search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூர் வாரும் பணி"

    • நகரின் அனைத்து பகுதிகளிலும் சாக்கடைக் கால்வாயை புதிதாக உயர்த்திக் கட்ட வேண்டும்.
    • மழைநீர் கால்வாய் தூர் வாரும் பணியை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி நகர் பகுதியில் கடந்த, 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோர குப்பைகள் மழைநீருடன் கலந்து மழைநீர் கால்வாயில் அடைப்பு களுடன் ஆங்காங்கே தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகார்படி நேற்று கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதியில் மழைநீர் கால்வாய் தூர் வாரும் பணியை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

    அவருடன் நகராட்சி ஆணையாளர் வசந்தி, உடன் இருந்தார்.

    பின்னர் நகராட்சி தலைவர் பரிதா நவாப் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    கிருஷ்ணகிரி நகராட்சி யில் உள்ள சாக்கடைக் கால்வாய்கள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பல இடங்களில் சாலை மேடாக உள்ளதால் கால்வாய்கள் பல இடங்களில் மிகவும் பள்ள மாகவும், ஆபத்தாகவும் உள்ளது. எனவே நகரின் அனைத்து பகுதிகளிலும் சாக்கடைக் கால்வாயை புதிதாக உயர்த்திக் கட்ட வேண்டும். குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும்.

    இதற்காக 100 கோடி ரூபாயும், மீதமுள்ள பாதாள சாக்கடைக் கால்வாயை அமைக்க 75 கோடி ரூபாயும், சாலை அமைக்க 30 கோடி ரூபாயும், புதிய பஸ் நிலையம் அருகில் திருமண மண்டபம் மற்றும் பல்நோக்கு கட்டடம் கட்ட 50 கோடி ரூபாயும் என மொத்தம் 255 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க ப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தி.மு.க., நகர செயலாளர் நவாப், நகர் மன்றத் துணைத் தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • அலசநத்தம் ஏரி தூர் வாரப்பட்டு, சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • மேயர் எஸ்.ஏ. சத்யா ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    ஓசூர்,

    ஓசூர் 2-வது சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.23.5 லட்சம் மதிப்பில், ஓசூர் அலசநத்தம் ஏரி தூர் வாரப்பட்டு, சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு, உதவி கலெக்டர் சரண்யா முன்னிலை வகித்தார்.ஓசூர் மக்கள் சங்க தலைவர் சரவணன் வரவேற்றார். மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் ஆஞ்சி, பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் தமிழ்வாணன், மனிதவள மேம்பாட்டு துறை முதுநிலை மேலாளர் பாபு மற்றும் மக்கள் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணாராவ், ராகவன், ஆடிட்டர் மணி, செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • எந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    வடகிழக்கு பருவ மழை ஒட்டிதமிழகம் முழுதும் கனத்த மழை பெய்யக்கூடும் எனஇந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.குறிப்பாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவம் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    இன்று விழுப்புரம் நகரில் செல்லும் அனைத்து மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் நகராட்சி சார்பில் எந்திரங்கள் மூலம் தூர் வாரும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இன்று அதி காலை முதல் மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டார். திரு.வி.க. சாலையில் செல்லும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களையும், சிலப்பதிகார தெரு, வி.மருதூரில் செல்லும் பிரதான கோலியனூரன் வாய்க்கால்களை பார்வையிட்டார். அப்பொழுது ஒரு சில இடங்களில் வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ள சிறு பாலங்கள் குறுகிய அளவில் கட்டப்பட்டுள்ளது கண்டறிந்தார்.

    இது சம்பந்தமாக கலெக்டர் கூறுகையில், மாவட்ட முழுவதும் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் செல்லும் பாதைகளை பார்வையிட்டு வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதிக்குள் இப்பணிகள் குறித்து அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து அனிச்சம் பாளையம் பகுதியில் செல்லும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களையும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அறிவுரை வழங்கினார். நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா, பொதுப் பணித்துறை நீர் ஆதாரம் உட்கோட்ட பொறியாளர் சோபனா நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சிவசேனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×