search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனரக வாகனம்"

    • கார் ஓட்டுவதற்கு இலகுரக மோட்டார் வாகனம் (LMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.
    • லாரி ஓட்டுவதற்கு கனரக மோட்டார் வாகனம் (HMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.

    இலகுரக மோட்டார் வாகன (LMV) லைசன்ஸ் வைத்திருக்கும் நபர்கள் 7,500 கிலோ எடைக்கு மிகாமல் இருக்கக்கூடிய போக்குவரத்து வாகனத்தை ஓட்டுவதற்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

    கார் உள்ளிட்ட 4 சக்கர வானங்களை ஓட்டுவதற்கு இலகுரக மோட்டார் வாகன (LMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும். அதே சமயம் லாரி போன்ற பெரிய கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு கனரக மோட்டார் வாகன (HMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.

    இலகுரக மோட்டார் வாகன லைசன்ஸ் (LMV) பெற்றவர்கள் போக்குவரத்து வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்பட்டால், விபத்து காப்பீட்டு வழங்குவதில் பல்வேறு சட்டசிக்கல்கள் இருந்து வருகிறது.

    இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது நாட்டில் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் காரணம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆகவே LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் 7,500 கிலோ எடை வரையுள்ள போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம் என்று தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பினை அடுத்து, விபத்து தொடர்பான இன்சூரன்ஸ் வழக்குகளில் காப்பீடு செலுத்துபவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்று காப்பீட்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டின.

    • சரக்குப் போக்குவரத்துகளின் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் லாரி உரிமையாளர்கள்.
    • சான்றிதழ்களை இரண்டு நாட்களுக்குள் நேரில் பெற்றுச் செல்லவில்லையென்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்,

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தொழில் வளர்ச்சி அடைந்து நாட்டின் பொருளாதாரம் சிறந்து விளங்குவதிலும், அரசின் வருவாயைப் பெருக்குவதிலும் முக்கியப் பங்காற்றுபவர்கள் கனரக உரிமையாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிப்பதோடு, சரக்குப் போக்குவரத்துகளின் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் லாரி உரிமையாளர்கள்.

    கடந்த சில நாட்களாக புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று ஆகியவற்றை பெற கனரக வாகன உரிமையாளர்களே வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களுக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும், இந்தச் சான்றிதழ்களை இரண்டு நாட்களுக்குள் நேரில் பெற்றுச் செல்லவில்லையென்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தி.மு.க. அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும், இதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும் மாநில லாரி உரிமையாளர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.

    முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, புதிதாக பதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவு சான்று மற்றும் கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று ஆகியவற்றை அங்கீகாரக் கடிதத்தின் அடிப்படையில் வழங்கவும், புதிதாக பதிவுச் சான்றிதழ் பெறும் வாகனங்களுக்கு பி ரிஜிஸ்டர் மூலம் அந்த வாகனத்திற்கான அனுமதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கனரக வாகனங்கள் செல்வ–தால் சேதம் அடைந்துள்ள–தாகவும் கிராம மக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
    • வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத் திற்கு உட்பட்ட மானாமதுரை பரமக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சவடு மணல்கள் ஏற்றி வரும் லாரிகள் அளவுக்கு அதிவேகமாக லோடுகளை ஏற்றிக் கொண்டு செல்கிறது.

    அவ்வாறு இயக்கப்படும் லாரிகளை டிரைவர்கள் அதிவேகமாக இயக்குகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தெ.புதுக் கோட்டை, கோச்சடை, சின்ன புதுக்கோட்டை, குறிச்சி, நல்லாண்டிபுரம், காரைக்குடி பகுதி கிராம மக்கள் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

    இப்பகுதியில் உள்ள சாலை புதுப்பிக்கப்பட்டு கடந்த சில வருடங்களை ஆன நிலையில் மீண்டும் கனரக வாகனங்கள் செல்வதால் சேதம் அடைந்துள்ளதாகவும் கிராம மக்கள் தரப்பில் புகார் கூறப்படு–கிறது.

    மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பிரதான தொழில் விவசாயம் என்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு சாலையில் சொல்லும் போது உயிரி–ழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சவடுண் லாரிகளின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கேரளாவுக்கு எம்சண்ட், என்சன்ட், ஜல்லி கல் ஆகிய கனிமவளங்களை இரவு நேரங்களில் கொண்டு செல்கிறார்கள்.

      திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட கணரக வாகனங்களில் கனிமவளங்களை வெட்டி ஆரல்வாய்மொழி, சுருளோடு, குலசேகரம், நெட்டா வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த வாகனங்கள் எல்லாம் இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் சென்றுவிடும். அதிவேகமாக அதிகலோடுடன் இந்த வாகனங்கள் செல்வதால் ரோடுகளில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் விரைவில் ரோடுகள் பழுதடைந்து விபத்துக்கள் நடைபெறுவது மட்டும் அல்லாமல் உயிர்பலியும் ஏற்படுகிறது.

      இந்நிலையில் நேற்று இரவு குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் குலசேகரத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அதிவேகமாக வந்த 6 கனரக வாகனங்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்து கொண்டு இருந்தது. அந்த வாகனங்களை மடக்கிபிடித்து சோதனை செய்தபோது அரசு நிர்ணயித்த எடையை விட அதிகளவு இருந்தது தெரியவந்தது உடனே 6 வாகனங்களுக்கு குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அதிரடியாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்தார்.

      • இன்று காலையில் யாரும் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
      • அதிவேகமாக கல், மண், எம் சான்ட், என் சான்ட் ஏற்றி வரும் கனரக வாகனங்களை போலிசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

      கன்னியாகுமரி:

      குலசேகரம் அருகே புலியிறங்கி பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று எம்.சான்ட் ஏற்றிக்கொண்டு அதிவேக மாக நாகர்கோவிலில் இருந்து குலசேகரம் வழியாக மார்த்தாண்டம் நோக்கி செல்லும்போது புலியிறங்கி பகுதியில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வீட்டின் காம்பவுண்ட் சுவரில் மோதி நின்றது. எப்போதும் பரபரப்பாக மக்கள் சென்றுகொண்டு இருப்பார்கள். இன்று காலை யில் யாரும் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

      கடந்த சில நாட்களுக்கு முன்தான் இந்த பகுதியில் சொகுசு கார் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே அதிவேகமாக கல், மண், எம் சான்ட், என் சான்ட் ஏற்றி வரும் கனரக வாகனங்களை போலிசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

      ×