மூச்சுத் திணறி பலர் உயிரிழந்தனர். இதுவரை பலி எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. இதில் 19 வெளிநாட்டவர்களும் அடங்குவர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.

    கொரோனா பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹாலோவீன் திருவிழா நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டு அதிபர் யுன் சுக் இயோல் நாடு முழுவதும் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    • தென்கொரியா ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டாக ஹாலோவீன் திருவிழா நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் நடைபெறும்.

    இந்த ஆண்டு திருவிழா நடந்த நிலையில் பேய் வேடமணிந்த மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் மூச்சுத் திணறி பலர் உயிரிழந்தனர். இதுவரை பலி எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.

    இந்நிலையில், தென்கொரிய தலைநகர் சியோலில் ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சியோலில் கூட்ட நெரிசலில் சிக்கி பல இளைஞர்கள் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் கொரியா குடியரசுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    கொரோனா பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹாலோவீன் திருவிழா நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×