search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் ராணுவத்தினர்"

    • முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படை பணியாற்றுவோர், அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்குகிறார். இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படை பணியாற்றுவோர், அவர்களை சார்ந்தோர் பங்கேற்று குறைகளை மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 4 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈரோடுக்கு வருகை தந்துள்ளனர்.
    • தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், போலீசாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் 32 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

    இதனையடுத்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈரோடுக்கு வருகை தந்துள்ளனர். ஒவ்வொரு கம்பெனிலும் 80 பேர் உள்ளனர். இதை தவிர தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் 160 பேர் ஏற்கனவே வந்து விட்டனர்.

    துணை ராணுவத்தினர் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் ஈரோட்டில் 27 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசாருடன் துணை ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீசாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக போலீசார் கிழக்கு தொகுதியை தவிர பிற தொகுதியை சேர்ந்த 50 வயதுக்கு உட்பட்ட முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீசார் என 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர ஊர்க்காவல் படையினர் 150 பேர், என்.எஸ்.எஸ். மாணவர் களுக்கும் பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
    • முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: -

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது, தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

    இக் கூட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவியாக (கல்வியுதவி தொகை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2,000-மும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.4,000-மும், 9 முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.5,000-மும், 11 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.6,000-மும் உயர்த்தி வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×