என் மலர்
நீங்கள் தேடியது "நகைகள் மாயம்"
- சீனிவாசன் (வயது 57). இவர் டீத்தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
- தனது வீட்டில் வைத்திருந்த 132 பவுன் நகைகள் கடந்த 3 மாத காலத்திற்குள் மாயமாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை இ.வி.கே தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). இவர் டீத்தூள் மொத்த வியாபாரம் செய்து வருகி றார். இவர் தனது மனைவி, 2 மகன், 2 மருமகள் மற்றும் ஒரு மகளுடன் கூட்டு குடும்ப மாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சீனிவாசன், அம்மாபேட்டை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது வீட்டில் வைத்திருந்த 132 பவுன் நகைகள் கடந்த 3 மாத காலத்திற்குள் மாயமாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அம்மாபேட்டை போலீசார், வீட்டில் இருந்த தங்க நகைகள் எப்படி மாயமானது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வீட்டுக்கு வந்து செல்லும் நபர்கள் மற்றும் வேலையாட்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீட்டிலிருந்த 132 தங்க நகைகள் மாயமான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயம்.
- லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அளித்த புகாரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வங்கி கிளை மேலாளர் ராம்பாபு நாயக் உதவி மேலாளர் ரவிக்குமார் தங்க மதிப்பீட்டாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பள்ளநாடு மாவட்டம் சட்டெனப்பள்ளி மண்டலம் ரெண்ட பள்ளியில் வங்கி இயங்கி வருகிறது இந்த வங்கியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்து உள்ளனர். சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாயம் செய்வதற்காக தங்களது நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றனர்.
இந்த நிலையில் விவசாயிகள் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக கடந்த 2022 ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அசலுடன் வட்டியை செலுத்தி நகைகளை கேட்டனர். அப்போது வங்கி அதிகாரிகள் விவசாயிகளிடம் நகைகளை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வங்கிக்குச் சென்று நகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என தகராறில் ஈடுபட்டனர். வங்கி அதிகாரிகள் நீங்கள் அடகு வைத்த நகைகள் திடீரென காணாமல் போய்விட்டதாகவும் 2 நாட்களில் நகைகளை ஒப்படைப்பதாகவும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என சமாதானம் செய்ததால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் வங்கியில் இருந்த நகைகள் காணாமல் போன விவகாரம் வெளியில் தெரிய வந்தது. வங்கி மண்டல அலுவலக அதிகாரிகள் நேற்று முன்தினம் வங்கிக்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது விவசாயிகள் அடகு வைத்த ரூ.1.70 கோடி மதிப்பிலான நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து வங்கி கிளை மேலாளர் ராம்பாபு நாயக் உதவி மேலாளர் ரவிக்குமார் தங்க மதிப்பீட்டாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தங்க நகை மதிப்பீட்டாளர் சம்பத்குமார் 3 நாட்களில் நகைகளை வங்கியில் ஒப்படைக்க வேண்டும். மேலும் பழைய வங்கி மேலாளர் புதிய மேலாளர் உள்ளிட்டோர் விசாரணைக்காக அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.
ஆனால் வங்கி அதிகாரிகள் அனைவரும் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டபோது அனைவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் வங்கி உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தேடி வருகின்றனர்.
- ராஜ்குமார் (வயது 40). இவர் நேற்று செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
- தனது வீட்டு பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவித்து உள்ளார்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை சேர்மன் மதுரை தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40). இவர் நேற்று செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதில், தனது வீட்டு பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவித்து உள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வீட்டில் அனைவரும் இருக்கும் போது நகைகள் எப்படி மாயமானது? வீட்டுக்கு கடந்த 2 நாட்களில் யார்? யார்? வந்து சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 10 நாள் விடுமுறையில் செல்வதாக கூறி, அந்த கிளையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவரிடம் அடமான நகைகளை ஒப்படைத்து உள்ளார்.
- ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பு உள்ள 137 கிராம் தங்க நகைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 41). இவர் சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் நகை பிரிவு துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம், 10 நாள் விடுமுறையில் செல்வதாக கூறி, அந்த கிளையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவரிடம் அடமான நகைகளை ஒப்படைத்து உள்ளார்.
அப்போது அந்த பெண் ஊழியர் நகைகளை சரிபார்க்கும் போது ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பு உள்ள 137 கிராம் தங்க நகைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த வங்கியின் மேலாளர் சிவக்குமார் நேற்று இரவு பள்ளப்பட்டி போலீசில் புகார் ெசய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.