search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் அவதி"

    • சாலை குறுகலானதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நேற்று நடந்தது.

    இதனால் திருப்பதி மலைக்கு சென்ற பஸ்கள், பக்தர்களின் வாகனங்களை, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.

    இந்த சாலை குறுகலானதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    அதன் பின் படக்குழுவினர் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன் படப்பிடிப்பை நடத்த முற்பட்டனர்.

    இதனால் அங்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்களை படக்குழுவினருடன் வந்திருந்த பவுன்சர்கள் அவசர அவசரமாக வெளியேற்றினர்.

    தகவலறிந்த ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி திருப்பதி போலீசில் புகார் கொடுத்தனர்.

    இந்நிலையில் பக்தர்கள் அவதி, போக்குவரத்து இடையூறு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி அறிவித்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    • குடிதண்ணீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
    • எனவே பேரூராட்சி, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகிலுள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் ஆடிவார திருவிழா நேற்று ெகாடி ஏற்றத்துடன் தொடங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கிறார்கள்.

    ஆனால் குடிதண்ணீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுரபிநதி மேம்பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பேரூராட்சி, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் அழகர்கோவில் மலை சாலையால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
    • முருகனின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலும், வற்றாத நூபுரகங்கை தீர்த்தமும் உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. மலைமேல் முருகனின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலும், வற்றாத நூபுரகங்கை தீர்த்தமும் உள்ளது.

    மதுரையில் சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் இங்கு நாள்தோறும் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல மலைச்சாலை உள்ளது.

    இங்கு வாகனங்களுக்கு ரூ. 100, 50 வீதமும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.15-ம் வசூலிக்கப்படுகிறது. மதுரை மக்களுக்கு அழகர்கோவில் மட்டுமே சுற்றுலாத்தலமாக உள்ளதால் நாள்தோறும் அங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    ஆனால் அங்குள்ள மலைச்சாலை கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி செப்பனிடப்படாமல் உள்ளன. இதன் காரணமாக மலைச்சாலை பெரும்பாலான இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் பஸ்கள், மோட்டார் சைக்கிளில் வரும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் சாலையை உடனே செப்பனிட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • பஸ்கள் புறப்படும் நேர அட்டவணையையும் வெளியிட வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    கார்த்திைக மாத பிறப்பை முன்னிட்டு தமிழகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனுக்கு விரதம் மேற்கொண்டு சபரிமலை சென்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கார், வேன்கள் மூலம் செல்லும் நிலை உள்ளது.

    பஸ்கள் இயக்க வேண்டும்

    சபரிமலை சீசனை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மதுரையில் தற்போது வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் குழுவாக செல்லா மல் தனியாக சபரிமலை செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    இவர்கள் தேனி மாவட்டம் கம்பம், குமுளிக்கு சென்று அங்கிருந்து கேரள அரசு பஸ்களை பிடித்து நிலக்கல்லுக்கு செல்லும் நிலை உள்ளது.

    குமுளி முக்கிய மையமாக உள்ளதால் அங்கு தமிழக பக்தர்கள் அதிக அளவில் திரளுகின்றனர். இதனால் கேரள பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. பல கிலோ மீட்டர்தூரம் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகை யில் மதுரை ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி மற்றும் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும், பஸ்கள் புறப்படும் நேர அட்டவணையையும் வெளியிட வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×