search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பேர் சிறையில் அடைப்பு"

    • ரசூல் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை-ஊத்துக்குளி மெயின் ரோடு சிறுக்களஞ்சி அருகில் ரோட்டில் பாதை கருப்ப ணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சில மாதத்தி ற்கு முன்பு நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டுப் போனது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரசூல் மொய்தீன் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சென்னை புழல் பகுதியில் தங்கி இருந்ததாகவும், இவர் மீதுள்ள பழைய வழக்கு சம்பந்தமாக கோவைக்கு வந்து சென்றுள்ளார்.

    அதன் பின்னர் திருப்பூர் பகுதியில் தங்கியிருந்து அங்கு வேலை செய்து வந்துள்ளார்.

    இவர் சென்னிமலை அடுத்துள்ள சிறுக்களஞ்சி கோவிலில் பணம் ரூ.20 ஆயிரத்தை உண்டியலை உடைத்து திருடி சென்றதா கவும், இவரிடம் இருந்து 6 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்ப ட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர் .

    மேலும் இவரை கைது செய்து பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னி மலை அடுத்துள்ள முகாசி ப்பிடாரியூர் பகுதியில் கஸ்தூரி என்பவரது வீட்டில் நான்கு பவுன் தங்க நகை திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த திருட்டு வழக்கில் மேட்டூரை சேர்ந்த கனகராஜ் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் இந்த வீட்டில் 4 பவுன் தங்க நகையை திருடி சென்றது போலீசாரின் விசார ணையில் கண்டறியப்பட்டது.

    அவரிடம் இருந்து 4 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. இவரை போலீசார் கைது செய்து பெருந்துறை கோ ர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
    • 2 பேரும் மூதாட்டியை தாக்கி தங்க நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது.

    பவானி:

    பவானி காளிங்கராய ன்பாளையம் மூவேந்தர் நகர் பகுதியில் வசிப்பவர் ராஜா. இவருடைய மனைவி உமா சாந்தி. ராஜாவின் தாய் குஞ்சம்மாள் (94) வசித்து வந்து உள்ளனர். ராஜாவின் மனை வி உமா சாந்தி கவுந்தப்பாடி புதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    அவரை தினசரி ராஜா தனது வாகனத்தில் சென்று வீட்டிற்க்கு அழைத்து வருவது வழக்கமாகக் கொண்டுள்ளார். சம்பவத்தன்று தனது வீட்டில் தாய் குஞ்சமாவை விட்டுவி ட்டு மனைவியை அழைத்து வர ராஜா சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது தனது தாய் ரத்த வெள்ளத்தில் பலத்த காயத்துடன் கழுத்து மற்றும் கைகளில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றது தெரியவந்தது.

    காயத்துடன் அவதி பட்டு க்கொண்டு இருந்த அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ மனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜகவர் உத்தர வுபடி பவானி டி.எஸ்.பி. சித்தோடு இ ன்ஸ்பெக்டர் உட்பட போலீ சார் சம்பவ இடம் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொ ண்டனர். அப்பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு விசா ரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் சித்தோடு போலீசார் கவுந்தப்பாடி மெயின் ரோடு பெரியார் நகர் பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசார ணை மேற்கொ ண்டனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு முரணாக பதில் அளித்த நிலையில் சித்தோடு போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட னர்.

    விசாரணையில் பவானி மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (45), திருப்பூர் வருவாய்த்து றையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் இவரும், இவரின் நண்பரான நாமக்கல் மாவட்டம் குமராபா ளைய த்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பாலூ (47) என்பது தெரியவந்தது.

    மேலும் குடிப்பழ க்கத்தி ற்கு அடிமையான இவர்கள் பணம் தேவை ப்பட்ட நிலையில் ராஜாவி ன் தாய் குஞ்சம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை கண்டு உள்ளே நுழைந்த 2 பேரும் மூதாட்டியை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 3 பவுன் கொண்ட 2 தங்க வளையல்கள் என 5 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் சரவணன் மற்றும் பாலூ ஆகிய 2 பேரையும் கைது செய்து ஈரோடு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் கோபி மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

    • 26 மூட்டைகளில் ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு எடுத்து சென்று விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.
    • 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையில் அலுவலர்கள் நேற்று கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் பசவண்ணகோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 26 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததும், அந்த அரிசியை பர்கூர், மல்லப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கர்நாடகாவிற்கு எடுத்து சென்று, அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து 1300 கிலோ ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் வந்த ஆந்திர மாநிலம் தளவாய் கொத்தப்பள்ளியை சேர்ந்த கணேஷ் (வயது 30), கலீம்(22) ஆகிய 2 பேரை பிடித்து கிருஷ்ணகிரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    அதே போல தாசில்தார் இளங்கோ தலைமையிலான குழுவினர் வேப்பனப்பள்ளி அருகே நாடுவானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் அதிகாரிகளை பார்த்ததும், மோட்டார்சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து மோட்டார்சைக்கிளை சோதனை செய்த போது அதில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த ரேஷன் அரிசி மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அரிசியை கடத்தி வந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பள்ளி நிர்வாகத்தினர் ரூ.42 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டனர்.
    • மங்கையர்கரசி மற்றும் அலுவலக உதவியாளர் திம்மராயன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் தனியார் மழலையர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை மஞ்சுளா என்பவரிடம் இருந்து ஓசூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த அரவிந்த் வாங்கி உள்ளார்.

