என் மலர்
நீங்கள் தேடியது "பெட்டி கடைக்காரர்"
- புகையிலை பொருட்கள் விற்ற பெட்டி கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பெட்டிகடை உரிமையாளர் பாண்டியராஜனை(33) போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அருப்புக்கோட்டை- மதுரை ரோடு ராமலிங்கா நகரில் உள்ள பெட்டி கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 808 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெட்டிகடை உரிமையாளர் பாண்டியராஜனை(33) போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பாக்கெட்டுகளை சப்ளை செய்த சீனி என்பவரை தேடி வருகின்றனர். இதேபோல் பாலவனத்தம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது தெற்கு பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (32) என்பவர் புகையிலை பொருட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் பிரவீன்குமார் (35) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
- கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் பிரவீன்குமார் (35) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர்.