என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூடுதல் பஸ்"
- கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
- சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- ஆற்காடு சாலையில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.
செய்யாறில் தனியார் ஐடிஐ ,அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அனைத்து கல்வி நிலையங்களும் மாலை ஒரே நேரத்தில் முடிவடைவதால் ஆரணி பகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் பஸ்சில் போட்டி போட்டுக்கொண்டு ஏற்கின்றனர்.
பஸ்சின் உள்ளே இடம் இல்லாததால் படிக்கட்டுகளில், ஜன்னல் வழியே மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கி செல்லும் அவல நிலை உள்ளது.
இதனால் விபத்து ஏற்படும் முன் அரசு போக்குவரத்து துறை மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போக்குவரத்து அமைச்சரிடம் விஜய்வசந்த் எம்.பி. மனு
- நீண்ட காலமாக 16 எ மற்றும் 92 பி என 2 பஸ்கள் மட்டும் இயங்கி வருகிறது.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியத்திற்குட்பட்ட கூற்ற விளாகம், மாத்தார், மேல வெட்டுக்குழி மார்க்கத்தில் புதிய பஸ்களை இயக்க வேண்டும் என திருவட்டார் வட்டார காங்கிரஸ் கமிட்டி, ஏற்றக்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் சார்பாக விஜய் வசந்த் எம்.பி., தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்து ஒரு மனு அளித்தார்.
அதில், திருவட்டார் ஒன்றியம் மேல வெட்டுக்குழி சந்திப்பிலிருந்து மாத்தார், கீழ் மாத்தார், கூற்ற விளாகம் வழியாக திருவட்டார் செல்லும் பிரதான சாலையில் நீண்ட காலமாக 16 எ மற்றும் 92 பி என 2 பஸ்கள் மட்டும் இயங்கி வருகிறது.
தற்போது அதிகப்படி யான மக்கள் இந்த பகுதியில் வசிப்பதால், போதிய பஸ் வசதி இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஆகையால் திருவட்டார் வழியாக மார்த்தாண்டம், தக்கலை மற்றும் ஆசாரிப்பள்ளம் அரசு பொதுமருத்துவ மனைக்கு பொதுமக்கள் சென்று வர உதவியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று குறிப்பிட் டுள்ளார். மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் ஜெபா, மூத்த காங்கிரஸ் தலைவர் தங்க நாடார், ஏற்றக்கோடு பஞ்சாயத்து தலைவர் ஜான் லெனின், மாவட்ட செயலாளர் ஆற்றூர் குமார், வட்டார பொது செயலாளர் ராஜேஷ், செறுகோல் பஞ்சாயத்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் அச்சுதன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- பனியன் நிறுவனங்களின் பணியாற்றுவதற்காக தினமும் வந்து செல்கின்றனர்
- சரியான பஸ் வசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் :
உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களின் பணியாற்றுவதற்காக தினமும் வந்து செல்கின்றனர்.அவ்வாறு வேலைக்கு சென்று வரும் பொதுமக்களுக்கு நேரங்களில் சரியான பஸ் வசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர்.உடுமலை கிளை போக்குவரத்து கழகத்தின் சார்பில், கிராம மற்றும் தொலைதுார வழித்தடங்களில் நுாற்றுக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், கோவை செல்வதற்கு, பழநி மற்றும் உடுமலையிலிருந்து நள்ளிரவு மற்றும் அதிகாலையிலும், பஸ்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தேவையான எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது.ஆனால் உடுமலை - திருப்பூர் இடையிலான பஸ் போக்குவரத்து இரவு, 10:25 மணி வரை மட்டுமே இருப்பதால்ஸபயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.உடுமலை - திருப்பூர் செல்லும் வழிதடத்தில், பல்லடம் மற்றும் குடிமங்கலம், கோட்டமங்கலம் உட்பட பல்வேறு கிராமப்புற மக்களுக்கும், இத்தொலைதுார பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.இக்கிராமங்களிலிருந்து உடுமலைக்கு தொழில் ரீதியாக வரும் மக்கள், இரவு நேரத்தில், கிராமப்புற பஸ்களும் இன்றி, திருப்பூர் செல்லும் பஸ்களும் இல்லாததால் வேறுவழியின்றி, பஸ் ஸ்டாண்டில் தங்கும் நிலை ஏற்படுகிறது.
உடுமலையிருந்து திருப்பூருக்கு இரவு 10:20 மணிக்கும், திருப்பூரிலிருந்து உடுமலைக்கு இரவு 10:25 மணிக்கு இறுதி பஸ்சும் இயக்கப்படுகிறது.இந்த பஸ்சை தவறவிடும் பயணிகள், திருப்பூரிலிருந்து வால்பாறைக்கு 11மணி பஸ்சில் பொள்ளாச்சி சென்று பின் அங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்சில் உடுமலை வந்தடைகின்றனர். இத்தகைய சிரமத்தை தவிர்க்கவும், கிராமப்புற மக்கள் மற்றும் திருப்பூர் செல்லும் பயணிகள் பயன்பெறும் வகையில் இரவில் திருப்பூருக்கு பஸ் இயக்கப்படும் நேரத்தை கூடுதலாக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.
கன்னியாகுமரி:
தக்கலை-நாகர்கோவில் வழித்தடத்தில் காலை, மாலை வேளைகளில் அதிக பயணிகள் கூட்டம் அரசு பேருந்துகளில் நிரம்பி வழிகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக் கட்டில் பயணம் செய்கின்றனர். அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் எந்த பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. பேருந்து ஸ்டாப்புக்கு முன்னரோ, பின்னரோ இறக்கி விட்டு மட்டும் செல்கின்றனர்.
இதனால் யாரும் ஏறவும் முடியாது.இதில் அரசு பேருந்து ஓட்டுனர்களை குறை கூறி எந்த பயனும் இல்லை, ஏனென்றால் பேருந்தில் நிற்க கூட இடமில்லாத நிலை உள்ளது. இலவச பேருந்து சேவை வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு செல்லும் இலவச பேருந்தை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதால், முக்கிய பணிகளுக்கு, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், இலவச பேருந்தில் ஏற முடியாத நிலை உள்ளது. மார்த்தாண்டத்திலிருந்தே பேருந்தில், நாகர்கோவில் வருபவர்களும் பல இன்னலுக்கு உள்ளாவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே காலை-மாலை வேளைகளில், குறிப்பாக திங்கள் முதல் வெள்ளி வரை கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென்று பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்