search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளான்கள்"

    • கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது.
    • மூர்த்தி, பூமாதேவி மற்றும் 2 வயது குழந்தை ஹேமலதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் அருகே உள்ள கருத்தலக்கம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது30). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூமாதேவி (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தனது வீட்டு அருகே விளைந்த காளான்களை பறித்து பூமாதேவி சாப்பிட்டார். மேலும் தனது குழந்தை மற்றும் கணவருக்கும் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு உண்டானது. உடனடியாக நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் மூர்த்தி, பூமாதேவி மற்றும் 2 வயது குழந்தை ஹேமலதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சாப்பிட்டது விஷக்காளான் வகையை சேர்ந்தது என்பதும் அதனால் தான் இவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • முத்துக்காளான், சிப்பிக்காளன், குடைக் காளான், கும்பக் காளான், குச்சி காளான் போன்று பல்வேறு ரக உணவு வகை காளான்கள் தற்போது மழை காரணமாக அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    • பெரும்பாலும் புதர் மண்டிய பகுதிகளுக்குள் காளான்கள் விளைவதால் மலைப்பகுதிகளில் அதிகம் பழகிய நபர்கள், மற்றும் விவசாயிகள் இதனை தேடிப்பிடித்து பறித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. போடியை சுற்றிலும் மலைப்பகுதி அதிகம் என்பதால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக இயற்கையாக விளையும் உணவுக்கு பயன்படுத்தப்படும் காளான்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது.

    மழைக்காலத்தில் இடி, மின்னல் தோன்றும் பகுதிகளில் ஈரப்பதம் அதிகம் உள்ள நிலங்களில் இதுபோன்ற இயற்கை காளான்கள் வெடித்து கிளம்புவது இயல்பு.

    முத்துக்காளான், சிப்பிக்காளன், குடைக் காளான், கும்பக் காளான், குச்சி காளான் போன்று பல்வேறு ரக உணவு வகை காளான்கள் தற்போது மழை காரணமாக அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் புதர் மண்டிய பகுதிகளுக்குள் இது போன்ற காளான்கள் விளைவதால் மலைப்பகுதிகளில் அதிகம் பழகிய நபர்கள், மற்றும் விவசாயிகள் இதனை தேடிப்பிடித்து பறித்து வருகின்றனர்.

    இவ்வாறு பறித்து வரக்கூடிய காளான்கள் மார்க்கெட் மற்றும் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்கப்பட்டு வருகிறது. சைவப் பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய உணவாக காளான் உள்ளது.

    மேலும் அசைவ உணவை தவிர்ப்பவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்பதால் இயற்கை காளான்களுக்கு மதிப்பு அதிகம் உள்ளது.

    பெரும்பாலும் செயற்கை காளான்களை விட இயற்கை காளான்களில் புரதங்களும் ஊட்டச்சத்துகளும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளது.

    இயற்கையாக உற்பத்தி ஆகின்ற மக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாது வகைகளும், உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் அமினோ அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளதால் இவ்வகை காளான்கள் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஆரோக்கியம் தரக்கூடிய இயற்கை உணவாக உள்ளது. வருடம் முழுவதும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் காளான்கள் கிடைத்து வந்தாலும் மழைக்காலங்களில் மட்டுமே அதிகளவில் இயற்கையாக பூமியில் உற்பத்தியாகும் காளான்கள் கிடைப்பது அரிது.

    இதனால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்று உணவிற்காக பயன்படுத்தி வருகின்றனர். ஒரே நாளில் உற்பத்தியாகி அன்றே அழியக்கூடியது என்பதால் இயற்கை காளான்களை இருப்பு வைத்து விற்க முடியாது.

    ஒரு நாள் தாமதித்தாலும் அழுகி புழுக்கள் வைத்து உண்பதற்கு உபயோகமற்றதாக மாறிவிடும் என்பதால் பறித்து வரும் அன்றே இவைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற காளான்களில்தான் ஊட்டச்சத்து அதிகம் உண்டு என்பதால் இவ்வகை காளான்கள் தற்போது போடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

    ×