என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாஹல்"
- முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
- இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
176 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் வீரர் சாஹல் படைத்துள்ளார். அவர் மொத்தமாக இதுவரை 224 சிக்ஸர்களை விட்டு கொடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் பியூஷ் சாவ்லா - 222, ஜடேஜா - 206, அஷ்வின் - 203, அமித் மிஷ்ரா - 183 ஆகியோர் உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த முதல் 5 பந்துவீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய மும்பை அணி 179 ரன்கள் எடுத்தது.
- ராஜஸ்தான் அணியின் சந்தீப் ஷர்மா 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.
ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், மும்பை அணியின் முகமது நபி 23 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஐ.பி.எல். வரலாற்றில் சாஹலின் 200-வது விக்கெட்டாக பதிவானது.
இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.
- சாஹல் 4 விக்கெட்களை எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
- ஐதராபாத் தங்களுடைய 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியது.
ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7-ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஐதராபாத் தங்களுடைய 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியது.
அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 35 (18) ஜோஸ் பட்லர் 95 (59) கேப்டன் சஞ்சு சாம்சன் 66* (38) என களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக பெரிய ரன்களை எடுத்தனர்.
அதை தொடர்ந்து ஐதராபாத் அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 4 விக்கெட்களை எடுத்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
4 விக்கெட்களை ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு அபாரமாக செயல்பட்ட சாஹல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் என்ற பிராவோவின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.
சொல்லப்போனால் அவரை விட மிகவும் குறைந்த போட்டிகளில் 183 விக்கெட்களை எடுத்து அதை சமன் செய்துள்ள சாஹல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் புதிய சாதனையும் படைத்துள்ளார்.
அந்தப் பட்டியல்:
1. சாஹல் : 183* (142 போட்டிகள்)
2. பிராவோ : 183 (161 போட்டிகள்)
3. பியூஸ் சாவ்லா : 174* (175 போட்டிகள்)
4. அமித் மிஸ்ரா : 172* (160 போட்டிகள்)
5. ரவிச்சந்திரன் அஸ்வின் : 171* (195 போட்டிகள்)
- முதலில் ஆடிய ராஜஸ்தான் 203 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஐதராபாத் 131 ரன்னில் ஆல் அவுட்டானது.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்த 4-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மல்லுக்கட்டின. டாஸ் ஜெயித்த ஐதராபாத் அணியின் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் ராஜஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் 200-ஐ கடந்த முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றது.
ஜோஸ் பட்லர் 54 ரன்னில் அவுட்டானார்.ஜெய்ஸ்வால் 54 ரன்னில் அவுட்டானார். கேப்டன் சாம்சன் நிலைத்து நின்று அரைசதம் அடித்து 55 ரன் எடுத்தார். பவர்-பிளேயான முதல் 6 ஓவரில் ராஜஸ்தான் 85 ரன் திரட்டியது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 8 விக்கெட்டுக்கு 131 ரன் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் ராஜஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்துல் சமத் 32 ரன்களுடனும், உம்ரான் மாலிக் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஐதராபாத் வீரர் ஹாரி புரூக் விக்கெட்டை வீழ்த்தியபோது அது ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அவரது 300-வது விக்கெட்டாக (265 ஆட்டம்) அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை சாஹல் படைத்தார்.
அவர் நேற்று எடுத்த 4 விக்கெட்டையும் சேர்த்து ஐ.பி.எல்.-ல் இதுவரை 170 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் அதிக விக்கெட் எடுத்தவர்களின் வரிசையில் ஓய்வு பெற்ற வெய்ன் பிராவோ (183 விக்கெட்), மலிங்கா (170 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் சாஹல் உள்ளார்.
- தொடரின் தொடக்கத்திலேயே கேப்டனும், பயிற்சியாளரும்,அவர்களிடம் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
- உலகக்கோப்பை தொடர் முழுவதும் யஷ்வேந்திர சஹால் ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.
இந்திய அணி உலகக்கோப்பையில் அரையிறுதியோடு வெளியேறியது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதையடுத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணி விரைவில் தலைமை மாற்றத்துக்கு ஆளாகலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் யஷ்வேந்திர சாஹல் ஒரே ஒரு போட்டியில் கூட பயன்படுத்தவில்லை. இதுகுறித்து இப்போது தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். அதில் சஹாலோ அல்லது ஹர்ஷல் படேலோ தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அதிருப்தி அடையவில்லை. ஏனென்றால் தொடரின் தொடக்கத்திலேயே கேப்டனும், பயிற்சியாளரும்,அவர்களிடம் தெளிவுபடுத்தி விட்டார்கள். தேவைப்பட்டால் மட்டுமே உங்களை அணியில் எடுப்போம். இல்லை என்றால் கடினம்தான் என்று தெளிவுபடுத்திவிட்டார்கள். அதனால் அவர்கள் இருவரும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால், எப்படி தங்களது சிறப்பானதைக் கொடுக்க முடியும் என்று காத்திருந்தனர் என்று கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்