    இந்த பள்ளிக்கு ஏற்கனவே பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் இல்லாத நிலையில், பள்ளி நிர்வாகி அரவிந்த் புதிதாக தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கொண்டார்.

    இந்தநிலையில் வருவாய்த்துறையிடம் பள்ளிக்கு பொது கட்டிட அனுமதிக்கு அரவிந்த் விண்ணப்பித்தார். கடந்த 11-ந்தேதி ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், துணை தாசில்தார் மங்கையர்கரசி ஆகியோர் அந்த மழலையர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சில குறைபாடுகளை அவர்கள் கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும் என கூறினர்.

    மேலும் பொது கட்டிட அனுமதிக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தாசில்தார் கவாஸ்கர் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பள்ளி நிர்வாகத்தினர் ரூ.42 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத பள்ளி நிர்வாகி அரவிந்த், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.42 ஆயிரத்தை பள்ளி நிர்வாகி அரவிந்திடம் கொடுத்து தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் ஆகியோரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். போலீசாரின் ஆலோசனையின் பேரில் அரவிந்த் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் கவாஸ்கர், துணை தாசில்தார் மங்கையர்கரசி ஆகியோரை சந்தித்தார்.

    அப்போது அவர்கள் அலுவலக உதவியாளா் திம்மராயனிடம் பணத்தை கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து அரவிந்த் பணத்தை அலுவலக உதவியாளரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் தாசில்தார் கவாஸ்கர், துணை தாசில்தார் மங்கையர்கரசி மற்றும் அலுவலக உதவியாளர் திம்மராயன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.

    பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார், 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து தாசில்தார், துணை தாசில்தார் ஆகிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அலுவலக உதவியாளர் திம்மராயன் விடுவிக்கப்பட்டார். பின்னர் கைதான 2 பேரையும் கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை பெருந்துறை போலீசார் தேடி வந்தனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை, நால்ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையை பரமசிவம் (வயது 58) என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். கடையின் முன் பகுதியில் இரவு நேர காவலாளி மட்டும் இருந்துள்ளார்.

    நள்ளிரவு கடையின் பின்பகுதியில் மர்ம நபர்கள் துளையிட்டு நகைக்கடைக்குள் சென்று நகை வைத்திருக்கும் லாக்கர் அறையை திறக்க முயன்றனர்.

    அப்பொழுது அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் நகைக் கடை க்குள் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். அலாரம் அடிப்பதை கண்ட காவலாளி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பெருந்துறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம்கோயல், இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொ ண்டனர்.

    இதனையடுத்து தனிப்படைகள் அமைத்து நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை பெருந்துறை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கேமிராவில் பதிவான உருவங்களை வைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் பெருந்துறை குன்னத்தூர் ரோடு, மருத்துவக் கல்லூரி யின் அருகே அமைந்துள்ள மேம்பாலத்தின் அருகில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டு இருப்பதாக பெருந்துறை போலீசார் தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் பெருந்துறை நகைக்கடையில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற விவரத்தை ஒப்புக்கொண்டனர்.

    மேலும் அவர்களை விசாரிக்கையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 47), விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பகுதியை சேர்ந்த வேலன் (வயது 45) என்பது தெரிய வந்தது.

    பின்னர் அவர்கள் 2 பேரையும் பெருந்துறை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் தமிழக- கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து வேனில் கடத்திய சுமார் 7 ஆயிரம் லிட்டர் மதிப்புள்ள ஸ்பிரிட்டை போலீசார் பறி முதல் செய்தனர்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த தமிழக- கர்நாடகா எல்லை யில் அமைந்துள்ளது புளி ஞ்சூர் சோதனைசாவடி. இங்கு போலீசார் மற்றும் வனத்துறை சோதனை சாவடி அமைந்துள்ளது.

    கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் வாகன ங்களும், தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் வாகனங்கள் இங்கு சோத னைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் கர்நாடக வில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு மது வுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் தமிழக- கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அநத வழியாக கேரளா பதிவு எண் கொண்ட ஒரு ஈச்சர் வேன் வந்தது. போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெங்காய மூட்டை இருந்தது.

    மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் வெங்காய மூட்டைகளை இறக்கி பார்த்த போது வெங்காய மூட்டை அடியில் கேன்களில் ஸ்பிரிட் இருந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரளாவை சேர்ந்த ஹரி மற்றும் வினோத் என்பதும், அவர்கள் மைசூரில் இருந்து கேரளாவுக்கு மதுவுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் வெங்காய மூட்டைக்கு அடியில் பதுக்கி கடத்தி சென்றதும் தெரியவந்து.

    இதையடுத்து வேனில் கடத்திய சுமார் 7 ஆயிரம் லிட்டர் மதிப்புள்ள ஸ்பிரிட்டை போலீசார் பறி முதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×