என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அட்டூழியம்"
- பா.ம.க. கொடி க்கம்பம் உளளது. இதில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டிருந்தது.
- பா.ம.க. கொடியை இறக்கி தீ வைத்துள்ளனர். இதனால் கொடிக்கம்பத்தில் எரிந்த நிலையில் பா.ம.க. கொடி தொங்கி கொண்டிருந்தது
கடலூர்
புவனகிரி அடுத்த அழிச்சிகுடி கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க. கொடி க்கம்பம் உளளது. இதில் அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டிருந்தது மர்ம நபர்கள் நேற்று இரவு, கொடிக்கம்பத்திலிருந்து பா.ம.க. கொடியை இறக்கி தீ வைத்துள்ளனர். இதனால் கொடிக்கம்பத்தில் எரிந்த நிலையில் பா.ம.க. கொடி தொங்கி கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்த பா.ம.க.வினர் கொடிக்கம்பம் அருகில் திரண்டனர். தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு எரிந்த நிலையில் இருந்த பா.ம.க. கொடியை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும், இது தொடர்பாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படை போலீசார் புவனகிரி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் புவனகிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அதே இடத்தில் பா.ம.க. கொடி அறுத்து எரியப்பட்டது. இது தொடர்பான வழக்கும் புவனகிரி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதே போல மற்றொரு சம்பவம் நடந்திருப்பது பா.ம.க.வினரிடையே அதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல புவனகிரி சித்தேரியில் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த கொடி அறுத்து எரிந்துள்ளனர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் நற்பணி மன்ற பேனரும் கிழிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. கொடியை எரித்த அதே மர்ம நபர்கள் இந்த செயலிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.
- முகமூடி கொள்ளை யர்கள் தொடர்ந்து கொள்ளை யடித்து வரும் சம்பவம் நடை பெற்றுள்ளது .
கடலூர்:
கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள் கடைகள் மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் ஆகிவற்றை தொடர்ந்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகிலும் பெண் போலீஸ் வீட்டிலும் லட்சக்கணக்கான மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர் கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தை போலீசார் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நிலையில் நேற்று நள்ளிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டில் ஒரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களை கொள்யைடித்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ள. மேலும் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு மளிகை கடையிலும் திருட முற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அருகில் இருந்த2 மளிகை கடையில் பூட்டை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் வண்டி பாளையத்தில் மற்றொரு மளிகை கடை பூட்டை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.
மேலும் கடலூர் வசந்தரராயன் பாளையம் பகுதியில் மற்றொரு மளிகை கடையில் பூட்டை உடைத்து 30 ஆயிரம் பணம் திருடி சென்று உள்ளனர். இன்று காலை வழக்கம் போல் கடை உரிமையாளர்கள் கடையை திறப்பதற்கு வந்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய சம்பவம், 2 கடை பூட்டி உடைத்து திருட முயற்சி செய்த சம்பவமும் வணிகர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் மர்ம நபர்கள் திருடிய சி.சி.டி.வி வீடியோ காட்சி பதிவாகி இருந்தது இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து கொண்டு எந்தவித பயமும் இன்றி பணத்தையும் பொருட்களையும் திருடி சென்றது தெரியவந்துள்ளது. அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடு படும் இடங்களில் முகமூடி கொள்ளை யர்கள் தொடர்ந்து கொள்ளை யடித்து வரும் சம்பவம் நடை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் வீட்டில் தனியாக உள்ள பெண்கள் முதிய வர்கள் இதன் காரண மாக பதற்றத்துடன் காணப்படு கின்றனர். போலீசார் தொடர் திருட்டை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.போலீசார் அதிரடி சோத னையில் ஈடுபட்டு முகமூடி கொள்ளையர்கைள பிடித்து ேமலும திருட்டு சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்ற தாய்-மகளை கீழே தள்ளி மர்ம நபர்கள் நகையை பறித்தனர்.
- கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பக நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 45). அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவருக்கு காமாட்சி (34) என்ற மனைவியும், பார்த்தசாரதி (13) என்ற மகனும், தாரணி (10) என்ற மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று முருகன் மதுரையில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விட்டு மனைவி, மகன், மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
திருமங்கலம் பகுதியில் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் பின்தொடர்ந்தனர்.நாராயணசாமி நகர் பகுதியில் வந்தபோது திடீரென மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த காமாட்சி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். நகை பறிப்பின்போது நிலைதடுமாறி முருகன், காமாட்சி, அவரது மகன், மகள், ஆகியோர் மோட்டார் ைசக்கிளில் இருந்து தவறி கீேழு விழுந்தனர்.
இதில் காமாட்சி, தாரணி படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரண மாக நடந்து வருகிறது.
குறிப்பாக திருமங்கலம் 4 வழிச்சாலையில் நாள்தோறும் நகை பறிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பெண்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- கிராவல் மண் கடத்தி செல்லப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
- அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் செல்லியம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட வரகூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 3 மணியில் இருந்து காலை 7 மணி வரை செங்கல் சூளைகளுக்கு செம்மண் மற்றும் கிராவல் மண் கடத்தி செல்லப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதே போல் இன்று விடியற்காலை 3 மணியிலிருந்து காலை ஏழு மணி வரை ஒரு ஜே.சி.பி. எந்திரத்துடன் 4 டிராக்டர்களை பயன்படுத்தி வரகூர் சர்ச் அருகே உள்ள செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டது.
இது குறித்து வரகூர் கிராம மக்கள் கூறும்போது வரகூரை சுற்றியுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள் மற்றும் புள்ளாலப்பட்டி தனியார் நிலத்தில் செம்மண் மற்றும் திராவல் மண்ணை பல வருடங்களாக கடத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சம்பந்தப்பட்ட செம்மண் கடத்தல் காரர்களிடம் ஊர் பொது மக்களாகிய நாங்கள் இந்த செயலை தட்டிக் கேட்டபோது எங்களை மிரட்டும் தோனியில் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
எனவே அரசு அனுமதி இன்றி அரசு புறம்போக்கு நிலத்திலும், தனியார் நிலங்களிலும் கனிம வளங்களை கடத்தும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர்.
- நேற்று நீலமேகம் உறவினர் சுப நிகழ்ச்சிக்காக தனது காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று உள்ளார்.
- வீட்டின் வராண்டாவின் முன் பக்கம் உள்ள இரும்பு கேட்டை மட்டும் பூட்டி உள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தெற்கு தெருவில் ஆற்றுப்பாதை ஓரம் வசிப்பவர் நீலமேகம் (வயது58) இவரது மனைவி ஜோதி (56).இவர்கள் வீட்டின் அருகாமையில் பழைய இரும்பு கடை ஒன்று நடத்தி வருகின்றனர்.நேற்று நீலமேகம் உறவினர் சுப நிகழ்ச்சிக்காக தனது காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று உள்ளார்.கணவர் கார் வரும் என கருதி வீட்டின் வெளிப்பக்கம் உள்ள இரும்புக்கேட்டை பூட்டாமல் மூடிவைத்துள்ளார். மேலும் வீட்டில் உள்பகுதியில் உள்ள கதவு பூட்டாமல் வீட்டின் வராண்டாவின் முன் பக்கம் உள்ள இரும்பு கேட்டை மட்டும் பூட்டி உள்ளார். இரவு 8.30 மணி அளவில் நீலமேகம் கார் வந்த சமயம் கேட்டு திறந்து கிடப்பது கண்டு உள்ளே சென்று ஜோதி பார்த்தபோது பீரோ லாக்கர் அனைத்தும் உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு உள்ளார்.
பீரோவிலிருந்த தோடு 2 பவுன், 2 பவுனில் ஒரு செயின், 3 பவுனில் ஒரு செயின், நெக்லஸ் 6 பவுன் என மொத்தம் 13 பவுன் நகைகள் மற்றும் 70 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த திட்டக்குடி போலீசார் இதுகுறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். கொள்ளை நடந்த தெருவில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒரு வார காலமாக திட்டக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் குறி வைத்து திருடும் கொள்ளையர்ககளால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்