என் மலர்
நீங்கள் தேடியது "7 ஆண்டு சிறை"
- வாலிபரை குத்தி கொல்ல முயன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கொலை வழக்கில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து மற்றொரு வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம் கம்பம் சந்தை தெருவை சேர்ந்தவர் செந்தில்(28). இவரை கடந்த 17.5.2016-ந்தேதி கலைச்செல்வம்(28), அவரது தம்பி கலையர சன்(26) ஆகிய 2 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றனர்.
இதுகுறித்து கம்பம் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு உத்தம பாளையம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனிடையே கலையரசன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உதவி அமர்வு நீதிபதி சிவாஜி குற்றம்சா ட்டப்பட்ட கலை ச்செல்வத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
- காதல் தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த வழக்கில் 2 பேருக்கும் 7 ஆண்டு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்ைத சேர்ந்தவர் சுருளிராஜ். இவர் கடந்த 17.10.2013ம் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அணைக்கரை ப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது23), என்பவர் தான் காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறி அவரிடம் தகராறு செய்தார். அப்போது சர்ச் தெருவை சேர்ந்த சுகுமார் (20) மற்றும் சுஜாதா (43) ஆகியோரும் அவரை தாக்கி உள்ளனர்.
மேலும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். படுகாயம் அடைந்த சுருளிராஜ் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் கார்த்திக் மற்றும் சுகுமாரை கைது செய்தனர்.
இந்தவழக்கு தேனி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் கொலை முயற்சியில் ஈடுபட்ட கார்த்திக் மற்றும் சுகுமாருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார்.
அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுகவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார். இவ்வழக்கில் அரசு வக்கீலாக விவேகானந்தன், புலன் விசாரணை மேற்கொண்ட போடி இன்ஸ்பெக்டர்கள் பாலகுரு, புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோருக்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.
- வாலிபரை பட்டா கத்தியை காண்பித்து மிரட்டல் விடுத்து ரூ.450ஐ பறித்து சென்ற வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது.
- தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தேனி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பாண்டீஸ்வரி காம்பவுண்டைச் சேர்ந்த முத்துவீரன் மகன் ரமேஷ்குமார் (வயது 37). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தேனி பங்களா மேடு பகுதியில் சோலைத் தேவன் பட்டியைச் சேர்ந்த அவரது நண்பர் மணி என்பவருடன் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் செல்வம் என்ற சூப் செல்வம் (31) என்பவர் ரமேஷ் குமாரை வழிமறித்து அவர் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.450ஐ பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.
ரமேஷ்குமார் சத்தம் போட்டபோது அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே பட்டா கத்தியை காண்பித்து மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் வழிப்பறி செய்த செல்வத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
- விருத்தாசலம் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர்
- வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பெரிய.செந்தில்குமார் வாதாடினார்.
கடலூர்:
கடந்த 2011-ஆம் ஆண்டு விருத்தாசலம் வி.என்.ஆர். நகரை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மனைவி அமுதா வீட்டில் தனியாக இருந்தபோது, சிலிண்டர் வேண்டுமா என கேட்பதுபோல் 4 பேர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். அமுதா சிலிண்டர் வேண்டாம் என்றார். ஆனாலும் அங்கிருந்து செல்லாத 4 நபரும் "தண்ணீர் கொடுங்கள்" எனக் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் சென்று அமுதா வைக் கொடூரமாகத் தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து விருத்தா சலம் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விருத்தாசலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி நேற்று வழங்கினார்.
இதில் குற்றம் சாட்ட ப்பட்ட கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை மற்றும் மணலூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால் இந்தியத் தண்டனைச் சட்டம் 454 பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், இந்தியத் தண்டனைச் சட்ட பிரிவு 394, 397-ன் படி ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், 2 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்புளித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுப விக்க வேண்டும் என உத்தரவிட்டார். தீர்ப்புக்குப் பின் ராஜதுரை மற்றும் சந்திரசேகர் ஆகி யோரை போலீசார் சிறைச்சாலை க்கு அழைத்துச் சென்றனர். மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன், குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தன் ஆகிய 2 பேரையும் நீதிபதி விடுதலை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பெரிய.செந்தில்குமார் வாதாடினார்.