என் மலர்
நீங்கள் தேடியது "பெட்ரோல் ஊற்றி"
- மர்ம நபர் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.
- இதில் 2 மோட்டார்சைக்கிளும் முழுவதுமாக எரிந்து சேதமானது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் மணிக்கூண்டு அருகே லலிதா ஓட்டல் சந்து பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.
நேற்று இரவும் வழக்கம் போல் குடியிருப்பு வாசிகள் தங்களது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த கதிரவன் மற்றும் முனீர் அகமது ஆகியோருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இரவு 11.30 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் 2 மோட்டார்சைக்கிளும் முழுவதுமாக எரிந்து சேதமானது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர் ஒருவர் 2 மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரிப்பது பதிவாயிருந்தது.
இந்த செயலில் ஈடுபட்டவர் பழைய குற்றவாளியாக இருக்கலாம் என போலீசார் சந்திக்கின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 5 லிட்டர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்
- அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்
பு.புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சத்தியமங்கலம் சாலையில் உள்ள நேருநகர் என்ற பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், 10 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான முத்துநகர் பகுதியை சேர்ந்த தனசேகர் (33) என்பவர் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு நேற்று மாலை வந்தார்.
அப்போது என் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்து விட்டனர் என்று கூறி போலீஸ்தான் என் சாவுக்கு காரணம் என்று கூறியபடி தான் கொண்டு வந்திருந்த 5 லிட்டர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் தனசேகர் மீது கொலை மிரட்டல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
கைதான தனசேகர் மீது புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் திருப்பூர் மாவட்டம் சேவூர் போலீஸ் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- போலீசார் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் தினசரி மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது.
இதில் ஜோதிகமலம் என்பவர் தினசரி சந்தையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் நகராட்சி நிர்வாகத்துக்கு வாடகை நிலுவை தொகை வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் வாடகை நிலுவை தொகை வசூலிப்ப தற்காக ஜோதி கமலம் என்பவரின் கணவர் ரவிச்சந்திரன் நடத்தி வரும் நகராட்சிக்கு சொந்தமான மளிகை கடைக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழி யர்கள் சென்றனர்.
அப்போது தினசரி சந்தைக்கு நிலுவை தொகை உள்ளதால் இந்த மளிகை கடையை பூட்டி சீல் வைக்க போகிறோம் என அதிகாரிகள் அவரிடம் கூறினர்.
இதற்கு ரவிசந்திரன் அதிகாரிகளிடம் என் பெயரில் உள்ள கடைக்கு முறையாக வாடகை செலுத்தி வருகிறேன். தினசரி சந்தை வாடகை நிலுவை பாக்கி தொகைக்கும் இந்த கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இது பற்றி ஏன் முன்கூட்டியே நோட்டீசு வழங்க வில்லை. தினசரி சந்தை வாடகை பாக்கி தொகை வைத்துள்ள ஜோதி கமலத்துக்கு வேண்டும் என்றால் நோட்டீசு வழங்குகள்.
ஆனால் இந்த கடையை சீல் வைக்க அனுமதிக்க மாட்டேன் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ரவிசந்திரன் திடீரென பிளாஸ்டிக் டப்பாவில் தான் வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற கடைகாரர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு இருந்து திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- குடும்பத்தகராறில் மணிகண்டன் தீ வைத்துக்கொண்டார்.
- இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி, காலிங்கராயன்பாளையம் கிழக்கு முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவரது மனைவி உமா மகேஸ்வரி.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மணிகண்டன் பவானி கூடுதுறையில் பரிகார புரோகிதராக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் கிடைக்காததால் பல்வேறு இடங்களில் மணிகண்டன் கடன் வாங்கி உள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று குடும்பத்தகராறில் திடீரென்று பெட்ரோலை எடுத்து தனக்கு தானே ஊற்றி மணிகண்டன் தீ வைத்துக்கொண்டார்.
பின்னர் மணிகண்டன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- 4 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கு
- மரவள்ளி கிழங்கு முழுவதும் எரிந்து.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி டி. பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியனுக்கும் முன்விரோத தகராறு இருந்து வருகிறது. இந்த முன் விரோதம் காரணமாக ஜெயராமனுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்குவை, சம்பவத்தன்று சுப்பிரமணியன் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதில் 4 ஏக்கர் மரவள்ளி கிழங்கு முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ஆகும். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.