என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டா கத்தி"
- சாய்ரகு இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார்.
- ஆட்டம் பாட்டத்துடன் சாய்ரகு பட்டா கத்தியால் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சாய்ரகு (வயது 39). இவர் இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று தனது பிறந்தநாளை தஞ்சை-நாகை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கொண்டாடினார்.
அப்போது ஆட்டம் பாட்டத்துடன் சாய்ரகு பட்டா கத்தியால் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். இந்த நிலையில் இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாய்ரகுவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரெயிலில் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் சில மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
- மாணவர் ஒருவர் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் தொங்கியபடி கையில் பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு நடைமேடையில் தீப்பொறி பறக்க உரசியபடி சென்றனர்.
ஆவடி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் ரெயிலில் தினந்தோறும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்வது வருகின்றனர்.
இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி நேற்று முன்தினம் காலை மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் சில மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஆவடி இந்து கல்லூரி ரெயில் நிலையம் அருகே சென்ற போது, மாணவர் ஒருவர் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் தொங்கியபடி கையில் பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு நடைமேடையில் தீப்பொறி பறக்க உரசியபடி சென்றனர். அவரை சுற்றி நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாங்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், எங்களிடம் வம்பு செய்யாதே என கூச்சலிட்டபடி சென்றனர்.
இதனால் ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். சிலர் தங்களது செல்போனில் இந்த காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட நிலையில், கல்லூரி மாணவர்கள் ரெயிலில் பட்டா கத்தியுடன் செல்வது போன்ற காட்சிகள் வைரலானது, இது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான திருவள்ளூர், ஈக்காட்டை பவுண்ட்டை சேர்ந்த அபிஷேக் (வயது 20), சரண்ராஜ் (20), ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுசம்பந்தமாக திருநின்றவூரை சேர்ந்த மனோஜ் (23) உள்ளிட்ட மேலும் சில மாணவர்களை தேடி வருகின்றனர்.
- காரில் சென்ற என்ஜினீயரை கும்பல் பட்டா கத்தியால் தாக்கியது.
- மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). மஸ்கட் நாட்டில் பொறியாளராக உள்ளார்.
இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். செந்தில்குமார் ஆண்டுக்கு 2 முறை மதுரைக்கு வந்து செல்வது வழக்கம். சில நாட்களுக்கு முன்பு இவர் மதுரை வந்திருந்தார். மகனை பள்ளியில் விடுவதற்காக, செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் சர்வேயர் காலனிக்கு வந்தார். அதன் பிறகு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பொன்விழா நகர், ஜூப்ளி டவுன் அருகே 2 பேர் கும்பல் பட்டாக்கத்திகளுடன் அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்தவரை உறவினர்கள் மீட்டு, மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமார் கூறுகையில், "எனக்கும் சகோதரர் நவநீதகிருஷ்ணனுக்கும் முன் விரோதம் உள்ளது. அவர் என்னை ஆள் வைத்து தாக்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் செந்தில்குமாருடன் தொடர்பு உடைய சிலரிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமாரின் மனைவி சிலரிடம் ரகசியமாக பேசி வருவது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்