என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மராத்தான் போட்டி"

    • சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மராத்தான் போட்டி நடந்தது.
    • சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான நேற்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான நேற்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மினி மராத்தான் நடந்தது. வட்டாட்சியர் சாந்தி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை கலாநிதி தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். அதேபோல் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை வட்டாட்சியர் சாந்தி தலைமையில் அலுவலக பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர். இதில் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு, தேசிய குற்ற விசாரணை கழகம் சார்பில் மராத்தான் போட்டி நடைபெற்றது.
    • இதில் நிர்வாகி அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துக்குமார், சுனில்குமார், யாச்பவர், ராயல் சந்தோஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    குமாரபாளையம்:

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, வட்டார போக்குவரத்து அலுவலகம், இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு, தேசிய குற்ற விசாரணை கழகம் சார்பில் மராத்தான் போட்டி நடைபெற்றது.

    இதில் நிர்வாகி அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துக்குமார், சுனில்குமார், யாச்பவர், ராயல் சந்தோஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சேலம் கோவை புறவழிச்சாலை, எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரியின் முன்பு தொடங்கிய மராத்தான் ஓட்டம், பள்ளிபாளையம் சாலை, அபெக்ஸ் காலனி, ஆனங்கூர் சாலை, சேலம் சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் வழங்கி வாழ்த்திப் பேசினார்.

    • மராத்தான் போட்டியில் கொட்டும் மழையிலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
    • மராத்தான் ஓட்டம் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.

    நாகர்கோவில் :

    உலக இதய தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் மாணவர்கள் மற்றும் முதியவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மறவன்குடியிருப்பு கால்வின் மருத்துவமனை சார்பில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான மராத்தான் போட்டி நடைபெற்றது. பட்டகசாலியன்விளையில் இருந்து தொடங்கிய மராத்தான் ஓட்டம் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.

    அங்கு மராத்தானில் பங்கு பெற்றவர்களுக்க போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் பரிசுகளை வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜெர்சி, காலை உணவு, பரிசுகள், பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், டாக்டர்கள் கால்வின் டேவிட்சன், பினு லா கிறிஸ்டி, ஹனுஷ்ராஜ் பதக்கங்கள் மற்றும் பாராட்டு பத்திரங்களை வழங்கினர். அகஸ்டின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மராத்தான் போட்டியில் கொட்டும் மழையிலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    ×