என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கன்னடம்"
- KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே, ₹17.70 கோடிக்கு விற்கப்பட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதன் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான ஆனந்த் ஆடியோ வாங்கியுள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகரான துருவா சர்ஜா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில் இப்படம் பான்-இந்தியா பிரம்மாண்டமாக, ஒரு புதுமையான திரை அனுபவமாக இருக்கும்.
"கேடி - தி டெவில்" 1970களில் இருந்த பெங்களூர் நகரின் தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும், இப்படம் வரலாற்று நிகழ்வுகளில் வேரூன்றிய ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது.
KVN Productions வழங்கும் "கேடி - தி டெவில்" படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார்.
- ’உத்தரகண்டா’ என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2019 முதல் சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த 2012ம் ஆண்டு வெளியான "அட்டக்கத்தி" என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். 2010ம் ஆண்டு வெளியான "நீதானா அவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் களமிறங்கினார்.
தொடர்ச்சியாக தமிழில் "ரம்மி", "பண்ணையாரும் பத்மினியும்", "திருடன் போலீஸ்", "காக்கா முட்டை", "மனிதன்", மற்றும் "தர்மதுரை" போன்ற படங்களில் இயல்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி புகழ்பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சமீபத்தில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து டியர் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடத்த படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'உத்தரகண்டா' என்ற கன்னட படத்தில் துர்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் முதல் கன்னட படம் இதுவே.
இந்நிலையில் அவர் கருப்பு நிற ஜல்லடை ஆடையில் கிளாமர் போட்டோஷூட் செய்து அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " வியரிங் பிளாக் இஸ் எ வே ஆஃப் லைஃப்" என்ற தலைப்பில் பதிவிட்டுல்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யஷ்.
- இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கன்னட திரையுலகில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப்' படத்தில் நடித்தவர் நடிகர் யஷ். இவருக்கு என்று கர்நாடகாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதையடுத்து நேற்று அவரது 38-வது பிறந்த நாளை யொட்டி கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் உள்ள சுரங்கி என்ற இடத்தில் கட் அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த நிலையில் மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நடிகர் யஷ் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம். உங்களின் அன்பை சமூக வலைதளங்களில் செல்போனில் காண்பித்தால் கூட போதும், மனதில் இருந்தால் போதும். கட் அவுட் வைத்து அதனை வெளிப்படுத்த வேண்டாம். இது போன்று எதிர்காலத்தில் யாரும் செயல்பட வேண்டாம் முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று அறிவுரையும் கூறினார்.
இதற்கிடையே மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.
- கன்னடம், மொழியாக அல்லாமல் நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
- கன்னடம் நமது தாய்மொழி மட்டுமின்றி தேசிய மொழியும் கூட.
பெங்களூரு :
கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அத்துடன் கன்னட கொடியையும் ஏற்றினார். அதைத்தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் அவர் உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
கன்னடம் நமது தாய்மொழி மட்டுமின்றி தேசிய மொழியும் கூட. கர்நாடகத்தில் அனைத்து துறைகளிலும் கன்னட மொழி பயன்பாட்டை கட்டாயமாக்க வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும். கன்னடத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்படும்.
கன்னடத்திற்காகவே வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும். கன்னடம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும். கர்நாடகத்தில் அடுத்த 3, 4 ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ரூ.7 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்தால் கர்நாடகம் வளர்ச்சி அடையும். கன்னடம், மொழியாக அல்லாமல் நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
கர்நாடகத்தில் ஒரே ஆண்டில் 8 ஆயிரம் பள்ளி கட்டிட வகுப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். 1956-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் உருவானது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இவ்வாறு வகுப்பறை கட்டிடங்களை கட்டினால் பள்ளி கட்டிடங்களுக்கு பற்றாக்குறை இருக்காது. 'விவேகா' என்ற பெயரில் நாங்கள் பள்ளி கட்டிடங்களை கட்டுகிறோம்.
கர்நாடகத்தில் அரசு துறைகளில் 2½ லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். நடப்பாண்டில் 1 லட்சம் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காலியிடங்கள் நிரப்பும்போது கன்னடர்களுக்கு வேலை கிடைக்கும். கர்நாடகத்தில் நாளை (இன்று) உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதன் மூலம் சுமார் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
கர்நாடகத்தில் 10 வேளாண் மண்டலங்கள் உள்ளன. இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்து அணை, ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வறட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அடுத்த 3, 4 ஆண்டுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் அறிவுசார் அடிப்படையிலான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆராய்ச்சியில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. அதனால் கர்நாடகம் அறிவுசார் மாநிலம் ஆகும். நமது மண்ணில் ஞானம், உழைப்பு, உழைப்புக்கு மரியாதை உள்ளது.
விவசாய வித்யா திட்டத்தின் கீழ் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 6 லட்சம் குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகையை வழங்கியுள்ளோம். 5 லட்சம் பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கு உதவி செய்யும் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். கிராமப்புற இளைஞர்களுக்கு சுயதொழில் செய்ய உதவி செய்கிறோம்.
நாட்டிலேயே அதிக ஞானபீட விருதுகளை பெற்ற மாநிலம் கர்நாடகம்.உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றால் நாம் பல்வேறு புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
நமது கலாசாரம் சிறப்பானது. கன்னட கொடியை எல்லா துறைகளிலும் பறக்க விட வேண்டும். நல்ல கல்வி, சுகாதாரம், வேலை, தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் அடிப்படை வசதிகளை கொண்ட எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்தால் உலகிலேயே கர்நாடகம் சிறந்த மாநிலமாக திகழும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
விழாவில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கன்னட மொழி மீது உணர்வு பூர்வமாக பற்றை வெளிப்படுத்தும் பாடல்களுக்கு பள்ளி குழந்தைகள் நடனமாடினர். இந்த விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்