என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜி20 அமைப்பு"
- ஜி20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு இந்தியா வசம் இருக்கும்.
- ஜி20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்தார்.
வாஷிங்டன்:
இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும்.
இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் கூறுகையில், இந்தியா, அமெரிக்காவின் வலுவான நட்புறவு நாடு. பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு நெருக்கடி ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில் ஜி20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பேற்க உள்ள இந்தியாவிற்கும், எனது நண்பர் பிரதமர் மோடிக்கும் எனது ஆதரவை அளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- லோகோவில் தாமரையின் மீது பூமிப்பந்து வைக்கப்பட்டிருப்பது போல உள்ளது.
- காங்கிரஸ் கொடியை தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரு மறுத்து விட்டார்.
புதுடெல்லி:
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்தியாவின் தேசியக் கொடியில் உள்ள நான்கு வண்ணங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள அந்த லோகோவில், தாமரையின் மீது பூமிப்பந்து வைக்கப்பட்டிருப்பது போல உள்ளது.
பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையை ஜி20 லோகோவில் பயன்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "70 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரு மறுத்து விட்டார். தற்போது பாஜக ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்க உள்ள நிலையில் அதற்காக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ லோகோவில் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் மோடியும் பாஜகவும் வெட்கமின்றி தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் இழக்கமாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்' என தெரிவித்துள்ளார்.
- சுதந்திரத்தின் 75வது ஆண்டில் இந்தியாவுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்
- இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அதிக பெருமையை கொண்டு வரும்.
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிவரை இந்தியா இந்த பொறுப்பில் இருக்கும். இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்
அப்போது பேசிய அவர், இந்தியாவின் ஜி20 தலைமை பதவியில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
'இந்தியா இப்போது ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது. இது, சுதந்திரத்தின் 75வது ஆண்டில் இந்தியாவுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும், இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அதிக பெருமையை கொண்டு வரும். சுதந்திரத்திற்குப் பிறகு அனைத்து அரசாங்கங்களும், இந்திய மக்களும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் தங்களின் பங்களிப்பை வழங்கினர். உலகை நம்முடன் அழைத்துச் செல்லும்போது, நாமும் புதிய ஆற்றலுடன் முன்னேற வேண்டும்' என மோடி குறிப்பிட்டார்.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் பங்களிக்க ஜி20 தலைவர் பதவி இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்று வெளியுறவு அமைச்சகம் திங்களன்று கூறியுள்ளது. இந்தியாவின் ஜி20 தலைமை பதவியின் லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளம் ஆகியவை நாட்டின் செய்தி மற்றும் முன்னுரிமைகளை உலகிற்கு பிரதிபலிக்கும் என்றும் கூறியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்