search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேஸ்திரி கைது"

    • கே.வி.குப்பம் பஸ் நிலையம் அருகே அட்டகாசம்
    • போலீசார் விசாரணை

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் பஸ் நிலையம் பகுதியில் குடிபோதையில் தள்ளாடியபடி கையில் மது பாட்டிலுடன் வந்த ஒருவர் குடி யாத்தம் காட் பாடி தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் அமர்ந்தார்.

    பின் னர் தான் கொண்டு வந்த மது பாட்டிலை திறந்து அதை 3 முறை தொட்டுத் தொட்டு கும்பிட்டார்.

    தொடர்ந்து அங்கேயே மதுவை டம்ளரில் ஊற்றி குடித்தார். இதை ரோட்டில் சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.

    இது சமூக வலைதளங் களில் வைரலானது. தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடுரோட்டை பாராக மாற்றி போக்குவரத்துக்கு இடையூறாக அமர்ந்து மது அருந்திய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கே.வி. குப்பம் சீதாராம்பேட்டை பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி செல்வம் (வயது 64) என்பது தெரிந்தது.

    அவர் மீது கே.வி. குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

    • மாணவியின் தாயார் ரேவதி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • மாணவி தான் கடத்தப்படுகிறோம் என்று அறியாமல் ராமசாமியுடன் சென்று இருக்கிறார்.

    பீளமேடு:

    கோவை பீளமேடு கிரி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சேகர். சூலூர் அரசூரில் உள்ள கிரைண்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (43). கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களது மகள் பயோனியர் மில் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி சேகர் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளரின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் பேசினார். உங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சேகரின் மகளை நான் கடத்தி வைத்துள்ளேன். ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் குழந்தையை விட்டு விடுகிறேன் என தெரிவித்தார். மேலும் அந்த மாணவியிடமும் செல்போனை கொடுத்து மர்ம நபர் பேச செய்தார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், சேகரை அழைத்து விவரத்தை தெரிவித்தார். சேகர் வீட்டுக்கு தொடர்பு கொண்டு மகளை பற்றி விசாரித்தார். மாணவி பள்ளி முடிந்து வீட்டு வராதது தெரியவந்தது. இதனால் மாணவி கடத்தப்பட்ட விவரம் உறுதியானது.

    இதுபற்றி மாணவியின் தாயார் ரேவதி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மர்ம நபர் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை கொண்டு விசாரித்தனர்.

    அப்போது மாணவியை கடத்திய நபர் பஸ்சில் சூலூர் பாப்பம்பட்டியை கடந்து பஸ்சில் செல்வது தெரியவந்தது. இறுதியில் திண்டுக்கல்லில் அவர் மாணவியுடன் இறங்கிய விவரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் திண்டுக்கல்லுக்கு விரைந்து சென்று கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர். மேலும் அவரை கடத்திய நபரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அந்த நபர் வெள்ளலூர் முல்லை நகரைச் சேர்ந்த ராமசாமி (வயது 52) என்பது தெரியவந்தது. இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவரிடம் தான் மாணவியின் தாயார் ரேவதி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பழி வாங்கும் எண்ணத்துடன் ராமசாமி, ரேவதியின் மகளை கடத்தி இருக்கிறார்.

    பள்ளி முடிந்து திரும்பிய மாணவியை ராமசாமி சந்தித்துள்ளார். ஏற்கனவே அறிமுகம் ஆன நபர் என்பதால் மாணவியும் அவரிடம் பேசி உள்ளார். உனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை, ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம், நீ என்னுடன் வா, அழைத்துச் செல்கிறேன் என்று கூறியே மாணவியை அழைத்துச் சென்று இருக்கிறார். ஆனால் மாணவி தான் கடத்தப்படுகிறோம் என்று அறியாமல் ராமசாமியுடன் சென்று இருக்கிறார்.

    இருந்தாலும் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு ராமசாமியை பிடித்து விட்டனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    • இளம்பெண்ணும், கிருஷ்ண மூர்த்தியும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர்.
    • பெண்ணிடம் வீடு புகுந்து தவறாக நடக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பூதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண்.

    அதேபகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. கட்டிட மேஸ்திரியான இவர் அந்த பெண்ணுக்கு தூரத்து உறவினர் ஆவார்.

    இதன் காரணமாக இளம்பெண்ணும், கிருஷ்ண மூர்த்தியும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பெண்ணின் கணவர் அவரை கண்டித்துள்ளார்.

    அதன்பிறகு கிருஷ்ணமூர்த்தியிடம் போனில் பேசுவதை அந்த பெண் நிறுத்தி கொண்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது கிருஷ்ணமூர்த்தி அவரை பார்த்து விட்டு செல்வதாக கூறி வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அவரிடம் கிருஷ்ண மூர்த்தி தவறாக நடக்க முயன்றார். இதனால் அந்த பெண் சத்தம் போட்டு கூச்சலிட்டார்.

    அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் மாமியார், கிருஷ்ணமூர்த்தியிடம் ஏன் இவ்வாறு நடத்து கொள்கிறாய் என்று கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, பெண்ணின் மாமியாரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் அவர் காயமடைந்தார்.

    பின்னர் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு அறைக்குள் அழைத்து சென்று கதவை மூடினார். அறைக்குள்ளே அந்த பெண்ணின் முன்பு கிருஷ்ணமூர்த்தி திடீரென்று தனது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்றார்.

    இதனால் பதறிப்போன அவர் அதிகமாக சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து கிருஷ்ணமூர்த்தியின் பிடியில் இருந்து இளம்பெண்ணை மீட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அவர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

    பெண்ணிடம் வீடு புகுந்து தவறாக நடக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் ஜெயசுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது.
    • மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது27). இவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாக பணிபுரிந்து வந்தார்.

    அப்போது அதே மருத்துவமனையில் சென்னை பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் எலக்ட்ரீஷனாக பணிபுரிந்து வந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

    கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஜெயசுதா கருவுற்ற நிலையில் குணசேகரன் ஜெயசுதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

    தாய் வீடான சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்திற்கு ஜெயசுதா வந்தார். பின்னர் ஜெயசுதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    தனது குழந்தையான ஏனோக்ராஜ்னுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது ஜெயசுதாவின் உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    மாணிக்கம் தன்னுடைய குடும்பத்தினரை கைகழுவி விட்டு கள்ளக்காதலியான ஜெயசுதாவுடன வாழ்ந்து வந்தார். மற்றும் ஜெயசுதாவின் குழந்தையுடன் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தார்.

    மாணிக்கம் தினந்தோறும் மது குடித்து விட்டு ஜெயசுதாவிடம் உன் குழந்தை எனக்கு பிறக்கவில்லை உன் முதல் கணவர் குணசேகரனுக்கு பிறந்தது என்று தினந்தோறும் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை தாக்கியும் கொடுமைபடுத்தியும் சூடு வைத்தும் தண்ணீர் தொட்டில் 2 கால்களை பிடித்து மூழ்கடித்து மற்றும் கட்டையால் தாக்கியும் கொடூரமான முறையில் கொடுமைபடுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    மேலும் கடந்த மாதம் 21ந் தேதி மேஸ்திரி மாணிக்கம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு ஜெயசுதாவிடம் வாக்குவாதம் செய்தார். ஆத்திரத்தில் 2 வயது குழந்தை ஏனோக்ராஜை கட்டையால் தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இச்சம்பவம் குறித்து ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். 

    • கோவில் முன்பு நிறுத்தியிருந்தார்.அப்போது ஒரு ஆசாமி அந்த மோட்டார் சைக்கிளை திருட முயன்றார்.
    • விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சங்கர் (41) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள எம்.எஸ்.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 27).கூலி தொழிலாளி.

    இவர் தனது மோட்டார் சைக்கிளை அதே பகுதியில் உள்ள கோவில் முன்பு நிறுத்தியிருந்தார்.அப்போது ஒரு ஆசாமி அந்த மோட்டார் சைக்கிளை திருட முயன்றார்.

    இதையடுத்து அவரை கையும்,களவுமாக மடக்கி ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சங்கர் (41) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×