என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லட்சுமி நரசிம்மர் கோவில்"
- ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வரும் நிலையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கோவில் பட்டாச்சாரியார் முன்னிலையில்சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வரும் நிலையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் கலந்து கொண்டு பந்தக்கால் நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கோவில் பட்டாச்சாரியார் முன்னிலையில்சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் செயலர் மதனா, ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன் மற்றும் கிராம மக்கள், கோவில் பணியாளர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளாபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் 600 ஆண்டுகள் பழமையானது என தொல்லியல்த்துறை ஆய்வில் தகவல்
- இக்கோவிலின் சிறப்பு கருவறையைச் சுற்றி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களாகும்
கும்ளாபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என வரலாற்று ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது-
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்ப டுத்தும் குழுவும் இணைந்து இம்மா வட்டத்தின் பல்வேறு பகுதி களில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாறை ஓவியங்கள், கல்திட்டைகள், கல்வெட்டுகள், நடுகற்கள், கோவில்கள் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றின் வரலாற்றுச் சிறப்பினை ஆராய்ந்து, ஆவணப்படுத்தி, பொதுமக்கள் அறியும் வண்ணம் வெளியிட்டும் வருகிறது.
அந்த வகையில் தளி அருகே கும்ளாபுரத்தில் மேற்கொண்ட ஆய்வி ன்போது அந்த ஊர் லட்சுமி நரசிம்மர் கோவில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்த ராஜ் கூறியதாவது:
கும்ளாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியை ஆண்ட விஜயநகரர் காலத்தில் கட்டப்பட்டது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. கருவறை அர்த்தமண்டபம், முகமண்டபம் அனைத்தும் கருங்கல்லால் வேலைப்பா டுகளுடன் கூடியதாகக் கட்டப்பட்டுள்ளது. கருவ றைக்கு மேல் உள்ள விமானப்பகுதி அண்மைக் காலத்தைச் சேர்ந்தது.
இக்கோவிலின் சிறப்பு கருவறையைச் சுற்றி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களாகும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜய குமார், வரலாற்று ஆய்வாளர் சரவணக்குமார், ராமச்சந்திரன் மற்றும் அவ்வூரைச் சேர்ந்த சிக்கண்ணா மற்றும் பலர் உடனிருந்தனர்.
- கோவிலுக்கு நேர் எதிரே மகாலட்சுமியின் வடிவமான வில்வ மரம் உள்ளது.
- அப்போது லட்சுமி நரசிம்மர் சுயம்பாக இங்கு எழுந்தருளியது பிரசன்னத்தில் தெரிய வந்தது.
கடன் தொல்லை போக்கும் லட்சுமி நரசிம்மர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
மிகப்பழமையான இந்த கோவில் கால மாற்றத்தால் அழிந்து விட்டது.
5 வருடத்துக்கு முன்பு ராஜ அரசு என போற்றப்படுகின்ற அரச மரத்தடியில் புற்றுக்கண்ணில் சுயம்புவாக தோன்றினார் லட்சுமி நரசிம்மர்.
கோவிலுக்கு நேர் எதிரே மகாலட்சுமியின் வடிவமான வில்வ மரம் உள்ளது.
இந்த வில்வ மரத்தின் நடுவில் உள்ள இடைவெளியில் நரசிம்மர் சுயம்பு வடிவமாக காட்சி தருகிறார்.
இங்கு பக்தர்கள் முன்னிலையில் தெய்வ பிரசன்னம் பார்க்கப்பட்டது.
அப்போது லட்சுமி நரசிம்மர் சுயம்பாக இங்கு எழுந்தருளியது பிரசன்னத்தில் தெரிய வந்தது.
லட்சுமி நரசிம்மரின் மகிமையால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
திருமணம் தடைபட்டவர்கள் நெய் தீபம் ஏற்றி அரச மரத்தில் மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிற்றை கட்டி 12 நாள், 12 முறை (பிரதட்சனம்) வலம் வந்துபக்தியோடு பூஜை செய்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தில் தொட்டில் கட்டி 12 நாள் 12 முறை வலம் வந்து நெய் தீபம் ஏற்றினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் கூறுகிறார்கள்.
பக்தர்கள் இங்கு தொழில் அபிவிருத்தி, கல்வியில் வெற்றி பெற நோய்களில் இருந்து விடுபட கடன் தொல்லை நீங்க தொடர்ந்து ஹோமங்களும், பூஜைகளும் நடந்து வருகிறது.
- இந்த ஆண்டு நடைபெறும் ரம்ஜான் விழாவுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
- கோவில் வளாகத்தில் நடந்த இப்தார் விருந்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் மதப்பிரச்சினைகள் தலைதூக்கி வரும் நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 100 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் ரம்ஜான் விழாவையொட்டி இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் வெட்டிச்சிறா பகுதியில் 100 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவில் அருகே சுமார் 30 முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
அவர்கள் உதவியுடன் ரூ.15 லட்சம் செலவில் இக்கோவில் சீரமைக்கப்பட்டது. அதன்பின்பு இக்கோவிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் அப்பகுதி முஸ்லிம்களும் சமயசார்பற்ற முறையில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்தநிலையில் இந்த ஆண்டு நடைபெறும் ரம்ஜான் விழாவுக்காக இக்கோவில் நிர்வாகம் சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த விருந்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.
விருந்தில் காய்கறிகள், கஞ்சி மற்றும் பழ வகைகள் இடம்பெற்றிருந்தன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இக்கோவில் கமிட்டியில் சில முஸ்லிம் நபர்களும் இடம்பெற்றிருந்தனர்.
இது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இக்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
- ஸ்ரீதேவி, பூதேவிக்கு மகா தீபாராதனை நடந்தது
- தங்க கேடயத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட் டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதே விக்கு சிறப்பு பூஜை, அபி ஷேகம், அலங்காரம் செய் யப்பட்டு மகா தீபாரா தனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மாலையில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
- நான்கு மாட வீதிகளில் சாமி உலா
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சோளிங்கர்:
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் எரும்பியப்பா சாற்றுமுறை உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி மற்றும் எரும்பியப்பா சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி மற்றும் எரும்பியப்பா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தனித்தனி தங்க கேடயத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் நான்கு மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்