search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநீறு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும்.
    • அவ்வையார் 'நீறில்லா நெற்றி பாழ்' என்று குறிப்பிடுகிறார்.

    சைவ நெறியைப் பின்பற்றுபவர்களின் புனிதச் சின்னமாக இருப்பது, திருநீற்றுப் பட்டை. இந்தத் திருநீறானது, பசுஞ்சாணத்தை எரியூட்டி பெறப்படுகிறது. சிறப்புமிக்க அந்தத் திருநீற்றை, தலை முதல் கால் வரை, உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும் என்று வரைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருஞானசம்பந்தர், திருநீற்றின் சிறப்பைப் பற்றி 'திருநீற்றுப் பதிகம்' பாடல் தொகுப்பையே வழங்கியிருக்கிறார். 'மந்திரமாவது நீறு..' என்று தொடங்கும் அந்த பதிகப் பாடல், கூன் பாண்டியனின் வெப்பு நோயை நீக்குவதற்காக, ஞானசம்பந்தரால் பாடப்பட்டது ஆகும். அவ்வையாரும் கூட 'நீறில்லா நெற்றி பாழ்' என்று குறிப்பிடுகிறார்.

    அந்த திருநீறானது, 'கல்பம், அனுகல்பம், உபகல்பம், அகல்பம்' என்று நான்கு வகைப்படும். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

    * கன்றுடன் ஆரோக்கியமாக வாழும் பசுவின் சாணம், கீழே விழும் முன்பாக, தாமரை இலையில் பிடித்து, வேதமந்திரங்கள் ஓதி, முறைப்படி தாயரிக்கப்படுவது 'கல்ப திருநீறு.'

    * பசுமை நிறைந்த புற்களை மட்டுமே மேயும், பசுக்களின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுவது 'அனுகல்ப திருநீறு' ஆகும்.

    * ஒரே இடத்தில் கூட்டமாக இருக்கும் பசுக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் சாணத்தை, அக்னியில் எரித்துக் கிடைப்பதுவே 'உபகல்ப திருநீறு.'

    * வெவ்வேறு இடங்களில் இருக்கும் பல்வேறு பசுக்களிடம் இருந்து கிடைக்கும் சாணத்தைக் கொண்டு தயார் செய்யப்படுவது, 'அகல்ப திருநீறு.'

    • திருவானைக்கா தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே கட்டியதாக சொல்கிறார்கள்.
    • பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

    திருவானைக்கா தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே கட்டியதாக சொல்கிறார்கள்.

    சிவபெருமான் நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்குத் திருநீறை

    கூலியாகக் கொடுத்ததாகத் தலவரலாறு கூறுகிறது.

    பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

    இதனால் இம்மதிலைத் திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

    குபேர லிங்கம்

    மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது.

    மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது.

    இந்தக் குபேர லிங்கத்தைக் குபேரன் வழிபட்டதால்தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே.

    இப்போது மக்கள் அதிகம் வழிபாடு செய்யும் இடங்களில் ஒன்றாகக் குபேர லிங்க சன்னிதி ஆகிப்போனது.

    • விபூதி திருநீறு என்றும் அழைக்கப்படும்.
    • விபூதி தரித்துக்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

    விபூதி திருநீறு என்றும் அழைக்கப்படும். சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் நெற்றியில் தரித்துக்கொள்வது திருநீறு. விபூதி தரித்துக்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும், ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் முடிவில் பிடி சாம்பல்தான் என்ற தத்துவத்தையும் நமக்கு உணர்த்துவதாகத் திகழ்கிறது.

    விபூதியை அணிவதற்கும் சில விதிமுறைகள் அனுஷ்டானங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

    * கோவிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும் போது ஒற்றை கையை மட்டும் நீட்டி வாங்கக்கூடாது.

    * வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து வைத்து தான் விபூதியை வாங்க வேண்டும்.

    * விபூதியை வாங்கும் போது "திருச்சிற்றம்பலம்" என்றும், விபூதியை நெற்றியில் இடும் போது "பஞ்சாட்சர" மந்திரத்தையும் ஜபிக்க வேண்டும்.

    * விபூதியை நெற்றி முழுவதுமோ அல்லது மூன்று படுக்கை வசக் கோடுகளாகவோ தரிக்கவேண்டும்.

    * காலையிலும் மாலையிலும், கோயிலுக்குச் செல்லும்போதும், இரவு படுக்கப்போகும் முன்பும் விபூதி தரித்துக்கொள்ளலாம்.

    * விபூதியை இடக்கையில் கொட்டி, அதிலிருந்து எடுத்து நெற்றியில் இடக்கூடாது.

    * வலக்கையில் உள்ள விபூதியை அப்படியே நெற்றியில் இட வேண்டும். வலக் கையின் நடுவில் உள்ள மூன்று விரல்களால் விபூதியை எடுத்து தலையை நிமிர்த்தி அணிந்துகொள்ளவேண்டும்.

    * அவ்விதம் செய்ய இயலாவிட்டால், ஒரு சிறுதாளில் விபூதியை இட்டு, அதிலிருந்து எடுத்து நெற்றியில் வைக்கலாம்.

    * வயதில் நம்மைவிட இளையவர் கைகளிலிருந்து விபூதியை எடுத்து வைக்கக்கூடாது.

    * விபூதியை நம் கையில் இடச் செய்து, அதிலிருந்து தான் எடுத்து நம் நெற்றியில் இட வேண்டும்.

    * குங்குமத்தை இளையவர் கைகளிலிருந்து எடுத்து நெற்றியில் வைக்கலாம்.

    * நடந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ விபூதியை வைக்கக்கூடாது. ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதியை பெறும்போது அவர்களை வணங்கி விட்டு பெற வேண்டும்.

    * கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை நின்று தான் விபூதி இட வேண்டும்.

    * திருநீறு அணிவதால், மனதில் இறைபக்தி மேலோங்கி, நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்களை விலக்கும்.

    • வடக்குப்பொய்கை நல்லூரில் கோரக்க சித்தர் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.
    • கோரக்க சித்தருக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள கோரக்கச்சித்தர் பீடம் ஐப்பசி பரணி விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    18 சித்தர்களில் முதன்மை சித்தரான, கோரக்கச்சித்தர் போகரின் அறிவுரைப்படி நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

    அதன்படி வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள கோரக்கச்சித்தர் பீடத்தில் ஐப்பசி பவுர்ணமி விழா மற்றும் பரணி விழா அன்னாபிஷேக நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    அதனைத் தொடர்ந்து ஆலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, கோரக்கச் சித்தருக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் வெளி நாட்டினர் கலந்துகொண்டு கோரக்கச் சித்தருக்கு தீபம் ஏற்றி வணங்கினர்.

    ×