search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிவில்லியர்ஸ்"

    • இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் இடம் பிடித்த கோலி பின்னர் 2 டெஸ்ட்டில் இருந்து விலகினார்.
    • கோலி டெஸ்ட்டில் விளையாடததற்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

    இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்களும் இங்கிலாந்து 253 ரன்கள் எடுத்தது. இன்று 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதலில் இடம் பிடித்தார். பின்னர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதற்கு என்ன காரணம் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் கேள்விக்கு விராட் கோலியின் நண்பரும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரருமான டிவில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார். அதில், விராட் கோலியின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதாக தெரிவித்தார்.

    இதனால் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கூட சந்தேகம் தான் என தகவல் வெளியாகி உள்ளது.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • சூழலுக்கு தகுந்தார் போல் இந்திய அணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்தது.

    இதனையடுத்து இந்திய அணி சுழற்பந்து வீச்சை உபயோகப்படுத்தியது. இதனால் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசினார். இறுதியில் இங்கிலாந்து அணி 64.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது.

    அதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசினார். அதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 127 ரன்கள் தான் குறைவாகும்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் கிண்டலடித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சூழலுக்கு தகுந்தார் போல் இந்திய அணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும். எப்படி ஆடினால் நீங்கள் முன்னிலை பெறுவீர்கள் என்பதில் தான் போட்டியின் மகிமையே இருக்கிறது.

    இதனை நீங்கள் புத்திசாலித்தனம், தைரியம் அல்லது பேஸ் பால் என்று எல்லாம் அழைக்க தேவையில்லை.

    போட்டியின் சூழல் மாறினால் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களுடைய தருணத்திற்காக நீங்கள் மீண்டும் காத்திருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களால் சூழலைப் புரிந்து கொண்டு விளையாட முடியவில்லை என்றால் அது நிச்சயம் உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

    நீங்கள் பேஸ் பால் அல்லது எந்த மாதிரி பாலை விளையாடினாலும் சரி. உங்களுக்கு அது நன்மையை கொடுக்காது.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
    • கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் ஆட்டம், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் டிசம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறும். அதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டி 26-ந் தேதி செஞ்சுரியனில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி கேப்டவுனில் நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் சுற்றுப்பயணம் குறித்து தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

    இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு கடும் சவாலாக ஜஸ்பிரீத் பும்ரா இருப்பார். அவர்களுக்கு கடும் நெருக்கடியை அவர் கொடுப்பார். பும்ரா பந்து வீசத் தொடங்கினால், எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவே மாட்டார். அவரிடம் அனைத்து திறமைகளும் உள்ளன.

    கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். அவர் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். ஸ்டெம்பை நோக்கி பந்துகளை வீசுவதில் அவர் வல்லவர்.

    இந்த முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு பெரிய அளவிலான அச்சுறுத்தலைக் கொடுக்கும்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர்.
    • கில் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதையும் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

    ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதன்படி ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சுப்மன் கில் நல்ல வீரர் தான். ஆனால் அந்த சீனியர் வீரருக்கு கேப்டன் பதவியை கொடுத்திருக்கலாம் என தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    சுப்மன் கில் திறமையான வீரர். கேப்டன் பதவிக்கு தகுதியானர். ஆனால் குஜராத் அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் சீனியர் வீரரான கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் வாய்ப்பை கொடுத்திருக்கலாம். குஜராத் அணியின் முடிவு பலனளிக்கலாம். நான் அதைத் தவறு என்று சொல்லவில்லை. 

    2025-ல் கில் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு சிறந்த வாய்ப்பு என்று நான் கூறுகிறேன். இருந்தாலும், நான் உற்சாகமாக இருக்கிறேன். அவர் கேப்டனாக முன் நின்று வழிநடத்துவதை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.

    என்று அவர் கூறினார்.

    • வித்தியாசமான ஷாட்டுகளை ஆடி எனது விக்கெட்டை இழக்க விரும்பவில்லை.
    • நெருக்கடியான சூழலில் விளையாடி வெற்றி பெறுவது எனக்கு பெருமை.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று ஐதராபாத்தில் நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. ஐதராபாத் அணி நிர்ணயித்த 187 ரன் இலக்கை பெங்களூரு 19.2 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து எடுத்தது.

    விராட் கோலி சதம் அடித்தார். அவர் 63 பந்தில் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 12 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும். இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.


    ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி கூறியதாவது:-

    முக்கியமான ஆட்டத்தில் நான் சதம் அடித்து இருப்பது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. நாங்கள் நல்ல தொடக்கத்தை அளிக்க விரும்பினோம். ஆனால் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுப்போம் என்று எதிர் பார்க்கவில்லை.

    டுபிளசிஸ் வேறு ஒரு அளவில் சிறப்பாக விளையாடி வருகிறார். நான் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. வலைப்பயிற்சியில் பந்துகளை அடிப்பதுபோல் போட்டியில் அடிக்கவில்லை.

    இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தேன். இன்றைய ஆட்டத்தில் அணிக்காக வெற்றியை தேடி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எப்போதும் ரன் கணக்குக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

    சில சமயங்களில் பெரிய இன்னிங்சை விளையாடியதற்கும் பெருமைப்பட்டு கொள்ளமாட்டேன். நெருக்கடியான சூழலில் விளையாடி வெற்றி பெறுவது எனக்கு பெருமை.

    நான் வித்தியாசமான ஷாட்டுகளை ஆட விரும்பவில்லை. ஒரு ஆண்டில் 12 மாதங்களிலும் விளையாடுகிறோம். இதில் வித்தியாசமான ஷாட்டுகளை ஆடி எனது விக்கெட்டை இழக்க விரும்பவில்லை. எப்போதுமே எனது கிரிக்கெட் யுக்திகளுக்கு உண்மையாக இருந்து அணிக்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன்.

    டுபிளசிசும் நானும் விளையாடுவதை பார்க்கும் போது டிவில்லியர்சும் நானும் விளையாடுவது போல் எனக்கு தெரிகிறது.

    இங்கு (ஐதராபாத்) ரசிகர்கள் எங்களுக்கு அதிக ஆதரவு அளித்தனர். சொந்த மண்ணில் விளையாடியது போல் இருந்தது. நான் விளையாடும் போது மக்கள் சந்தோஷப்படுவதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.
    • பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ். அதிரடி பேட்ஸ்மேனான அவர், தனியார் டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், உங்களின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு டிவில்லியர்ஸ் கூறியதாவது:-


    எனது ஒட்டுமொத்த காலத்திற்கான சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான்தான். அவர் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார். இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.

    பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார். அவர் வெற்றி பெற வேண்டுமென்று எப்போதும் நினைப்பார். அவர் மிகச்சிறந்த போட்டியாளர். அவர்தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறினார்.

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கான், பல்வேறு 20 ஓவர் லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல், பிக்பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட போட்டித் தொடரில் விளையாடி வருகிறார்.

    டிவில்லியர்ஸ், ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியில் உள்ள ஒட்டு மொத்த வீரர்களும் திறமை சாலிகள்.
    • ரோகித் சர்மா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார்.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேஸ்ட்மேன் டிவில்லியர்ஸ் கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்தியாவும், நியூசிலாந்தும் தேர்வு பெறும். இதில் இந்தியா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன்.

    சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இந்திய அணியில் உள்ள ஒட்டு மொத்த வீரர்களும் திறமை சாலிகள். ரோகித் சர்மா இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் விளையாட ஆரம்பித்தால் அனல் பறக்கும். ரோகித் சர்மா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணியும், நாளை நடைபெறும் 2-வது அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

    ×