என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத் பால விபத்து"

    • குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடந்தது.
    • மாநிலம் முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என முதல் மந்திரி அறிவித்துள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனால் 5 நாட்களில் பாலம் திடீரென நேற்று முன்தினம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தியது.

    இந்த பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்கிடையே, குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் குஜராத்தின் காந்திநகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் சம்பவம் நடந்தது முதல் இதுவரை மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகள் பற்றி பிரதமர் மோடியிடம் விளக்கி கூறப்பட்டன. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி உள்ளார். இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குஜராத்தில் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நவம்பர் 2-ம் தேதி (நாளை) மாநிலம் முழுவதும் துக்கம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய கொடி மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். குஜராத்தில் அன்று ஒரு நாள் விழாக்களோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எதுவும் நடைபெறாது என பதிவிட்டுள்ளார்

    • இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 140-ஐ கடந்துள்ளது.
    • 100-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஆமதாபாத்

    குஜராத்தில் மோர்பி நகரத்தில் தொங்குபாலம் அறுந்து விழுந்து நேரிட்ட கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 140-ஐ கடந்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த துயர சம்பவத்தில் ராஜ்கோட் தொகுதி பா.ஜ.க. எம்.பி. மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியாவின் குடும்ப உறுப்பினர்கள் 12 பேர் பலியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி அவர் கூறும்போது, "இந்த விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 12 பேரை நான் இழந்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் எனது சகோதரி குடும்பத்தினர்" என கண்ணீருடன் தெரிவித்தார்.

    • உடனடியாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
    • குஜராத்தில் பா.ஜனதா திணறி வருகிறது.

    புதுடெல்லி

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்த விழுந்த சம்பவம், பெரும் ஊழலின் விளைவாக நடந்துள்ளது. அதில் பலியானோரின் ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். பாலம் கட்டுவதில் அனுபவம் இல்லாத கெடிகாரம் தயாரிக்கும் கம்பெனிக்கு பாலம் கட்ட அனுமதி அளித்தது ஏன்? இதற்கு பொறுப்பேற்று குஜராத் அரசு பதவி விலக வேண்டும். உடனடியாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆம் ஆத்மி சவாலாக உருவெடுத்து இருப்பதால், குஜராத்தில் பா.ஜனதா திணறி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×