என் மலர்
நீங்கள் தேடியது "குடோனில் தீ விபத்து"
- டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவிடைமருதூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மணிக்கார தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவரது மகன் அகமது தம்பி என்பவருக்கு சொந்தமான டீத்தூள் ஏஜென்சி திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பிடாரன் தெருவில் உள்ளது.
இங்கு டீ துள்களை குடோனில் சேகரித்து வைத்து பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் இவரது உறவினரான ஹபீப் ரஹ்மான் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிகள் முடிந்ததும் ஊழியர்களை குடோனை பூட்டி சென்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் குடோனில் இருந்து கடும்புகை வெளியே வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் குடோன் தீ பிடித்து எரிந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஹபீப் ரஹ்மானுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் இது குறித்து திருவிடைமருதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தீயணைப்புதுறை அலுவலர் மாறன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் சுமார் ரூ.40 லட்சத்திற்கும் மேல் டீ தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் எரிந்து சேதமானதாக ஹபீப்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் மின்கசிவு காரணமா? தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்று அதிகாலையில் திருவிடைமருதூர் அருகே டீத்தூள் குடோனில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கோணகப்பாடி கிராமம் செட்டியார் காடு பகுதியை சேர்ந்த செந்தில், இவர் சொந்தமாக நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.
- நேற்று இந்த ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கோணகப்பாடி கிராமம் செட்டியார் காடு பகுதியை சேர்ந்த செந்தில், இவர் சொந்தமாக நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இந்த ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மள மள என பரவி அங்கிருந்த தேங்காய் நார் கழிவுகள் பற்றி எரிந்தது.
இதுபற்றி ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது பற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேங்காய் நார் குடோனில் நேற்று இரவு திடீரென தீ பற்றியது.
- காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பற்றி எரிந்தது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம், கே ஆர் தோப்பூர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (45).
இவருக்கு சொந்தமாக தேங்காய் நார் குடோன் உள்ளது.
இந்த தேங்காய் நார் குடோனில் நேற்று இரவு திடீரென தீ பற்றியது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் அக்கம்பக்கம் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர். எனினும் தீ வேகமாக பரவி எரிந்ததால் அணைக்க முடியவில்லை. தொடர்ந்து
தீ கட்டுக்குள் வராததால் ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர். வெகுநேர போராட்டத்திற்கு பின்பு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நார் முற்றிலும் எரிந்தது.
இதுதொடர்பாக தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குணசேகரன் நாடார் (வயது 58). இவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஊத்துக்காடு பகுதியில் உள்ளது.
- இந்த குடோன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென தீ பிடித்து கரும்புகை குபு குபு என குடோனில் இருந்து வெளியே வந்தது.
சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் நாடார் (வயது 58). இவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஊத்துக்காடு பகுதியில் உள்ளது.
தீப்பிடித்தது
இந்த குடோன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென தீ பிடித்து கரும்புகை குபு குபு என குடோனில் இருந்து வெளியே வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினர் மற்றும் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு குடோன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் குடோன் முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். இதனால் அக்கம், பக்கத்தில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
ரூ.2.50 லட்சம் மதிப்பு
இருப்பினும் குடோனுக்குள் இருந்த பழைய பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. சேதமதிப்பு சுமார் 2.50 லட்சம் ரூபாய் இருக்கும் என உரிமையாளர் தெரிவித்தார். தீ விபத்து குறித்து போலீசார் விசாரனை நடத்தியதில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரியவந்தது. இந்த தீ விபத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.