என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மது பழக்கம்"
- கணவர்களை வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள்.
- என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது
மத்தியபிரதேச சமூகநீதி அமைச்சர் நாராயண் சிங் குஷ்வா போபாலில் நடந்த போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், உங்கள் கணவர்களும் மகன்களும் மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அவர்களை வெளியே மது அருந்தவிடாமல் வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள். அம்மா, மனைவி, பிள்ளைகள் முன்பு அவர்கள் மது அருந்தினால் அவர்களாகவே வெட்கப்பட்டு மது குடிப்பதை படிப்படியாக குறைத்து விடுவார்கள்.
மேலும், உங்களை பார்த்து நமது பிள்ளைகளும் எதிர்காலத்தில் மது அருந்த ஆரம்பிப்பார்கள் என்று உங்கள் கணவர்களிடம் சொல்லுங்கள். பின்னர் அவர்கள் தானாகவே மது அருந்துவதை நிறுத்தி விடுவார்கள். என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது" என்று அவர் தெரிவித்தார்.
- முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
- மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும்.
அழகாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை தான். இதனால் பலரும் சந்தையில் விற்கப்படும் கிரீம்களை முகத்தில் அப்ளை செய்துவருகிறார்கள். சிலர் இயற்கை முறையில் தங்களை அழகு படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும் பல நபர்களுக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதிலும் வயதானால் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். அதுவே இளம் வயதிலேயே தோல் சுருங்குகிறது என்றால் வருத்தமாக தான் இருக்கும். இதற்கு காரணம் நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை, பழக்க வழக்கம் போன்றவை தான் இளமையிலே முதுமை தோற்றம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.
புற ஊதா கதிர்கள் தான் தோல் சுருங்குவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த புற ஊதாக்கதிர்கள் தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோலினை சுருங்கச்செய்கிறது.
நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று வந்தாலும் சரி, வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள உடல் முழுவதையும் ஆடைகளால் மறைத்துக்கொள்வது நல்லது.
இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு புகைப்பழக்கம் மற்றும் மது குடிப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. இது ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். இதனால் தோல்கள் பலம் இல்லாமல் தொங்க ஆரம்பித்துவிடும்.
ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனாலேயும் தோல் சுருக்கம் ஏற்படும். எப்பொழுதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. இதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கூட தோல் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
சரியாக தூங்காமல் இருந்தாலும் பிஎச் அளவு மற்றும் ஈரப்பதம் இவை இரண்டும் குறைந்து தோலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியையும் குறைத்துவிடுகிறது. அதனால் சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.
உடலில் சத்துக்கள் குறைந்தாலும் தோல் சுருக்கம் மற்றும் தோல் வியாதிகள் ஏற்படும். இதனால் தினமும் ஜூஸ் அல்லது ஏ.பி.சி. ஜூஸ் குடித்து வரும் போது தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோற்றம் பொலிவுபெறும்.
- தமிழகத்திலேயே கஞ்சா புழக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக தேனி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியை ஓட்டி அமைந்துள்ள இங்கு பெரும்பாலான வனப்பகு தியையொட்டி கஞ்சா பயிரிடப்பட்டு வந்தது.
- பழக்கத்திற்கு பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் அடிமையாகி வருகின்றனர். இதனால் படிக்கும் காலத்தி லேயே தங்கள் வாழ்வை இழந்து போதைக்கு அடிமையாகி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.
வருசநாடு:
தமிழகத்திலேயே கஞ்சா புழக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக தேனி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியை ஓட்டி அமைந்துள்ள இங்கு பெரும்பாலான வனப்பகு தியையொட்டி கஞ்சா பயிரிடப்பட்டு வந்தது. போலீசாரின் தீவிர நடவடிக்கையால் தற்போது கஞ்சா செடிகள் இல்லாத நிலை உள்ளது.
