என் மலர்
நீங்கள் தேடியது "ஜெகத்ரட்சகன்"
- 1995ம் ஆண்டு குரோம் லெதர் பேக்டரி என்ற நிறுவனத்தை ஜெகத்ரட்சகன் வாங்கினார்
- வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை:
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1995ம் ஆண்டு ஜெகத்ரட்சகன் குரோம் லெதர் பேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் உள்ளது.
- ஓட்டலில் பணிபுரியும் முக்கிய ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாமல்லபுரம்:
முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தற்போது அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. அங்கு இன்று காலை 6 மணிக்கு நான்கு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஓட்டல் அலுவலகத்தில் நுழைந்து அங்குள்ள கம்ப்யூட்டர், ஆவணங்களை சோதனையிட்டு வருகிறார்கள்.
ஓட்டல் மேலாளர், கணக்காளர் மற்றும் வெளி மாநில உணவு பொருட்கள், ஓட்டலுக்கு தேவையான ஆடம்பர அலங்கார பொருட்கள் வாங்கும் பிரிவுகளில் பணிபுரியும் முக்கிய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டலில் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழக்கம் போல் ஊழியர்கள் பின்புற வழியில் சென்று வருகிறார்கள். முன் பகுதியில் மட்டும் யாரையும் அனுமதிக்கவில்லை. ஜெகத்ரட்சகன் ஓட்டலில் வருமான வரி சோதனை நடப்பதால் ஓட்டல் கட்டுமான பணிகள் நடைபெற்றபோது கட்டுமான பொருட்கள் சப்ளை செய்த திருப்போரூர், மாமல்லபுரம் பகுதி தி.மு.க. பிரமுகர்கள் சிலர், அவர்களிடமும் விசாரணை வருமோ என பதட்டம் அடைந்துள்ளனர். இதனால் மாமல்லபுரம்-தேவநேரி இ.சி.ஆர் பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.
- அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி அமலாக்கத்துறை ஆவணங்களை கைப்பற்றியது.
புதுடெல்லி:
அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருபவர் ஜெகத்ரட்சகன்.
இதற்கிடையே, சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வாங்கி உள்ளார். அதன்பின், இந்தப் பங்குகளை மனைவி, மகன், மகள் பெயரில் மாற்றியுள்ளார்.
இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் விதிமீறல் நடந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பு சொத்து முடக்கப்பட்டது. அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும், இதற்கான உத்தரவு கடந்த 26-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
- தி.மு.க. பவள விழா ஆண்டு
- எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது.
சென்னை:
தி.மு.க. பவள விழா ஆண்டையொட்டி செப்டம்பர் 17-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி பெரியார் விருது-பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது-அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும் வழங்கப்படுகிறது.

கலைஞர் விருது-எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு வழங்கப்படுகிறது. பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது-வி.பி.ராஜனுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.