என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வீடு புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கட்டிட மேஸ்திரி கைது
- இளம்பெண்ணும், கிருஷ்ண மூர்த்தியும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர்.
- பெண்ணிடம் வீடு புகுந்து தவறாக நடக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பூதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண்.
அதேபகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. கட்டிட மேஸ்திரியான இவர் அந்த பெண்ணுக்கு தூரத்து உறவினர் ஆவார்.
இதன் காரணமாக இளம்பெண்ணும், கிருஷ்ண மூர்த்தியும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெண்ணின் கணவர் அவரை கண்டித்துள்ளார்.
அதன்பிறகு கிருஷ்ணமூர்த்தியிடம் போனில் பேசுவதை அந்த பெண் நிறுத்தி கொண்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது கிருஷ்ணமூர்த்தி அவரை பார்த்து விட்டு செல்வதாக கூறி வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அவரிடம் கிருஷ்ண மூர்த்தி தவறாக நடக்க முயன்றார். இதனால் அந்த பெண் சத்தம் போட்டு கூச்சலிட்டார்.
அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் மாமியார், கிருஷ்ணமூர்த்தியிடம் ஏன் இவ்வாறு நடத்து கொள்கிறாய் என்று கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, பெண்ணின் மாமியாரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் அவர் காயமடைந்தார்.
பின்னர் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு அறைக்குள் அழைத்து சென்று கதவை மூடினார். அறைக்குள்ளே அந்த பெண்ணின் முன்பு கிருஷ்ணமூர்த்தி திடீரென்று தனது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்றார்.
இதனால் பதறிப்போன அவர் அதிகமாக சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து கிருஷ்ணமூர்த்தியின் பிடியில் இருந்து இளம்பெண்ணை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அவர் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
பெண்ணிடம் வீடு புகுந்து தவறாக நடக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.