search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் குறைதீர்வு கூட்டம்"

    • விசாரணையில் கடலூர் அடுத்த வெள்ளக்கரை காலனியை சேர்ந்த அன்பழகன், அவரது மனைவி எனபது தெரியவந்தது.
    • கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு கணவன், மனைவி என 2 பேர் வந்தனர். அவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இவர்களிடம் மண்ணெண்ணெய் பாட்டில் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடலூர் அடுத்த வெள்ளக்கரை காலனியை சேர்ந்த அன்பழகன், அவரது மனைவி எனபது தெரியவந்தது. இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் அருகில் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால், அதில் உள்ள விஷ பூச்சிகள் கூரை வீட்டிற்குள் வருகிறது. இதனால் 2 மகள்களும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இங்கு புதிய வீடு கட்ட மானியம் கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முடிவு செய்ததாக போலீசாரிடம் அன்பழகன் கூறினார்.

    இதையடுத்து தங்களின் பிரச்சனைகளுக்கு மனு அளித்துதான் தீர்வு காணவேண்டும். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்று எச்சரித்து கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
    • கலெக்டர் தலைமையில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் குறைகளை கேட்டறிந்தார்.

    மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப் பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 180 மனுக்களை கலெக்டர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டார்.

    தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் துறை தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபானைமை யினர் நல அலுவலர் முரளி, உதவி ஆணையாளர் கலால் சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) மணிமேகலை, மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் புகார்
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். காட்பாடி அருகே உள்ள கொடுக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் புகார் மனு ஒன்று அளித்தார்.

    அதில் ஊராட்சி செயலாளர் மீது நான் ஊழல் தொடர்பான புகார் அளித்தேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று என்னை புகாரை வாபஸ் பெற கோரி மிரட்டி கும்பல் ஒன்று அடித்து தாக்கினர். என்னையும் என் குடும்பத்தினரை பழிவாங்க நினைக்கின்றனர். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த சீத்தம்மாள் (76) என்பவர் காட்டுப்புத்தூர் கிராமத்தில் தனது பெயரில் உள்ள சொத்தை பாகப்பிரிவினை செய்யவிடாமல் மறுக்கும் மகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    ×