என் மலர்
நீங்கள் தேடியது "தந்தை-மகள் பலி"
- குஜராத்தி படேல் சமூகத்தினரால் நடத்தப்படும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
- அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
குஜராத்தை சேர்ந்தவர் பிரதீப் படேல் (வயது 56). மெஹ்சானாவில் உள்ள கனோடா கிராமத்தை சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் 2019-ம் ஆண்டு அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வசித்து வந்தார்.
அங்குள்ள அக்கோ மாக் கவுண்டியில் லாங்க் போர்ட் நெடுஞ்சாலையில் குஜராத்தி படேல் சமூகத்தினரால் நடத்தப்படும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பிரதீப் படேல் தனது மகள் ஊர்மி யுடன் (வயது 24) அதிகாலையில் கடையை திறக்க சென்றார். அவர்கள் கடைக்குள் சென்றபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில் தந்தை-மகள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் பிரதீப் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஊர்மியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அது பலனளிக்காமல் ஊர்மி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜார்ஜ் ப்ரேசியர் டெவன் வார்டன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பள்ளிக்கு அழைத்து சென்றபோது பரிதாபம்.
- மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.
கொழிஞ்சாம்பாறை,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியம் பகுதியை சேர்ந்தவர் கோபகுமார் (வயது 57). இவரது மகள் கவுரி (17).
கவுரி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று காலை வழக்கம் போல மகளை பள்ளியில் விடுவதற்காக கோபகுமார் தனது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றார்.
அவர்கள் சீர்தார் சந்திப்பு பகுதியில் சென்றனர். அப்போது அந்த வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து வேகமாக வந்த கண்டைனர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கோபகுமார் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். அவர்கள் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் தந்தை, மகள் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தந்தை-மகள் உடல்களை மீட்டு கொல்லம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பீகாரை சேர்ந்த லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.