இருந்தபோதும் ஆந்திரா போன்ற வெளி மாநில ங்களில் இருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டு தமிழக த்தின் பல மாவட்டங்களு க்கும், கேரளாவுக்கும் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க ஆபரேசன் திட்டத்தின்மூலம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இச்செயலில் ஈடுபட்டவர்களின் சொத்து க்கள் பறிமுதல் செய்ய ப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
அதன்பிறகு சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பல இடங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடமலைக்குண்டு மயிலை ஒன்றியத்தி ற்குட்பட்ட கிராமங்களில் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. சிறை ப்பாறை, கடமலை க்குண்டு, வருசநாடு, குமணன்தொழு ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது.
இந்த பழக்கத்திற்கு பெரியவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் அடிமையாகி வருகின்றனர். இதனால் படிக்கும் காலத்தி லேயே தங்கள் வாழ்வை இழந்து போதைக்கு அடிமையாகி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர். போதையில் மாணவர்கள் பிடிபட்டால் அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகின்றனர். ஆனால் கஞ்சா விற்பனை செய்பவ ர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்ப தில்லை.
மேலும் கடமலைக்குண்டு, வருசநாடு, மூலக்கடை உள்ளிட்ட கிராமங்களில் 24 மணி நேரமும் தடை யில்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு கூடுதல் விலை கொடுத்தும் மதுபான ங்களை வாங்கி குடித்து வருகின்றனர்.
காலையில் வேலைக்கு செல்லும் ெதாழிலா ள ர்களும் மதுபானம் குடித்து உடல்நலத்தை கெடுத்து வருகின்றனர். மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு மாண வர்கள் அடிமையா வதால் அவர்களை எவ்வாறு திருத்துவது என பெற்றோர்களும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
போதைக்காக திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவ ங்களிலும் மாணவர்கள் ஈடுபடும் அவலமும் ஏற்பட்டு வருகிறது. எனவே கிராமங்களில் கஞ்சா மற்றும் மது விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மணிகண்டன் மது குடிக்கும் பழக்கம் உடையவர்.
- மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே சுத்தமலையை சேர்ந்த முனுசாமி மகன் மணிகண்டன் (வயது 24) மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மது பழக்கத்தை நிறுத்துமாறு அவரது பெற்றோர் கூறியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- பெருநகரங்களில் பெண்களும் பாருக்கு வருகிறார்கள்.
- டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
புதுடெல்லி :
மது குடிக்கும் பழக்கம் தற்போது ஒரு 'பேஷன்' ஆகி விட்டது. பெருநகரங்களில் பெண்களும் பாருக்கு வருகிறார்கள். இந்தநிலையில் டெல்லியில் பெண்களின் மது பழக்கம், கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையைவிட தற்போது அதிகரித்து உள்ளது. இதற்கு கொரோனா கால ஊரடங்கே முக்கிய காரணம் என பெண்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஒரு தொண்டு நிறுவனம் இது தொடர்பான ஆய்வை 5 ஆயிரம் பெண்களிடம் நடத்தியது. இதில் கொரோனாவுக்கு பிறகு பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் 37 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் தங்களை குடிகாரிகளாக மாற்றிவிட்டதாக பல பெண்கள் கூறியுள்ளனர். மேலும், டெல்லியில் மதுபானத்துக்கு அளிக்கப்பட்ட 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்', சிறப்பு தள்ளுபடி விற்பனை, டோர் டெலிவரி போன்ற சலுகைகளும் மது வாங்க தங்களை தூண்டியதாக 77 சதவீத பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
மது அருந்தும் பெண்களில் 38 சதவீதம் பேர் வாரத்துக்கு இருமுறையும், 19 சதவீதம் பேர் வாரத்துக்கு 4 முறையும் மது அருந்துவதாக கூறியுள்ளனர். ஒரு அமர்வுக்கு 4 'பெக்'குகள் வரை தள்ளுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பெண்களிடம் மட்டுமின்றி ஆண்களிடமும் மது அருந்தும் பழக்கம் டெல்லியில் அதிகரித்துள்ளது. இதன்மூலம் டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இதில் விஸ்கி விற்பனை 59.5 சதவீதம், பீர் விற்பனை 5.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்